மொழித்தெரிவு :
தமிழ்
English


வேண்டாம் வேண்டாம் மன அழுத்தம்!!!

vaendaam vaendaam mana aluththam!!! mana aluththamenpathu manethanudaiya udalil anraadam aerpadum nooykalaip poanra oru nooyaakum.

வேண்டாம் வேண்டாம் மன அழுத்தம்!!!

மன அழுத்தமென்பது மனிதனுடைய உடலில் அன்றாடம் ஏற்படும் நோய்களைப் போன்ற ஒரு நோயாகும். ஆனால் இது ஒரு தற்காலிக நோய் என்பது குறிப்பிடத்தக்கது. உடம்பில் ஏற்படும் நோய்களுக்கு எவ்வாறு சிகிச்சை பெற வேண்டுமோ அவ்வாறே மன அழுத்தத்திற்கும் சிகிச்சை பெற வேண்டும். மன அழுத்தம் பொதுவாக அனைவருக்கும் ஏற்படக் கூடியது. பொதுவாக நாம் அன்றாடம் செய்கின்ற நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்க முயலும் போது உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவம் முகம் கொடுப்பதில் பிரச்சினை ஏற்படும். அப்பிரச்சினைகளில் இனியும் ஈடுகொடுக்க அல்லது தீர்க்க முடியாது என்ற நிலை ஏற்படு;ம் போது அதன் விளைவாக மனதில் ஏற்படும் ஒருவகையான பின்னடைவே மன அழுத்தமெனப் பொதுவாகக் குறிப்பிடப் படுகின்றது. மனிதனுக்கு ஏற்படும் நோய்களில் 70 வீதம் முதல் 90 வீதமானவை மன அழுத்தத்தின் காரணமாகவே ஏற்படுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.


இம்மன அழுத்தம் இரு முறைகளில் எற்படலாம்.

 

1. சுற்றுப் புறச் சூழலால் அல்லது சமூகத்தால் ஏற்படக் கூடிய மன அழுத்தம்.
2. வாழ்க்கைமுறை அல்லது சிந்தனைகளால் ஏற்படக் கூடிய மன அழுத்தம்.

 

எதிர்பார்ப்புகளை அதிகமாக ஏற்படுத்திக் கொள்வதே மன அழுத்தத்திற்கு முக்கிய காரணமாகும். மனிதன் எதிர்பார்ப்புக்களைக் குறைக்குபோது மன அழுத்தம் பெருமளவில் குறைகிறது. குழந்தைகளையும் பெரியவர்களையும் ஒப்பிடும் பொழுது இதனை நன்கு விளங்கிக் கொள்ளலாம். பொதுவாக குழந்தைகள் எதிர்பார்ப்புக்களைப் பெரியளவில் கொண்டிராதவர்கள், அவர்கள் எதையும் மகிழ்வான விடயமொன்றாகவே நோக்குகின்றனர். அதன் காரணமாகவே அவர்களால் மன அழுத்தமின்றி வாழமுடிகின்றது. ஆனால் பெரியவர்கள் எதிர்பார்ப்புக்களை அதிகம் ஏற்படுத்திக் கொள்பவர்கள், அத்தோடு எதிர்பார்ப்புக்கள் கிடைக்கப் பெற்றாலும் அவற்றில் ப+ரண திருப்தி காணாதவர். இந்நிலைமை அவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்குகின்றது.

 

நவீன உளவியலாளர்களின் கருத்துப் படி இடைவிடாத வேலை, ஏமாற்றம், பயம், எரிச்சல், நிராகரிப்பு. கடின உழைப்பு. அளவுக்கதிகமான கவனம் போனற்வை மன அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு பிறப்பு, இறப்பு, திருமணம், திருமண முறிவுகள், பதவி உயர்வின்மை கடன் தொல்லை, வறுமை, வேலையின்மை, நட்பு முறிவு, காதல் தோல்வி குழந்தையின்மை போன்ற அன்றாட நடவடிக்கைகள் கூட மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அதுமாத்திரமன்றி சிலருக்கு போக்குவரத்து நெரிசல், சத்தம், போன்றவையும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகளாக அமையக் கூடும். மன அழுத்தம் பெரும் பாலும் தாமாகவே கற்பித்துக் கொண்ட தவறான சிந்தனைகளின் காரணமாகவும் தப்பபிப்பிராயங்களின் காரணமாகவும் ஏற்படுகின்றது. அதுமட்டுமல்லாது சரியான திட்டமிடலின்றி வேலைகளில் ஈடுபடாதவர்களையும் நேர முகாமை அற்றவர்களையும் மன அழுத்தம் மிக விரைவில் பிடித்துக் கொள்கிறது. மேலும் மதுபானப் பாவனை, சிகரட் பாவனை, நேரத்திற்கு சாப்பிடாமை, சரியான நித்திரையின்மை போன்றவை மன அழுத்தத்தை அதிகரிக்கம் காரணிகளாகக் கண்டரியப்பட்டுள்ளது.
அளவுக்கதிகமான கோபம், ஆவேசம் போன்றவையும் மன அழுத்தத்தின் வெளிப்பாடுகளே. அது மட்டுமல்லாது மன அழுத்தமானது பல நோய்களையும் எற்படுத்தக் கூடியது. குறிப்பாக மிக்றேன், ஆஸ்துமா, இடைவிடாத தடிமன், ஸ்ட்ரோக், இரத்த அழுத்தம், தாம்பத்திய நோய்கள், போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

 

அன்றாடம் ஏற்படுகின்ற சிறு சிறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் அதைப் பற்றிய சிந்தனையை செலுத்தும் போது சிறிய பிரச்சினைகள் பெரிய பிரச்சினையாக மாறி மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மன அழுத்தம் உள்ளவர்கள் எப்பொழுதும் தீர்மானம் எடுப்பதில் தயக்கமுடையவர்களாகவும் வேலைகளில் கவனம் குறைந்தவர்களாகவும் ஞாபக மறதி உடையவர்களாகவும், எதிர்மறை சிந்தனையுடையவர்களாகவும் தெளிவற்ற சிந்தனை கொண்டவர்களாகவும் தவறான முடிவுகள் எடுப்பவர்களாகவும் காணப்படுவார்கள்.
மன அழுத்தம் ஏற்படுவதற்கு முன் காப்பதே சாலச் சிறந்தது. அதற்கான அத்திவாரத்தை குழந்தைப் பருவத்திலிருந்து இட வேண்டும்.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

 

• குழந்தையிடத்தில் எப்போதும நேர்கனிய சிந்தனையை வளர்க்க வேண்டும்.
• எப்போதும் பிரச்சினைகளை குழந்தைகள் மத்தியில் திணிக்காமல் இருத்தல்.
• குழந்தை செய்யும் நல்ல விடயங்களை மனம் விட்டு பாராட்டுதல்.
• நகைச்சுவை உணர்வுள்ள குழந்தையாக உங்கள் குழந்தைகளை வளர்க்க முயற்சி செய்யுங்கள்.
• குழந்தைகள் எப்பொழுதும் முதன்மையாக வரவேண்டுமென எதிர்பார்க்காதீர்கள். அது தேவையற்ற அழுத்தத்தை உருவாக்கி விடும்.
• தோல்வியும் வெற்றியும் சமம் என்ற மனோநிலையை குழந்தை மத்தியில் ஏற்படுத்துங்கள்.
• குழந்தைகளுக்கு எப்போதும் முன்மாதிரியாக நடக்க முயற்சி செய்யுங்கள்.
• குழந்தைகளிடத்தில் ஏனையவர்களை ஏற்றக்கொள்ளும் மனப்பாங்கை வளருங்கள்.
• குழந்தைகளிடத்தில் நல்ல நண்பர்களிடத்தில் உறவை ஏற்பத்திக் கொள்ளத் தூண்டுங்கள்.
• எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்க கற்றுக்கொடுங்கள்.
• எப்போதும் நேரத்துக்கு இயங்க கற்றுக் கொடுங்கள்.

 

மன அழுத்தம் ஏற்படுவதனைப் தடுப்பதற்கும் மற்றும் குறைப்பதற்குமான சில வழிமுறைகள்....

 

• இரவு நேர காலத்துடன் நித்திரைக்குச் செல்வதுடன் அதிகாலையில் எழும்புதல்.
• அதிகாலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் நீரை அருந்துங்கள்.
• அன்றாடம் செய்ய இருக்கும் வேலைகளைத் திட்டமிடுவதுடன் ஒரு பத்திரிகையில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
• குறைந்தது 20 நிமிடமாவது சிறிய உடற்பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.
• அந்தந்த வேலையை அந்தந்த நேரத்தில் செய்து முடித்துக் கொள்ளுங்கள்.
• தொழிலுக்கு, பாடசாலைகளுக்கு செல்பவர்கள் 10 நிமிடங்கள் முன்கூட்டியே சென்றுவிடுங்கள்.
• சிகரட் குடிப்பதனை முடியுமானால் நிறுத்திவிடுங்கள். அது மன அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன் ஆண்மையைக் குறைக்கும்.
• எவ்விடயத்திலும் நெகிழ்ந்து(Flexible) செல்லக் கூடியவராக இருங்கள்.
• நடக்காத விடயங்களை வைத்து சிந்தித்துக் கொண்டிருப்பதை விட நடந்த விடயங்களை வைத்து மகிழ்வுறுங்கள்.
• ஓய்வெடுக்கும் போது தொலைபேசியை அணைத்து விட்டு எந்த தொந்தரவுமின்றி ஓய்வெடுங்கள்.
• செய்ய இயலாத விடயங்களை வைத்து சிந்திக்காதீர்கள்.
• எளிமையாக வாழப் பழகிக் கொள்ளுங்கள்.
• நண்பர்களுடன் உற்சாகமாக இருக்க பழகிக் கொள்ளுங்கள்.
• அந்தந்த பொருட்களை அந்தந்த இடத்தில் வைக்க பழகிக் கொள்ளுங்கள்.
• கவலைகளையும் பிரச்சினைகளையும் ஏனையவர்கள் இடத்தில் முடியுமான அளவு பகிர்ந்து கொள்ளுங்கள்.
• பிறருக்கு ஏதேனும் உதவிகளைச் செய்யுங்கள்.
• தினந்தோறும் மனதை மகிழ்விக்கக் கூடிய ஏதேனும் ஒரு செயலை செய்யப் பழகிக் கொள்ளுங்கள்.
• அடுத்தவர்களை நன்றாகப் புரிந்த கொள்ளுங்கள்.
• ஏனையோரைப் பற்றி குறை கூறுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
• எப்போதும் தன்நம்பிக்கையுடையவராக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
• எதிலும் நேர்(Positive) சிந்தனையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
• மன்னிக்கும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளுங்கள்.
• ஏனையோரை காயப்படுத்தி மனதைப் புண்படுத்தி விடாதீர்கள்.
• நண்பர்களோடு நேரடியாகவோ அல்லது முடியுமானால் தொலைபேசியினூடாகவோ கதைத்துக் கொள்ளுங்கள்.
• செய்த பணிகளில் அல்லது வேலைகளில் திருப்தி காணுங்கள்.
• ஏதேனும் விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள்.


மேலே குறிப்பிடப்பட்டவற்றைக் கடைபிடித்தால் மன அழுத்தம் ஏற்படுவதிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடிவதோடு எப்போதும் எவ்விடயத்தையும் தோல்வி மனப்பாங்குடன் பார்க்காமல் ஒரு சவாலாகப் பார்க்க வேண்டும்.


மேலும் பொதுக் கட்டுரைகள்

Tags : வேண்டாம், வேண்டாம், மன, அழுத்தம், வேண்டாம் வேண்டாம் மன அழுத்தம்!!!, vaendaam vaendaam mana aluththam!!!

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]