மொழித்தெரிவு :
தமிழ்
English


காமராஜர் ஆவி ..

kaamaraajar aavi .. aavikaludan paechum kalaiyil nalla anupavam enakku aerpaddapin viththiyaachamaana pala muyarchikalai choathanai adippadaiyaakach cheythu paarththu ullaen. avarril mukkiyamaana....

காமராஜர் ஆவி ..
இதுவரை உயிர் என்பது அழியாத தன்மை கொண்டது என்பதையும் அது உடலை விட்டு சென்றபின் எந்தெந்த வகையில் பயணபடுகிறது என்பதையும் என்னென்ன நிலையை அடைகிறது என்பதையும் சற்று விரிவாகவே பார்த்தோம்.  இனி உடலைத் துறந்து மேலுலகம் அடையும் உயிர் மீண்டும்தான் வாழ்ந்த பூமிக்கு ஆவி நிலையில் வருகிறதா?  அப்படி வரும் போது அதன் சுயத்தன்மை எப்படி இருக்கிறது?  தனது பூர்வஜென்ம வாசனையை அதாவது தான் வாழ்ந்த காலத்து நினைவுகளை மறக்காமல் இருக்கிறதா என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

 


ஆவிகளை அழைத்துப் பேசுவது என்பது இன்றைய காலத்தில் மட்டுமே நடைமுறையில் இருக்கிறது என்பது சரியான விஷயமாகாது.  ஆதிகாலம் தொட்டே என்பதுதான் உண்மை நிலை ஆகும்.  உதாரணமாக இராமாயணத்தில் தசரதனின் மறைவிற்குப் பிறகு அவனது ஆவி ஸ்ரீராமனிடம் வந்ததாகவும் பல கோரிக்கைகளை வைத்து ஸ்ரீராமனை வற்புறுத்தியதாகவும், வாழ்த்தியதாகவும், வழிகாட்டியதாகவும் பல இடங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

 

மஹாபாரதத்திலும் பீஷ்மன் தம்பியும் கௌரவர்களின் அதாவது திருதுராஷ்டரனின் தந்தையுமான விசித்திர வீரியனின் ஆவி பீஷ்மர் குழம்பியபோது எல்லாம் வந்து வழிகாட்டியதாகவும் குறிப்புகள் உள்ளன.  ஆக இறந்து போனவர்களிடம் இறந்து போக இருப்பவர்கள் கொள்ளும் தொடர்பு பூர்வகாலம் தொட்டே இருந்து வருகிறது என்பது புலனாகிறது. ஆவிகளைப் பற்றி ஆராய்ந்து தமிழில் முதல் முறையாக நூற்களை எழுதிய மதுரை ஆதினகர்த்தாவும், மறைமலை அடிகளும்,  ஆவி உலகத்தைப் பற்றி ஆவிகளிடமே தாங்கள் பெற்ற ஆதாரக் குறிப்புகளைக் கொண்டே புத்தகங்கள் எழுதி உள்ளது  எதைக் காட்டுகிறது என்றால் ஆவிகளின் நிலையை ஆவிகளால் மட்டும்தான் நிதர்சனமாகக் கூறமுடியும் என்பதையும் அந்தத் தகவல்கள் நூற்றுக்கு நூறு நம்பக்கூடிதாக இருக்கிறது என்பதையும் காட்டுகிறது. 

 

உதாரணமாக ஒரு மருத்துவனை மீடியமாக வைத்து ஒரு வைத்தியனின் ஆவியை அழைத்துப் பேசினால் அந்த ஆவி சொல்லும் விஷயத்தில் நமக்கு நம்பிக்கை ஏற்படுவது சற்று கடினம்.  காரணம் மீடியமான மருத்துவனின் ஆழ்மனது பேசுகிறதோ என்ற ஐயம் ஏற்படுவது இயற்கை.

 

இந்த ஐயமும் சந்தேகமும் நமக்கு வரக்கூடாது என்பதனால் ஆவிகளுடன் பேசும் கலையில் நல்ல அனுபவம் எனக்கு ஏற்பட்டபின் வித்தியாசமான பல முயற்சிகளை சோதனை அடிப்படையாகச் செய்து பார்த்து உள்ளேன்.  அவற்றில் முக்கியமான ஒரு விஷயத்தை இங்கே குறிப்பிட்டால் நன்றாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

 

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016


உலக அறிவு ஒரு துளிகூட இல்லாத ஏன் எழுத்து வாசனையே அறியாத ஒரு பாமரனை மீடியமாகப் பயன்படுத்தி உலகில் வாழ்ந்த போது பெரும் மேதையாக இருந்த ஒருவரின் ஆவியை அழைத்துப் பேசினால் மீடியத்தின் சுய எண்ணங்கள் வருகிறதா அல்லது உண்மையிலேயே ஆவிகளின் கருத்துக்கள்தான் வருகிறதா என்பதைப் பரிசோதித்துப் பார்க்க ஒரு ஆவல் என்னுள் எழுந்தது.  15 வருடங்களுக்கு முன் இதற்கான முயற்சியைச் செய்து பார்த்தேன்.  அதில் கிடைத்த வெற்றியும் திருப்தியும் பல விதத்திலும் ஊக்கம் தந்தது அதை இப்போது பார்ப்போம்.

 

மேலும் படிக்க


மேலும் பதிவுகள்

Tags : காமராஜர், ஆவி, , காமராஜர் ஆவி .., kaamaraajar aavi ..

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]