மொழித்தெரிவு :
தமிழ்
English

அழகாய் ஒரு கௌரவக்கொலை

alakaay oru kowravakkolai poathuvaakavae "ilam pen marma chaavu" "paridchaiyil tholvi maanavan tharkolai" poanra cheythikalil..

அழகாய் ஒரு கௌரவக்கொலை
7 பொதுவாகவே நான் "இளம் பெண் மர்ம சாவு" "பரிட்சையில் தோல்வி மாணவன் தற்கொலை" போன்ற செய்திகளில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் என்னையும் மீறி அந்த செய்தி கண்ணில் பட்ட போது ஒரு வித அதிர்ச்சி. "பூட்டிய வீட்டுக்குள் பெண் மர்ம சாவு. கொலையா என போலீஸ் விசாரனை" என்ற செய்தி என்னை அறியாமல் அங்கே இழுத்து சென்ற காரணம் தலைப்பில் "மாயிலாடுதுறை" என எழுதியிருந்ததே.

"மயிலாடுதுறை வடக்கு வீதியில் வசித்து வந்தவர் கலா என்கிற மேகலா.(வயது 59) இவர் தமிழக பள்ளி கல்வித்துறையில் கடந்த 37 வருடமாக வேலை செய்து சமீபத்தில் தான் ஓய்வு பெற்றார். திருமணம் ஆகவில்லை. தனியாகவே தனது வீட்டில் வசித்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களாக இவரது வீடு பூட்டியே கிடந்ததாலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாலும் தெருவாசிகள் போலீசுக்கு தகவல் தெரிவிக்க போலீசார் முன்னிலையில் வீட்டின் கதவு திறக்கப்பட்டு பார்த்த போது அவரது உடல் சிதைந்த நிலையில் சடலமாக கிடந்தது. பின்னர் நகராட்சி பணியாளர்கள் கொண்டு பிணத்தை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் அது கொலையாக இருக்குமோ என்கிற ரீதியில் போலீசார் தீவிர விசாரனை செய்து.... " படித்து கொண்டிருந்த நான் பேப்பரை மடக்கி வைத்து விட்டு எதிர் வீட்டை பார்த்தேன். பூட்டி இருந்தது.

நான் அந்த செய்தியை படித்து கொண்டிருந்த இடம் சம்பவம் நடந்ததாக சொல்லப்பட்ட வீட்டின் எதிரே இருக்கும் பொது நூலகம். சம்பவம் நடந்த வீடு நான் சின்ன வயதில் இருந்தே பிறந்து வளர்ந்த வீட்டின் நான்காம் வீடு. அந்த அக்காவிடம் ஏதோ ஒரு காலகட்டத்தில் டியூஷன் கூட படித்து இருக்கின்றேன். அந்த அக்கா எங்கள் ஊரில் பெண்கள் கல்லூரி வந்த ஆண்டு முதல் முதலாக டிகிரி படித்த புரட்சி பெண். படித்த உடனேயே பள்ளி கல்வித்துறையில் எழுத்தராக வேலை கிடைத்து அந்த காலத்திலேயே வேலைக்கு போன புரட்சி பெண்.

இப்படி ஏகப்பட்ட புரட்சிகளை கொண்ட அந்த அக்கா அப்போதே ஒரு பையனை காதலித்தும் புரட்சி செய்தது தான் அவங்க வீட்டுக்கு பிடிக்காமல் போனது. அந்த அக்காவுக்கு குடும்பம் என பார்த்தால் ஒரு அம்மா, ஒரு நடக்க முடியாத பாட்டி, ஒரு தம்பி, ஒரு அண்ணன். அண்ணன் என்பவர் அப்போதே குடும்பம் விட்டு பிரிந்து சென்னையில் போய் செட்டில் ஆகிவிட்டதாகவும் அவர் யாரோ ஒரு பெண்ணை காதலித்ததல் அவங்க அம்மா வீட்டை விட்டு துரத்திவிட்டதாகவும் தெருவில் பேசிக்கொள்வர். தம்பிக்காரன் பெயர் நெப்போலியன். பெய்ருக்கு ஏற்ற மாதிரி நெப்போலியன் மீது மிகுந்த பிரியம் கொண்டவன். அதல்லாம் கூட சகிச்சுப்பாங்க.

ஆனா அவன் காதலிக்க மட்டும் கூடாது தான் பார்த்து வைக்கும் பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் அவன் அம்மா பிடிவாதமாக இருந்த காரணத்தாலும், நெப்போலியன் மீது நாட்டம் அதிகம் இருந்த நெப்போலியனை எந்த பெண்ணும் விரும்பாததாலும் அவன் அம்மா பார்த்த பெண்ணையே கட்டிகிட்டு அதன் வாழ்கையை சீரழித்தான்.

ஆனாலும் அந்த அம்மாவுக்கும் அந்த வீட்டை புட்டத்தாலேயே நகர்ந்து பரிபாலனம் செய்த அந்த பாட்டிக்கும் ................

மேலும் படிக்க


மேலும் பதிவுகள்

Tags : அழகாய், ஒரு, கௌரவக்கொலை, அழகாய் ஒரு கௌரவக்கொலை, alakaay oru kowravakkolai

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]