மொழித்தெரிவு :
தமிழ்
English


கடவுள் உயிர் வாழ்கிறாரா?

kadavul uyir vaalkiraaraa? kadavul uyir vaalkiraaraa? ithai naan mikavum viruppaththudan kandupidippatharku, vivaathippatharku mikavum kavanam eduththuk kolkiraen.
கடவுள் உயிர் வாழ்கிறாரா?
கடவுள் உயிர் வாழ்கிறாரா? இதை நான் மிகவும் விருப்பத்துடன் கண்டுபிடிப்பதற்கு, விவாதிப்பதற்கு மிகவும் கவனம் எடுத்துக் கொள்கிறேன். இப்பொழுதுள்ள கணக்கெடுப்பின்படி 90 சதவிகித ஜனங்கள் கடவுள் உயிரோடிருக்கிறாரென்றும், மேலான ஒரு சக்தி இருக்கிறது என்றும் நம்புகின்றனர். இருந்தாலும் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறவர்கள் மேல் அவர் உயிரோடிருக்கிறார் என்பதை வெளிப்படுத்த பொறுப்புகள் உள்ளது. என்னைப் பொறுத்தவரையில் வேறு சில காரணங்கள் உள்ளன என்று நான் நினைக்கிறேன்.



எப்படியிருந்தாலும் கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிப்பதோ நிரூபியாமல் இருப்பதோ கூடாத காரியம் நாம் கடவைள விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். விசுவாசமில்லாமல் தேவனைப் பிரியப்படுத்துவது கூடாதகாரியம். (எபி.11:16) கடவுள் விரும்பினால் அவர் இருக்கிறார் என்பதை நிரூபிக்க முடியும் அவர் அப்படிச் செய்தால் அவரை விசுவாசிப்பதற்கு ஏதுமில்லாமல் போய்விடும். (யோ. 20:29)

விசுவாசத்தினால் கடவுளை நம்பவேண்டும் என்று சொல்வதனால், அவர் இருக்கிறார் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லையென்று சொல்லிவிட முடியாது. (சங். 19:1-4) நாம் நட்சத்திரங்களைக் காண்பதிலும், அகில உலகத்தையம் காண்பதிலும், இயற்கையின் அதிசயங்களைப் கவனிப்பதிலும், சூரியன் மறைவதின் அழகை ரசிப்பதிலும் இவைகளை படைத்த ஒருவர் இருக்கிறார் என்பதைப் புரியச்செய்கிறது. இவைகள் எல்லாம் போதுமானதாக இல்லாவிட்டால், நம்முடைய இருதயங்களிலே, அவர் வாழ்கிறார் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. (பிர.3:11) நம்முடைய வாழ்கைக்குப் பின், இதைவிட மேலான ஒரு வாழ்வு இருக்கிறது என்பது தெரிகிறது. அறிவுப்பூர்வமாக ஒருவேளை இதை நாம் மறுக்கலாம். தேவபிரசன்னம் நம்மில் இருந்துகொண்டிருக்கிறது. சிலர் கடவுள் இருக்கிறார்கள் என்பதை மறுக்கிறார்கள் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. 

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

மேலும் படிக்க


மேலும் பதிவுகள்

Tags : கடவுள், உயிர், வாழ்கிறாரா, , கடவுள் உயிர் வாழ்கிறாரா? , kadavul uyir vaalkiraaraa?


Follow saalaram14 on Twitter
Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]