மொழித்தெரிவு :
தமிழ்
English


ஜோக்ஸ்-06

joks-06 ammaa: mane, enna elutharae? mane: thampi paappaavukku oru kaditham elutharaen

ஜோக்ஸ்-06

1.அம்மா: மணி, என்ன எழுதறே?

மணி: தம்பி பாப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதறேன்.

அம்மா: உனக்குத் தான் எழுதத் தெரியாதே..!

மணி: அதனாலென்ன? அவனுக்கு மட்டும் படிக்கத் தெரியுமா என்ன!

2.“ஏங்க! இன்னிக்கு கிளைமேட் நல்லா இருக்கு. நான் பையனைக் கூட்டிக்கிட்டு மிருகக்காட்சி சாலைக்குப் போகலாம்னு இருக்கேன்!”

“எதுக்கு? அவங்களுக்கு தேவைப்பட்டா அவங்களே வந்து கூட்டிக்கிட்டு போகட்டும்”

3.அறிவியல் ஆசிரியர்: மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஐன்ஸ்டீன் மேல், மரத்திலிருந்து ஆப்பிள் ஒன்று விழுந்து. இதன் மூலவே அவர் புவிக்கு ஈர்ப்பு சக்தி உண்டு என்பதை கண்டுபிடிச்சார். இதிலிருந்து உங்களுக்கு என்ன தெரியுது?

மாணவர்கள்: எங்களைப் போல இப்படி வகுப்பறையில் உக்கார்ந்துக் கொண்டிருந்தால், அவரால ஒன்னையும் உருப்படியா கண்டுபிடிச்சிருக்க முடியாது -ன்னு தெரியுது சார்.

4.ஆசிரியர்: தம்பி, இந்த பரீட்சையில நீ 90% மார்க் எடுக்கனும்.

மாணவன்: இல்ல சார், நான் 100% மார்க் வாங்குவேன்

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

ஆசிரியர்: ஜோக் அடிக்காதே.....

மாணவன்: கொய்யால.................... யாரு மொதல்ல ஜோக் அடிச்சது??

5.ஆசிரியர்: நான் உனக்கு முதலில் இரண்டு கோழி தருகிறேன். அடுத்து இரண்டு கோழி தருகிறேன். இப்ப உன்கிட்டே எத்தனை கோழி இருக்கும்?

மாணவன்: 5 இருக்கும் சார்!

ஆசிரியர்: நல்லா கேளு! முதல்லே இரண்டு கோழி தர்றேன். மறுபடியும் இரண்டு தர்றேன். இப்ப உன்கிட்டே எவ்வளவு இருக்கும்?

மாணவன்: 5 தான் சார்!

ஆசிரியர் (பெருமூச்சு விட்டவாறு): உஷ்! சரி, இதுக்குப் பதில் சொல்லு. முதல்லே இரண்டு ஆப்பிள் தர்றேன். அடுத்து ரெண்டு ஆப்பிள் தர்றேன். மொத்தம் எத்தனை ஆப்பிள் இருக்கும்?

மாணவன்: 4 சார்.

ஆசிரியர்: குட்!. இப்ப, 2 கோழி தர்றேன். பிறகு 2 கோழி தர்றேன். உன்கிட்டே மொத்தம் எத்தனை கோழி இருக்கும்?

மாணவன்: 5 சார்!

ஆசிரியர்: அது எப்படிறா 5 கோழி வரும்?

மாணவன்: என்கிட்டே ஏற்கனவே ஒரு கோழி இருக்கு சார்.

ஆசிரியர்: !!!!


மேலும் நகைச்சுவை

Tags : ஜோக்ஸ், 06, ஜோக்ஸ்-06, joks-06

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]