மொழித்தெரிவு :
தமிழ்
English

அக்டோபர் மாத‌ எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்களும் அதிர்ஸ்ட குறிப்புக்களும்!

Sun, 06 Oct 2013 05:38:11 +0000

akdopar maatha‌ e‌n jo‌thida‌p pala‌nkalum athirsda kurippukkalum! 2013 aa‌m aa‌ndu akdopar maatha‌th‌thi‌rkaana e‌n jo‌thida‌p pala‌nkalum, athirsda kurippukkalum.    1, 10, 19, 28 aakiya thaethikalil pirantha unkalukku, intha maathaththil ethilum makilchchiyundu. puthu vaelai kidaikkum. veedu kadduvathu, vaankuvathu poanra muyarchikal palithamaakum. appaavudanaana pinakku neenkum. kudumpaththil amaithi nelavum. arachu kaariyankalil anukoolamaana nelai kaanappadum. aanaal manaivikku vaelaichsumai athikarikkum. maathaththin maiyappakuthiyilirunthu unkalin manamum, chinthanaiyum maeloankum. piraaththanaikalai neraivaerruveerkal. [...]

அக்டோபர் மாத‌ எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்களும் அதிர்ஸ்ட குறிப்புக்களும்!
39

2013 ஆ‌ம் ஆ‌ண்டு அக்டோபர் மாத‌த்‌தி‌ற்கான எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்களும், அதிர்ஸ்ட குறிப்புக்களும். 

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு, இந்த மாதத்தில் எதிலும் மகிழ்ச்சியுண்டு. புது வேலை கிடைக்கும். வீடு கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். அப்பாவுடனான பிணக்கு நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். ஆனால் மனைவிக்கு வேலைச்சுமை அதிகரிக்கும்.

மாதத்தின் மையப்பகுதியிலிருந்து உங்களின் மனமும், சிந்தனையும் மேலோங்கும். பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளிமாநிலத்தினர், வெளிநாட்டினரால் ஆதாயம் உண்டு. கல்யாணம் ஏற்பாடாகும். வி.ஐ.பி.கள் சிலரின் ஆலோசனையால் சொத்துப் பிரச்சனைகள் சுமுகமாக முடியும். பணவரவு திருப்தி தரும்.

அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வராது என்றிருந்த பாக்கிகள் வந்து சேரும். புதிய சலுகைகளால் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவீர்கள்.

உத்‌தியோகத்தில் வேலைச்சுமை கொஞ்சம் அதிகரித்தாலும் முகம் சுளிக்காமல் பாருங்கள். கலைத்துறையினரே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தாழ்வுமனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை துளிர்விடும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள்: 1, 9, 12, 10, 21
அதி‌ர்ஷ்ட எண்கள்: 3, 7
அதி‌ர்ஷ்ட நிறங்கள்: பிங்க், சில்வர்கிரே
அதி‌ர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

————————————————————————————————————

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் அலைச்சல், டென்ஷன், ஏமாற்றம், தூக்கமின்மை விலகும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

பூர்வீகச் சொத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். ஆன்மீகத்தில் மனம் லயிக்கும். சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் முன்கோபம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் உரசல் போக்கு வந்துப் போகும். பேச்சாலேயே பிரச்சனைகள் வரும்.

அரசியல்வாதிகளே! பொதுக்கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள். கன்னிப் பெண்களே! எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத வேலைகள் முடியும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து சின்ன சின்ன யுத்திகளை கையாளப்பாருங்கள். பணியாளர்களிடம் கண்டிப்பாக இருங்கள்.

உத்‌தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். அலுவலக விஷயங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். கலைத்துறையினரே! பரபரப்புடன் காணப்படுவார்கள். அனுபவ அறிவை பயன்படுத்த வேண்டிய மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள்: 2, 11, 15, 16, 25
அதி‌ர்ஷ்ட எண்கள்: 5, 8
அதி‌ர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், ப்ரவுன்
அதி‌ர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

——————————————————————————————————————-

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த மாதத்தில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டு. கல்யாண விஷயங்களை நல்ல விதத்தில் பேசி முடிப்பீர்கள். சிலர் வீடு கட்டத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.

முற்பகுதியில் வீண் விமர்சனங்களை தவிர்க்கப்பாருங்கள். எதிலும் ஒருவித தயக்கம், தடுமாற்றம் வந்து நீங்கும். உடன்பிறந்தவர்களை அனுசரித்துப் போங்கள். தவிர்க்க முடியாத செலவுகள் அதிகமாகும். சித்தர்களைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சியுண்டு. நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள்.

அரசியல்வாதிகளே! அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். கன்னிப் பெண்களே! புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். வியாபாரத்தில் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பங்குதாரர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும்.

உத்‌தியோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். கலைத்துறையினரே! உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். சகிப்புத் தன்மையால் சாதிக்கும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள்: 3, 9, 10, 12, 27
அதி‌ர்ஷ்ட எண்கள்: 1, 9
அதி‌ர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, இளம்சிவப்பு
அதி‌ர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

—————————————————————————————————————-

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாததத்தில் இழப்புகள், எதிர்ப்புகளை எளிதாக சமாளிப்பீர்கள். தெய்வ வழிபாடு அதிகரிக்கும். பழைய பிரச்சனைகள் தீரும். சொத்து சேர்க்கை உண்டு. பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். வேற்றுமதத்தினர், மொழியினரால் ஆதாயம் உண்டு.

அரசு காரியங்கள் விரைந்து முடியும். என்றாலும் மனைவியுடன் கருத்து மோதல்கள் வரும். உறவினர்களின் வருகையுண்டு. நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். எதிர்பார்த்த வகையில் உதவியுண்டு. அண்டை வீட்டாரின் ஆதரவு பெருகும்.

அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் தலையிடாமலிருப்பது நல்லது. கன்னிப்பெண்களே! நிஜம் எது நிழல் எது என்பதை உணர்வீர்கள். நீங்கள் நினைத்தது நிறைவேறும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். கடையை மாற்றம் செய்வீர்கள். வேலையாட்களின் தொந்தரவு குறையும்.

உத்‌தியோகத்தில் உங்கள் திறமையை சோதித்துப் பார்த்த மேலதிகாரி இனி பாராட்டுவார். கலைத்துறையினரே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். எதிர்ப்புகளை கடந்து ஏற்றம் பெறும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள்: 4, 8, 15, 17, 26
அதி‌ர்ஷ்ட எண்கள்: 6, 8
அதி‌ர்ஷ்ட நிறங்கள்: வெளிர்நீலம், கிரே
அதி‌ர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி

——————————————————————————————————–

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் நினைத்தது நிறைவேறும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயமுண்டு. மகளுக்கு திருமணம் செய்ய பல முயற்சிகள் எடுத்தும் தடைபட்டு வந்ததே! இனி கல்யாணம் நடக்கும்.

அவ்வப்போது எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து வருந்தாதீர்கள். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து பழைய பிரச்சனைக்கு தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குழந்தை பாக்யம் உண்டு. புது பதவிகளும், பொறுப்புகளும் தேடி வரும். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள்.

அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடம் பரிசீலிக்கும். கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆலோசனைகள் உதவிகரமாக இருக்கும். போராடி நல்ல நிறுவனத்தில் வேலையில் அமர்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் தேவையறிந்து புது சரக்குகளை கையாளுவீர்கள்.

உத்‌தியோகத்தில் மேலதிகாரி புகழ்ந்து பேசுவார். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். கலைத்துறையினரே! பழைய வாய்ப்புகள் மீண்டும் தேடி வரும். வசீகரப் பேச்சாலும், வளைந்து கொடுப்பதாலும் சாதிக்கும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள்: 5, 14, 15, 23, 24
அதி‌ர்ஷ்ட எண்கள்: 2, 4
அதி‌ர்ஷ்ட நிறங்கள்: க்ரீம்வெள்ளை, ஆரஞ்சு
அதி‌ர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

————————————————————————————————————-

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவு உண்டு. கல்யாண பேச்சு வார்த்தைகள் நல்ல விதத்தில் முடியும். மனைவி வழி உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.

பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். அரசியல் தலைவர்கள், ஆன்மிகவாதிகள் உதவுவார்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். மாதத்தின் மையப்பகுதியில் அலர்ஜி, கை, கால் வலி, சளித் தொந்தரவு, தொண்டை புகைச்சல் வந்துச் செல்லும். தங்க நகைகள் இரவல் வாங்குவதை தவிர்க்கவும்.

அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலில் ஆர்வம் காட்டாதீர்கள். கன்னிப் பெண்களே! நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கூடுதல் மொழி கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் இழந்த லாபத்தை மீண்டும் பெறுவீர்கள். வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள்.

உத்‌தியோகத்தில் வேலைச்சுமை ஒரு பக்கம் அதிகரித்தாலும் மற்றொரு பக்கம் உயரதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கலைத்துறையினரே! எதிர்பார்த்த வாய்ப்புகள் தேடி வரும். விடாமுயற்சியால் இலக்கை எட்டும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள்: 6, 8, 17, 24
அதி‌ர்ஷ்ட எண்கள்: 3, 5
அதி‌ர்ஷ்ட நிறங்கள்: மெரூண், பழுப்பு
அதி‌ர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

————————————————————————————————————-

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் எதிர்பார்த்ததெல்லாம் எளிதில் முடியும். குடும்பத்தில் நல்லது நடக்கும். எந்த பதிலும் வராமலிருந்த வரன் வீட்டாரிடமிருந்து நல்ல செய்தி வரும். வாகனத்தின் பழுதான பாகங்களை மாற்றி புதிதாக்குவீர்கள்.

சிலர் வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். வீடு வாங்குவதற்கு வங்கி லோன் கடன் கிடைக்கும். சொந்த ஊரில் செல்வாக்குக் கூடும். என்றாலும் பழையக் கடனை நினைத்து அவ்வப்போது கவலைப்படுவீர்கள். மாதத்தின் முற்பகுதியில் உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள்.

சொத்து விவகாரங்களில் சுமுகமான தீர்வு கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். அரசியல்வாதிகளே! பரபரப்புடன் காணப்படுவார்கள். சாகாக்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். கன்னிப் பெண்களே! பெற்றோரை கலந்தலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள்.

வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். வேலையாட்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். உத்‌தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சக ஊழியர்களுடன் இருந்து வந்த கசப்புணர்வுகள் விலகும். கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். தொலை நோக்குச் சிந்தனையால் வெற்றி பெறும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள்: 7, 6, 20, 15, 24
அதி‌ர்ஷ்ட எண்கள்: 4, 7
அதி‌ர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், ஊதா
அதி‌ர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி

——————————————————————————————————————-

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். உடல் ஆரோக்யம் சீராகும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும்.

பிள்ளைகளின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதரிக்கு திருமணம் நிச்சயமாகும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் குறையும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். என்றாலும் தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. புது நண்பர்கள் அறிமுகமாவார்கள்.

சொந்த-பந்தங்களிடையே கலகலப்பாகப் பேசி மகிழ்வீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் அரசாங்க விஷயம் தாமதமாக முடியும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளே! கட்சி தலைமையால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.

வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். போட்டியாளர்களை சமாளிப்பீர்கள். கூட்டுத் தொழிலில் பாக்கிகள் வசூலாகும். உத்‌தியோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். மூலை பலத்தால் முன்னேறும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள்: 8, 5, 6, 23, 26
அதி‌ர்ஷ்ட எண்கள்: 5, 9
அதி‌ர்ஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
அதி‌ர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

———————————————————————————————————-

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த மாதம் சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள். அவ்வப்போது டென்ஷன், நரம்புக் கோளாறு வந்து போகும்.

உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். தந்தையாரின் உடல் நிலை சீராகும். அரசால் ஆதாயம் அடைவீர்கள். வீடு, மனை வாங்குவதற்கான சூழ்நிலை சாதகமாக அமையும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் வாகனத்தில் கவனம் தேவை.

உடன்பிறந்தவர்களை நினைத்து வருந்துவீர்கள். சொத்து விவகாரங்களில் அவசரம் வேண்டாம். வேற்று மதத்தினரால் நன்மையுண்டு. அரசியல்வாதிகளே! கட்சித் தலைமைக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். காதல் விவாரகத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

வியாபாரத்தில் போட்டிகள் குறையும். வேலையாட்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்‌தியோகத்தில் சக ஊழியர்களிடம் அன்பாகப் பேசுவதாக நினைத்து அந்தரங்க விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கலைத்துறையினரே! இழந்த புகழை மீண்டும் பெற எதார்த்தமான படைப்புகளை கொடுங்கள். முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதை உணரும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள்: 9, 1, 3, 12, 21
அதி‌ர்ஷ்ட எண்கள்: 2, 6
அதி‌ர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, வெள்ளை
அதி‌ர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி

——————————————————————————————————–


மேலும் ஜோதிடம்

Tags : அக்டோபர், மாத‌, எ‌ண், ஜோ‌திட‌ப், பல‌ன்களும், அதிர்ஸ்ட, குறிப்புக்களும், அக்டோபர் மாத‌ எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்களும் அதிர்ஸ்ட குறிப்புக்களும்!, akdopar maatha‌ e‌n jo‌thida‌p pala‌nkalum athirsda kurippukkalum!

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]