மொழித்தெரிவு :
தமிழ்
English


கள்ள சாரயம் விற்க சிறந்த இடம்

kalla chaarayam virka chirantha idam maarkchisd kamyoonesd kadchiyin thiruvaaroor maavadda munnaneth thalaivarkalil oruvarum, maavadda cheyarkulu uruppinarum, vivachaayath tholilaalar...

கள்ள சாரயம் விற்க சிறந்த இடம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட முன்னணித் தலைவர்களில் ஒருவரும், மாவட்ட செயற்குழு உறுப்பினரும், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளருமான தோழர் ஜெ. நாவலன் (54) புதனன்று (19. 1.2011) இரவு சுமார் 7 மணி அளவில் சமூக விரோத, கள்ளச்சாராய கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் தண்டத்தோப்பு பகுதியில் கள்ளச்சாராய தொழிலை நடத்திவரும் நாராயணன் மகன் பன்னீர் செல்வம் (இவர் அப்பகுதின் திமுக தலைவர்) தூண்டுதலின் பேரில் பன்னீர் செல்வம் மகன் காளீஸ்வரன், கோவிந்தன் மகன் பிரகாஷ், பன்னீர் செல்வம் மகன் ஜீவா, நாராயணன் மகன் ராமன், சுகுமாரன் மகன் பச்சைபிள்ளை, நாராயணன் மகன் பரதன் ஆகிய ஆறு பேரும் பேரளம் காவல் சரகம் கொட்டூர் மாங்குடி பகுதியில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங் களை கொண்டு சரமாரியாக தாக்கியதுடன் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் தஞ்சம் புகுந்த அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டனர்.

சமூக விரோத கும்பலை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி தீவிரமான போராட்டங் களை தொடர்ந்து நடத்தி வந் தது. தமிழக அரசும், காவல் துறையும் சமூக விரோதிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்காத நிலையில் தோழர் நாவலன் படுகொலை செய்யப் பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு போலீஸ் சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை பிடித்து விசாரித்ததில் தோழர் ஜெ. நாவலனை கொலை செய்ய வந்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளான். இவ்வளவுக்குப் பிறகும் காவல்துறை மெத்தனமாகவே செயல்பட்டது. மாறாக, கள்ளச் சாராய கும்பலுக்கு துணை நிற்கும் வகையில் தோழர் நாவ லன் உள்ளிட்ட கட்சித் தலை வர்கள் மீதே 

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

மேலும் படிக்க


மேலும் பதிவுகள்

Tags : கள்ள, சாரயம், விற்க, சிறந்த, இடம், கள்ள சாரயம் விற்க சிறந்த இடம், kalla chaarayam virka chirantha idam

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]