மொழித்தெரிவு :
தமிழ்
English


நம் உலகை அடுத்து ஏலியன்..

nam ulakai aduththu aeliyan.. chooriyamandalaththu kirakankalil inraikku muthalaay, vacheekaramaay thaeruvathu chevvaay. chila varudankal mun veenas enappadum velliyil nampoanra uyir irukkalaamo enru ennamirunthathu.

நம் உலகை அடுத்து ஏலியன்..
ஏலியன்களை ஏன் எங்கோ தேடவேண்டும். முதலில் அருகில் தேடிப்பார்க்கலாமே என்று நினைத்தால் தேடவேண்டிய இடங்கள் சில உள்ளன.

முதலில் நம் உலகம். அமேசான் காடு, ஆழ்கடல், இமாலயா, ஈஞ்சம்பாடி என பல இடங்களை, காத்து கருப்பு அடிச்சுருமேன்னு தேடாமல் விட்டுவைத்திருக்கிறோம். அவ்வப்போது பிரடேட்டர் (predator) போன்ற திரைப்படங்கள் எடுத்து இங்கெல்லாம் வேற்றுகிரக ஏலியன்ஸ் உலவலாம் என்று பூச்சாண்டி விடுகிறோம். ஆனாலும் அவகாசமிருக்கையில் ஈஞ்சம்பாடி போன்ற பகுதிகளில், அறிவியலார்த்தமான ஏலியன்ஸ், தொல்பொருள் ஆராய்ச்சி என தேடுதலுக்கு முன்னரே வேலிகட்டி பிளாட்டு போட்டு மனிதர்களை குடியேறிவிடுகிறோம்.

ஆனாலும் உலகில் தேடுவதற்கு வேரொரு முக்கிய காரணமும் இருக்கிறது. மாற்று உயிரினங்கள். இவை பற்றி தனியாக எழுதுவோம்.

நம் உலகை அடுத்து ஏலியன்ஸ்களை தேடவேண்டிய இடம் அருகில் இருக்கும் நிலா, வெள்ளி, செவ்வாய் கிரகங்கள், அப்படியே வெளியேறி பிரபஞ்சத்தில் தெக்கால வியாழனின் சந்திரன்கள் அயோ (அய்யோ இல்லை, Io) கானிமீட் (ganymede), தாண்டிப்போய் சனியின் சந்திரர்களான டைட்டன், என்சிலாடாஸ் (enceladaus) இப்படி ஒரு பட்டியல் இருக்கிறது.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

எச்.ஜி.வெல்ஸில் தொடங்கி, ஆர்தர் கிளர்க், ரே பிராட்பரி என்று பலர் நம் சூரியமண்டல கிரகங்களில், அவற்றின் சந்திரன்களில் உயிர் சாத்தியத்தை வைத்து சென்ற நூற்றாண்டில் அருமையான விஞ்ஞான புனைகதைகள் எழுதியிருக்கிறார்கள். இன்றும் ஜூப்பிட்டர் ஃபைவ், மார்ஷியன் குரோனிகிள்ஸ் போன்ற சிறுகதைகள், தொகுப்புகள் பிரசித்தம்.

சூரியமண்டலத்து கிரகங்களில் இன்றைக்கு முதலாய், வசீகரமாய் தேறுவது செவ்வாய். சில வருடங்கள் முன் வீனஸ் எனப்படும் வெள்ளியில் நம்போன்ற உயிர் இருக்கலாமோ என்று எண்ணமிருந்தது. இப்போது இதற்கு சான்ஸே இல்லை என்று செவ்வாய்க்கு கவனத்தை திருப்பியுள்ளோம். செவ்வாய் பற்றி சொல்வதற்கு பல விஷயங்கள் உள்ளது. விட்டு, ஏலியன்ஸ் சார்ந்த ஓரிரு விஷயங்களை பார்ப்போம்......

மேலும் படிக்க


மேலும் பதிவுகள்

Tags : , நம், உலகை, அடுத்து, ஏலியன், நம் உலகை அடுத்து ஏலியன்.., nam ulakai aduththu aeliyan..

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]