மொழித்தெரிவு :
தமிழ்
English

யாகங்கள்

Wed, 09 Oct 2013 21:05:51 +0000

yaakankal chiththarkalum, yoakikalum palvaeru yaakankal cheythu thava valimaikal perranar. murkaala aracharkaloa pala yaakankal cheythu thankal iraajjiyankalaiyum, padai valimaikalaiyum perukkik kondanar. yaakankalaal ivai maddumalla, perutharkariya piravip paerum pera mudiyum. vaalkkaiyil yoakikal maddumalla, illaraththaarum kadaippidikka vaendiya chila yaakankal undu. illaraththil vaalum ovvooru varum thinamum cheyyavaendiya 5 vitha yaakankalai keelk kandavaaru periyoarkal vakuththullanar. 1.thaevayaakam, 2.pootha yaakam, 3.manetha yaakam, 4.piramma [...]

யாகங்கள்
11

சித்தர்களும், யோகிகளும் பல்வேறு யாகங்கள் செய்து தவ வலிமைகள் பெற்றனர். முற்கால அரசர்களோ பல யாகங்கள் செய்து தங்கள் இராஜ்ஜியங்களையும், படை வலிமைகளையும் பெறுக்கிக் கொண்டனர். யாகங்களால் இவை மட்டுமல்ல, பெறுதற்கரிய பிறவிப் பேறும் பெற முடியும். வாழ்க்கையில் யோகிகள் மட்டுமல்ல, இல்லறத்தாரும் கடைப்பிடிக்க வேண்டிய சில யாகங்கள் உண்டு.

இல்லறத்தில் வாழும் ஒவ்வொரு வரும் தினமும் செய்யவேண்டிய 5 வித யாகங்களை கீழ்க் கண்டவாறு பெரியோர்கள் வகுத்துள்ளனர்.

1.தேவயாகம், 2.பூத யாகம், 3.மனித யாகம், 4.பிரம்ம யாகம், 5.பிதுர் யாகம்.

தேவ யாகம்:

ஒவ்வொருவரும் தினம் ஏதாவது ஒரு தெய்வத் திருமேனியைத் தரிசித்து வணங்க வேண்டும்.

பூத யாகம்:

ஒவ்வொருவரும் தினமும் ஒரு பிராணிக்கு (பசு, பூனை, காகம், நாய், எறும்பு, குருவி, குரங்கு, பட்சி ஆகிய ஏதாவது ஒர் உயிரினத் துக்கு) ஒருபிடி உணவு அளிக்க வேண்டும்.

மனித யாகம்:

தினமும் ஒரு ஏழை மனிதனுக்கு உணவளித்து வாழ்தல் மனித யாகம்.

பிரம்ம யாகம்:

அறிவை கொடுத்த ஆசானையும் ஞானம் கொடுத்த ரிஷியையும், தெளிவை கொடுத்த பெரியவர்களையும் மதித்து நடப்பது
பிரம்ம யெக்கியமாகும்.

பிதுர் யாகம்:

நம்முடைய காலஞ்சென்ற மூதாதையர்களுக்கு அர்ப்பணம் செய்தல், தீபம் ஏற்றல் முதலியவற்றைத் தவறாமல் செய்வது பிதுர்யாகம்.

யாகம் செய்வதனால் பயன் உண்டா? என்றும் பஞ்சயெக்கியம் என்பது என்ன? என்றும் பலருக்கு தெரியாது தெரியாததை புரிய வைப்பது தானே நம் வேலை

யாகம் என்ற வார்த்தையின் பொருள் அர்ப்பணித்தல் ஆகும். நம்மிடம் உள்ளபொருட்களில் புனிதமானவைகள் என கருத கூடியதை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதேயாகம் ஆகும். அம்மா சமைத்த உணவை எடுத்து அம்மாவுக்கே குழந்தை ஊட்டினால் தாய் சந்தோஷப்பட மாட்டாளா? அதே போல் இறைவன் படைத்ததை இறைவனுக்கே கொடுக்கிறோம். அம்மா கட்டி பிடித்து முத்தம் தருவது போல் கடவுளும் நமது பிராத்தனைக்கு எதாவது தருவார். அதனால் தான் வேதங்கள் யாகம் செய்வதை தர்மகாண்டத்தில் பேசுகிறது. பலன் நோக்கும் யாகமாக இருந்தாலும் பலன் நோக்காயாகமாக இருந்தாலும் யாகத்தை செய்பவன் நிச்சயம் சிறப்பு அடைகிறான்.

நெருப்பை வளர்த்து நெய்யை விட்டு, பொருட்களை ஆகுதிகளாக போடும்  யாகத்தில் விஞ்ஞான பூர்வமான பலனும் உண்டு. ஒவ்வொரு நாட்டிலும்,  தொழிற்சாலைகளிலும் சிறப்பான யாக குண்டங்களை அமைத்து நியதிப்படி யாகம் செய்யப்பட்டிருக்குமேயானால் இன்று பூமி பந்து உஷ்ணம் அடைந்திருக்கவும் முடியாது. சுற்றுபுறச் சூழல் கெட்டுருக்கவும் செய்யாது.

இனி பஞ்சயெக்கியம் பற்றிப் பார்ப்போம்:

தினசரி கடவுளை வழிபடுவது தெய்வயெக்கியமாகும். உடல் தந்த பெற்றோரை அன்றாடம் வணங்குவது பிதுர்யெக்கியம் ஆகும். நலிந்தோருக்கு தொண்டு செய்வது மனுஷ யெக்கியமாகும்.

பச்சை புல்லையும், படர்ந்து நிற்கும் கொடியையும், ஓங்கி நிற்கும் மரத்தையும் கள்ளமில்லாத பறவைகளையும், களங்கமில்லாத விலங்குகளையும் காப்பது பூதயெக்கியமாகும்.

அறிவை கொடுத்த ஆசானையும் ஞானம் கொடுத்த ரிஷியையும், தெளிவை கொடுத்த பெரியவர்களையும் மதித்து நடப்பது பிரம்ம யெக்கியமாகும்.

இந்த ஐந்து யாகத்தையும் எந்த செலவும் இல்லாதுயார்வேண்டுமானாலும் செய்யலாம். அப்படி செய்பவன் மட்டும் தான் மனிதன் ஆவான்.

இதையும் படித்துப்பாருங்கள்

மேலும் ஜோதிடம்

Tags : யாகங்கள், யாகங்கள், yaakankal

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]