மொழித்தெரிவு :
தமிழ்
English

வா பாப்பா...!!!

vaa paappaa...!!! pallikkoodam poakalaam vaa paappaa... nalla paadankalaip

வா பாப்பா...!!!
9

பள்ளிக்கூடம் போகலாம் வா பாப்பா...!
நல்ல பாடங்களைப் படிக்கலாம் வா பாப்பா...!
புது நண்பர்கள் கிடைப்பர் வா பாப்பா...!
புதிய உலகத்தைக் காண வா பாப்பா..!

 

வீட்டில் இருந்தது போதும் பாப்பா...!
விரைந்து நீ எழுந்து வா பாப்பா...!
ஒழுங்காய் தினமும் பள்ளி சென்று...!
ஒழுக்கமதை கற்போம் வா பாப்பா...!

 

தாய் தமிழ் கற்கலாம் வா பாப்பா...!
தரணி மீதில் நடந்திட வா பாப்பா...!
இலக்கணத்தை கற்போம் வா பாப்பா..!
இலக்கணமாய் வாழ்வோம் வா பாப்பா..!

 

இலக்கியம் கற்போம் வா பாப்பா...!
இயல்பாய் வாழ்வோம் வா பாப்பா....!
இயற்கையை அறிவோம் வா பாப்பா...!
அதனுடன் இயைவோம் வா பாப்பா..!

 

அயல் மொழி கற்போம் வா பாப்பா...!
அகிலத்தை அறிவோம் வா பாப்பா..!
கணிதம் படிப்போம் வா பாப்பா..!
கணக்காய் வாழ்வோம் வா பாப்பா..!

 

அறிவியல் படிப்போம் வா பாப்பா...
அறிவைப் பெருக்கொவோம் வா பாப்பா..!
வரலாறு படிப்போம் வா பாப்பா..!
வாழ்ந்து காட்டுவோம் வா பாப்பா..!

 

புவியியல் படிப்போம் வா பாப்பா..!
பல புதிர்களை அவிழ்ப்போம் வா பாப்பா..!
வானியல் படிப்போம் வா பாப்பா..!
வானில் நடப்போம் வா பாப்பா..!

 

கடலியல் படிப்போம் வா பாப்பா..!
கருத்தாய் வாழ்வோம் வா பாப்பா..!
உடலியல் படிப்போம் வா பாப்பா..!
நோயின்றி வாழ்வோம் வா பாப்பா..!

 

கல்வி கற்க வா பாப்பா..!
கற்பூரமாய் நீ படி பாப்பா..!
பாடம் படிக்க வா பாப்பா..!
பகுத்தறிவை வளர்க்க வா பாப்பா..!


மேலும் சிறுவர் பாடல்

Tags : வா, பாப்பா, வா பாப்பா...!!!, vaa paappaa...!!!

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]