மொழித்தெரிவு :
தமிழ்
English

நண்பர்கள் தின ஸ்பெஷல் ஸ்டோரி: பள்ளி நண்பர்களே என்றும் மறக்க முடியாத நண்பர்கள்

Sun, 04 Aug 2013 02:43:11 +0000

nanparkal thina speshal sdoi: palli nanparkalae enrum marakka mudiyaatha nanparkal nanparkal illaathor illaathor, ivvulakil evarum ilar. intha ulakil ulla mikavum punethamaana oru uravu thaan nanparkal. iththakaiya nanparkal eppoathu vaendumaanaalum amaivaarkal. aanaal chiru vayathil, athilum palliyil padikkum poathu varum nanparkal enrumae... Read more »

நண்பர்கள் தின ஸ்பெஷல் ஸ்டோரி: பள்ளி நண்பர்களே என்றும் மறக்க முடியாத நண்பர்கள்
UP Date
2

நண்பர்கள் இல்லாதோர் இல்லாதோர், இவ்வுலகில் எவரும் இலர். இந்த உலகில் உள்ள மிகவும் புனிதமான ஒரு உறவு தான் நண்பர்கள். இத்தகைய நண்பர்கள் எப்போது வேண்டுமானாலும் அமைவார்கள். ஆனால் சிறு வயதில், அதிலும் பள்ளியில் படிக்கும் போது வரும் நண்பர்கள் என்றுமே மறக்க முடியாத நண்பர்களாகளே மனதில் இருப்பார்கள். பள்ளிக்கு பிறகு காலேஜில் எத்தனை நண்பர்கள் கிடைத்தாலும், இவர்களுக்கு நிகர் எவரும் இருக்க முடியாது. இதற்கு காரணம் பல இருக்கலாம். ஏனெனில் சிறு வயதில் அனைவருமே பள்ளியில் நண்பர்களுடன் சேர்ந்து செய்யக்கூடாத அட்டகாசங்களை செய்து, ஆசிரியரிடம் பல அடிகளை வாங்கியிருப்போம். மேலும் டெஸ்ட் என்று வந்தால்,

புத்தகத்தை எடுத்து படிக்கிறோமோ இல்லையோ, நண்பர்களுடன் சேர்ந்து நன்கு பிட் அடித்திருப்போம். அதுமட்டுமின்றி, வகுப்பறையில் ஆசிரியர் பாடம் எடுக்கும் போது, தூக்கம் வந்தால், நண்பர்களிடம் சொல்லிவிட்டு, பெஞ்ச்சுக்கு அடியில் எத்தனை பேர் படுத்திருப்போம். இத்தகைய சேட்டைகள் அனைத்தும் காலேஜ் வருடங்களான 2-3 வருடங்கள் மட்டுமா நடந்திருக்கும். இல்லை, இவை அனைத்தும் 12 வருட கால நிகழ்வுகள்.

அதுமட்டுமல்லாமல், பள்ளிப் பருவத்தில் கோபத்தினால் அடிக்கடி நண்பர்களுடன் சண்டைகள் போட்டுக் கொள்வோம். அதிலும் அவை அனைத்து சிறு காரணங்களாக இருக்கும். அப்போது ஈகோ என்ற ஒன்று அறவே இருக்காது. மேலும் எதையும் வாழ்நாள் முழுவதும் மனதில் வைத்துக் கொள்ளுமாறும் சண்டைகள் இருக்காது. அதிலும் அத்தகைய சண்டைகளை இன்று நினைத்தாலும்,

அந்த நண்பர்கள் மீது கோபம் வராது, மனதில் ஒருவித ஆனந்த புன்னகை மற்றும் மீண்டும் அவர்களைப் பார்த்தால், அந்த சிறு காரணத்திற்காக சிறு செல்ல சண்டைகள் போட வேண்டுமென்று தோன்றும். ஒரு சிலர் சிறுவயதில் அவ்வப்போது பள்ளிகளை மாற்றினாலும், அத்தகையவர்களுக்கும் மேற்கூறிய பள்ளிப் பருவ நிகழ்ச்சிகள் அனைத்தும் நடந்திருக்கும். சொல்லப்போனால், அத்தகையவர்களுக்குத் தான் இன்னும் நிறைய நண்பர்கள் மறக்க முடியாதவர்களாய் இருப்பார்கள். இதுப்போன்று பள்ளிப் பருவத்தில் கிடைத்த நண்பர்களைப் பற்றி சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம். மேலே சொல்லப்பட்டவைகளை படிக்கும் போது, நிச்சயம் அனைவருக்கும் அவரவர்களது பள்ளிப் பருவத்தில் நண்பர்களுடன் செய்த சேட்டைகள் அனைத்தும் ஞாபகம் வரும் என்று நினைக்கிறேன். என்ன நண்பர்களே சரிதானே! சரி, நீங்கள் பள்ளிப் பருவத்தில் உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து, என்றும் மறக்க முடியாதவாறு செய்த சேட்டையை எங்களுடனும் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளலாமே!!! அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!!!
03-friendshipday

இதையும் படித்துப்பாருங்கள்

மேலும் காதல்

Tags : நண்பர்கள், தின, ஸ்பெஷல், ஸ்டோரி, பள்ளி, நண்பர்களே, என்றும், மறக்க, முடியாத, நண்பர்கள், நண்பர்கள் தின ஸ்பெஷல் ஸ்டோரி: பள்ளி நண்பர்களே என்றும் மறக்க முடியாத நண்பர்கள், nanparkal thina speshal sdoi: palli nanparkalae enrum marakka mudiyaatha nanparkal

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]