மொழித்தெரிவு :
தமிழ்
English

சிக்கன் புரியாணி

chikkan puriyaane thaevaiyaana poarudkal

சிக்கன் புரியாணி
10

 

தேவையான பொருட்கள்:


சிக்கன்- 1 கிலோ
பசுமதி அரிசி - 1 கிலோ
வெங்காயம் - 2
தயிர் - 1 கப்
இஞ்சி+உள்ளி(வெள்ளைபூண்டு) விழுது - 1 தே.க
மஞ்சள் தூள் - 1 தே.க
மிளகாய் தூள் - 1 மே.க
கஸு நட்ஸ் - 15
தேங்காய் பால் - 1 கப்
தேங்காய் தூள் - 1 மே.க
சின்ன சீரகம் -- 1 தே.க
ஏலக்காய் - 3
கராம்பு - கொஞ்சம்
கராம் மசாலா தூள் - 1 தே.க
மல்லி தளை - 1 கப்
எண்ணெய்/ வெண்ணெய்
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை:


* இறைச்சியை சுத்தம் செய்து, தயிர், உப்பு, தூள்கள் போட்டு கலக்கி 1 மணித்தியாலத்திற்கு ஊற வைக்கவும்.

1. வெங்காயங்களை சுத்தமாக்கி, நீள வாக்கில் வெட்டி எடுக்கவும்.

2. எரியும் அடுப்பில், ஒரு சட்டியை வைத்து, எண்ணெய் ஊற்றி சிறிது சூடாக்கவும்.

3. அதனும் மேற்கூறிய அனைத்து ஸ்பைஸயும் போடலாம். (மல்லிதூள், கராம்பு, ஏலக்க்காய்). 2 நிமிடங்களுக்கு நன்றாக கிளறவும்.

4. பின்னர் அதனுள் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

5. அதனுள் ஏற்கனவே நாம் 1மணித்தியாலம் ஊற வைத்த இறைச்சியை போட்டு 20 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

6.இப்பொழுது அரிசியை எடுத்து அரைப்பதம் வேகும் வரை உப்பு சேர்த்து அவிக்கவும். (ரைஸ்குக்கரில் போட்டால் இலகு)

7. சிறிதளவு நெய்யிலோ/ எண்ணெயிலோ அடுத்த வெங்காயத்தை பொன்னிறமாகக பொரித்தெடுக்கவும். அதே போல கஸு நட்சையும் பொரிக்கவும்.

8. இப்பொழுது 20 நிமிடம் போய், கறி என்று சொல்ல கூடிய அளவில் ஒரு உணவு சட்டியில் இருக்க வேண்டும். அதற்கும் தேங்காய் பால், கராம் மசாலாவையும் போட்டு கலக்கி, 2 நிமிடம் கொதிக்கவிட்டு சட்டியை அடுப்பில் இருந்து இறக்கவும்.

9. ஒரு தட்டையான பாத்திரத்தில் (ஒவனில் வைக்க கூடிய) பாதி சாதத்தை கொட்டி பரப்பவும்.

10. அதன் மேல் கறியில் பாதி, பின்னர் சாதம், பின்னர் கறி & இறுதியாக சாதத்தை கொட்டி பரப்பவும்.

11. அதன் மேல் பொரித்த வெங்காயம், கஸு நட்ஸ், மல்லி இலையை சேர்த்து, தேங்காய் பாலை ஊற்றவும்.

12. ஒவனில் 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

13. இப்பொழுது நன்றாக கலக்கி அவித்த முட்டையுடன் பரிமாறாலாம்.


மேலும் சமையல் கலை

Tags : சிக்கன், புரியாணி, சிக்கன் புரியாணி, chikkan puriyaane

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]