மொழித்தெரிவு :
தமிழ்
English

சிரித்து வாழவேண்டும்

chiriththu vaalavaendum chiriththu vaalavaendum pirar chirikka

சிரித்து வாழவேண்டும்
8

எப்போதும் புன்னகையுடன் இருப்பவர்களுக்கு ஆயுள் கெட்டி என்கிறது புதிய ஆய்வு. ஆமாம்! சிரிப்பு ஆயுளில் 7 ஆண்டுகளை கூட்டுகிறதாம். அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று சிரிப்பு பற்றிய ஆய்வை நடத்தியது. சிரிப்பதை ஒரு கடமைபோல எண்ணி, குறைவாக சிரித்து வாழ்ந்தவர்கள் சராசரியாக 75 வயது வரை வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டது. பளிச்சிடும் புன்னகையுடன் மனம்விட்டு சிரித்து வாழ்ந்தவர்கள் சராசரியாக 80 வயது வரை வாழ்கிறார்கள்.

 

சிரிக்க மனமின்றி வாழ்ந்தவர்கள் 72 வயதுக்குள்ளாகவே வாழ்வை இழக் கிறார்கள். மலர்ந்த சிரிப்பானது ஆயுளை 7 ஆண்டுகள் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அசட்டு சிரிப்பு சிரிப்பவர்கள்தான் ஆரோக்கிய வாழ்வுக்கு சொந்தக்காரர்கள் என்கிறது இந்த ஆய்வு. புன்னகை செய்வது இதய வியாதிகள் ஏற்படுவதை தடுக்கவும், குறைக்கவும் செய்கிறது என்றும் தெரியவந்துள்ளது.

 

புன்னகையை பொன்னகைக்கு ஒப்பிடுவார்கள். ஆம் உடல் முழுவதும் தங்கத்தால் அணிகலன்கள் அணிந்திருந்தாலும் சிறிது புன்னகையிருந்தால்தான் பொன்னகையும் ஜொலிக்கும் என்பார்கள் நம் முன்னோர்கள். மனிதனுக்கு இயற்கை வழங்கியிருக்கும் சக்தி வாய்ந்த மருந்து சிரிப்பு என்று மருத்துவ விஞ்ஞானம் சொல்கின்றது.

 

சிரிப்பு என்பது பிறரை கேலி, கிண்டல் செய்வதால் வருவதல்ல. உங்கள் உள் மனதின் வெளிப்பாடே சிரிப்பாக வரவேண்டும். தற்போது சிரிப்பு என்பதே மறந்து போய்விட்டது. காலை முதல் இரவு வரை பரபரப்பான வாழ்க்கை முறை. இதில் மன அழுத்தம், மன உளைச்சல், பொருளாதார போராட்டம் என பல நெருக்கடிகள், தொந்தரவுகள். இதில் எங்கே நாம் சிரிப்பது என்று நினைக்கின்றனர். முதலில் போராட்டம் இல்லாத உயிர்களே இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொருவருடைய வாழ்விலும் நெருக்கடிகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.

 

இந்த நெருக்கடிகளின் தன்மை வேண்டுமானால் மாறலாம். அவற்றின் பாதிப்புகள் எல்லாம் ஒன்றுதான். இரவு படுக்கைக்கு செல்லும்முன் நினைத்துப் பாருங்கள். இன்று நாம் எத்தனை முறை சிரித்து உள்ளோம், எத்தனை முறை கோபப்பட்டுள்ளோம் என்று. இதில் சிரிப்பு என்னமோ சிக்கனமாகத்தான் இருக்கும்.

 

நாம் ஒவ்வொரு முறை சிரிக்கும்போதும் நம் ஆயுளின் அளவு அதிகரிக்கின்றது என்றார் ஒரு அறிஞர். பழங்காலத்தில் நம் முன்னோர்கள் திருவிழாக்கள் கொண்டாடியதே அனைவரும் கூடி மகிழத்தான். இயல், இசை, நாடகம் என மூன்று பிரிவுகளாகப் பிரித்து மக்களின் மனங்களை புத்துணர்வு பெறச் செய்தார்கள். நகைச்சுவை உணர்வு சினிமாவில்தான் இருக்கிறது. அந்த உணர்வுதான் அடித்தட்டு மக்களையும் இன்றும் சிரிக்க வைக்கின்றது. ஒரு மனிதன் சிரிக்கும்போது அவனது முகத்தில் 16 விதமான தசைகள் தளர்ச்சியடைகின்றன. உடலானது இறுக்கம் நீங்கி புத்துணர்வு பெறுகின்றது.

ஆனால் ஒருவர் கோபப்படும்போது 68 விதமான தசைகள் இறுக்கம் அடைகின்றன. இந்த இறுக்கம்தான் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் உடலின் இரத்தம் சூடாகின்றது. ஜீரண உறுப்புகளின் செயல்பாடு குறைகின்றது. மலச்சிக்கல் உருவாகின்றது. கோபம்தான் மனிதனின் எதிரி. ஆனால் புன்னகை நமக்கு நண்பன்.

அதற்காக கோபப்பட வேண்டிய இடத்தில் கோபத்தை காட்டாமல் இருக்கக் கூடாது. அதை அடக்கவும் கூடாது. கோபத்தை குறைக்க நகைச்சுவை உணர்வே சிறந்த மருந்தாகும். இந்த நகைச்சுவையானது ஒருவருக்கு வாய்க்குமானால் அவர்கள் வாழ்வு இனிமையாகும். அவர்களுடைய குடும்பத்திலும் மகிழ்ச்சி பொங்கும்.


மேலும் உளநலம்

Tags : சிரித்து, வாழவேண்டும், , சிரித்து வாழவேண்டும் , chiriththu vaalavaendum

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]