மொழித்தெரிவு :
தமிழ்
English

இன்றைய ராசி பலன் (02.08.2013)

Fri, 02 Aug 2013 01:41:54 +0000

inraiya raachi palan (02.08.2013) Likemaesham paechchil inemai koodum naal. poathu vaalvil paaraaddum, pukalum aerpadum. illaththil nalla champavankal nadaiperuvatharkaana arikuri... more »

இன்றைய ராசி பலன் (02.08.2013)
7

Like

மேஷம்
பேச்சில் இனிமை கூடும் நாள். பொது வாழ்வில் பாராட்டும், புகழும் ஏற்படும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். தொழில் ரீதியாக வரவேண்டிய பணவரவொன்று வசூலாகலாம்.

ரிஷபம்
முன்னேற்றம் கூடும் நாள். வெளியூர் பயணத்தின் போது எதிர்பாராத விதமாக ஒருவரை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் மூத்தவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. உத்யோக உயர்வு கிடைக்கும்.

மிதுனம்
புண்ணிய காரியங்களுக்காகச் செலவிட்டு மகிழும் நாள். எண்ணங்கள் எளிதில் செயலாக நண்பர்கள் உங்களுக்கு உறுதுணை புரிவர். கூட்டுத் தொழிலில் சில மாற்றங்களைச் செய்ய முன்வருவீர்கள்.

கடகம்
லாபகரமான நாள். விரதம் வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள். நல்ல காரியங்கள் சிலவற்றிக்கு பிள்ளையார் சுழி போடுவீர்கள். தொலைதூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் கை கூடலாம்.

சிம்மம்
பொது வாழ்வில் புகழ் கூடும் நாள். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம். பொருளாதார விருத்தி ஏற்படும். இல்லத்தில் விருந்தினர்களின் வருகை உண்டு. வெளியுலக தொடர்பு விரிவடையும்.

கன்னி
குழப்பங்கள் நீங்கி குதூகலம் ஏற்படும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைத்து உற்சாகமடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.

துலாம்
வரவும் – செலவும் சமமாகும் நாள். வேலைப்பளு அதிகரிக்கும். வெளிவட்டார பழக்க வழக்கத்தில் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் விருப்பங்களை நிறைவேறும்.

விருச்சகம்
வாக்கு பலிதத்தால் வளம் காணும் நாள். நண்பர்கள் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்வருவர். தொழில் ரீதியான பயணமொன்று செல்ல நேரிடும். விழாக்களில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரலாம்.

தனுசு
பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வியாபார விரோதம் விலகும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். திருமண சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.

மகரம்
வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வங்கிச் சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். பிள்ளைகள் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பர். இடம், பூமியால் லாபம் கிட்டும்.

கும்பம்
திறமைகள் வெளிப்படும் நாள். இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும். தாய்வழி தகராறுகள் மாறும். பழைய வாகனத்தைக் கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்கலாமா? என்ற சிந்தனை உருவாகும்.

மீனம்
வம்பு, வழக்குகளைச் சமாளித்து வளம் காணும் நாள். சகோதர வழியில் எதிர்பார்த்த நற்பலன்கள் கிட்டும். புதிய தொழில், வியாபார நலன் கருதி எடுத்த முயற்சிகளில் சிறு தாமதம் ஏற்படலாம்.


மேலும் ஜோதிடம்

Tags : இன்றைய, ராசி, பலன், 02082013, இன்றைய ராசி பலன் (02.08.2013), inraiya raachi palan (02.08.2013)

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]