மொழித்தெரிவு :
தமிழ்
English


வாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி?

Tue, 4 Mar 2014 11:09:12
vaay thurnaarraththai illaamal thavirppathu eppadi? vaay thur­naarram en­pathu neenkal paechum­poathu un­ka­lukku theri­yaathu ethiril irup­pavan mookkai moodum­poathu thaan un­ka­lukkae theri­ya­varum...
வாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி?

கவுண்­ட­மணி: என்­னடா எலி செத்த நாத்தம் அடிக்­குது?

செந்தில்: அது­வாண்ணே... ரொம்ப நாள் கழிச்சு இன்­னைக்கு தான் பல்லு விலக்­கினேன்.

கவுண்­ட­மணி: அட பேரிக்கா மண்­டையா... தினம் பல்லு விலக்­காம என்­னைக்­கா­வது ஒரு நாள் பல்லு விலக்­கினா இப்­படி தாண்டா நாறும்.சாக்­க­டைய கிளறி விட்ட மாதிரி நாறுது தூரப்­போடா...

இப்­படி யாரா­வது உங்­களை பார்த்து சொன்னால் எப்­படி இருக்கும்? இந்த நிலை உங்­க­ளுக்கு வராம இருக்­க­னும்னா நான் சொல்­றதை நல்லா கேட்­டுக்­குங்க...

வாய் துர்­நாற்றம் என்­பது நீங்கள் பேசும்­போது உங்­க­ளுக்கு தெரி­யாது எதிரில் இருப்­பவன் மூக்கை மூடும்­போது தான் உங்­க­ளுக்கே தெரி­ய­வரும்.

முத்தம் கொடுக்க சென்றால் மனைவி அல்­லது காதலி முகத்தை திருப்பிக் கொண்டால் அதற்கு காரணம் வாய் துர்­நாற்றம் தான். நிதா­னமாக இதை படிங்க. இல்­லைன்னா முதல் முத்தம் கடைசி முத்­த­மாக ஆகி­வி­டப்­போ­கி­றது.

வாய் துர்­நாற்­றத்­துக்­கான கார­ணங்கள்:

சரி­யாக, முறை­யாக பல் விலக்­கா­தது, சொத்தை பற்கள், புகை பிடித்தல், குடிப்­பது, புகை­யிலை பொருட்கள் மெல்­லு­வது,வெற்­றிலை பாக்கு, பான்­பராக் பழக்­கங்கள், இரவில் நீண்ட நேரம் கண் விழித்­தி­ருப்­பது, வாய் உலர்ந்­து­ போ­வதால், காலையில் பல் துலக்­காமல் பெட் கோப்பி குடிப்­பது, பல் செட்டை முறை­யாக பரா­ம­ரிக்­கா­தது. சில நோய்­க­ளாலும் வாய் துர்நாற்றம் ஏற்­படும்.சுவாசக் குழாய் பாதிப்பு, நிமோ­னியா , ப்ராங்­கைட்டிஸ் இசர்க்­கரை நோய், ஈறு நோய், குடல் நோய் மற்றும் சிறு­நீ­ரக கோளா­றுகள்.

எப்­படி தடுப்­பது?

* காலை மாலை இரண்டு வேளையும் நன்­றாக பல் துலக்க வேண்டும்.

* சாப்­பிட்ட பின்னர் நன்­றாக வாய் கொப்­ப­ளிக்க வேண்டும் ஜமவுத் வாஷ், உப்பு தண்­ணீரில் வாய் கொப்­ப­ளிக்­கலாம், ஒயில் புல்லிங் செய்­யலாம்.

* மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் பிரஷ்­களை மாற்ற வேண்டும்.

* புகை பிடிப்­பது மற்றும் புகை­யிலை பொருட்­களை தவிர்க்க வேண்டும்.

* இரவில் நீண்ட நேரம் விழித்­தி­ருக்­க­க் கூ­டாது.

* சர்க்­கரை அளவை கட்­டுக்குள் வைத்­தி­ருக்க வேண்டும்.

* சில பற்கள் அல்­லது முழு­வதும் (Full denture) பல் கட்­டி­யி­ருந்தால், சாப்­பிட்ட பின் ஒவ்­வொரு முறையும் அவை­க­ளையும் கழற்றி நன்­றாக கழு­விய பின் வாயைக் கொப்­ப­ளிக்க வேண்டும். இரவில் தூங்கும் போது பல் செட்டை கழற்றி தனி­யாக ஒரு கப்பில் வைத்து விட வேண்டும். பல் செட்டில் இயற்­கை­யா­கவே நுண் துளைகள் இருக்கும். எனவே துளை­க­ளுக்குள் சென்று சுத்தம் செய்யக் கூடிய கிருமி நாசினியை உப­யோ­கித்து இரண்டு வேளையும் பல் செட்டை சுத்தம் செய்ய வேண்டும்.

Dry mouth உள்­ள­வர்கள் அடிக்­கடி நல்ல நீர் கொண்டு வாய் கொப்­ப­ளிப்­பதால் வாயில் உள்ள கிரு­மி­களை அகற்­றலாம்.

*இரவு நேரங்­களில் அதி­க­மாக பூண்டு மற்றும் வெங்­காயம் சாப்­பி­டு­வதை தவிர்க்க வேண்டும்.

*சொத்தை பற்கள் இருந்தால் உட­ன­டி­யாக அடைத்து கொள்ள வேண்டும்.

* ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்­து­வரை பார்க்க வேண்டும்.பிரஷ் செய்த பின்னர் அதை கேப் போட்டு மூடி வைப்­பது தவறு. ஈரம் இருக்கும் இடங்­களில் தான் வைரசுகள் பெரு­கக்­கூடும், அதே நேரம் டூத் பிரஷ்­களை பக்டீரி­யாக்­கள்­ அ­திகம் வசிக்கும் குளி­ய­ல­றையில் வைப்­பதும் தவறு. அடுத்த முறை பிரஷ் செய்­யும்­போது நன்­றாக பிரஷ்ஷை தண்­ணீரில் கழுவி விட்டு பயன்­ப­டுத்த வேண்டும்.

* சாப்­பிட்­ட­வுடன் பல் துலக்­கு­வது தவறு. பழங்கள், குளிர் பானங்கள், வைன், அமில தன்மை கொண்ட உணவு வகைகள் சாப்­பிட்­ட­வுடன் பல் துலக்­கினால் பல் பாதிப்பு அடையும்.

* உணவுப் பொருட்களில் இருக்கும் அமிலம் பல்லின் எனாமல் பகு­தியை சற்று மிரு­து­வாக மாற்றி இருக்கும் அந்த நேரத்தில் பிரஷ் கொண்டு பல் துலக்­கினால் பல்லின் எனாமல் தேயக்­கூடும்.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

* சாப்­பிட்டு முடித்து சிறிது நேரம் காத்­தி­ருந்தால் நம் வாயில் சுரக்கும் உமிழ் நீர் அந்த அமி­லத்தை சமன் செய்து விடும், அதன் பிறகு நீங்கள் பல் துலக்­கினால் பல்லின் எனா­ம­லுக்கு எந்த பாதிப்பும் ஏற்­ப­டாது.சாப்­பிட்டு ஒரு மணி நேரம் கழித்து பல் துலக்­கு­வது நன்று.

* அதே போல் சூடாக தேநீர் அருந்­தி­ய­வுடன் குளிர்­பானம் குடித்­தாலும் பல்லின் எனா­மலில் விரிசல் ஏற்­படும் அதன் மூலம் பல் கூச்சம் உண்­டாகும்.

* காலை மாலை இரு­வே­ளையும் பல் துலக்­குங்கள்.


பச்­சிளம், பல் முளைக்­காத குழந்­தை­க­ளுக்கும் ஆள்­காட்டி விரலில் ஈரத் துணி சுற்றி ஈறு­களில் இத­மாக தடவி துடைத்து விட வேண்டும்.
சிறு­வர்­க­ளுக்கு பல் மற்றும் ஈறு­களில் பிரஷ்ஷால் வட்ட வடிவில் சுழற்சி முறையில் தேய்க்க அறி­வு­றுத்த வேண்டும்.

சிறு­வர்­க­ளுக்கு ஒரு பட்­டா­ணியின் அள­வி­லான பற்­ப­சை­யினை உப­யோ­கித்­தாலே போது­மா­னது. ஏனெனில் சில சிறு­வர்கள் அதிக பற்­பசை வைத்தால் துலக்­கும்­போது விழுங்­கி­விட வாய்ப்­புண்டு. இது அவர்­க­ளுக்கு உடலில் அதிக அள­வி­லான புளே­ாரைட் நிறைந்து பாதிப்பை ஏற்­ப­டுத்தும்.

பெரி­ய­வர்கள் பிரஷ்ஷை 45 டிகிரி கோணத்தில் ஈறு­களின் மேல் சாய்த்துப் பிடித்து, சுழற்றும் முறையில் தேய்க்க வேண்டும். மேல் தாடையின் வலது, இடது, உள், வெளிப் பக்­கங்­க­ளிலும், அதே போல் கீழ் தாடை­யிலும் வலது இடது, உள், வெளிப் பக்­கங்­க­ளிலும் தேய்க்க வேண்டும். இச் சுழற்­சி­யினை சுமார் 15 முதல் 20 முறைகள் ஒவ்வோர் இடத்­திலும் மேற்­கொள்ள வேண்டும்.

முன் பற்­க­ளுக்கு மட்டும் பிரஷ்ஷை செங்­குத்­தாக பிடித்து 45 டிகிரி கோணத்தில் மேலும் கீழும் நகர்த்தி, உள்ளும் வெளியும் தேய்த்து விட வேண்டும். கடைவாய் பற்­களின், மெல்லும் மற்றும் கடிக்கும் பகு­தி­களில் பிரஷ்ஷை நன்­றாக அழுத்திப் பிடித்து முன்னும் பின்­னு­மாகத் தேய்த்து விட வேண்டும்.

டங் கிளீனர் கொண்டு நாக்கு பகு­தி­யையும் சுத்தம் செய்ய வேண்டும்.அப்­போ­துதான் வாய் துர்­நாற்றம் வீசக் கார­ண­மான கிரு­மி­களை அகற்ற முடியும்.

உட­லி­லேயே மிக மிகக் கடி­ன­மா­னது, கெட்­டி­யா­னது எது­வென்றால் அது பல்லின் வெளிப்­பு­ற­முள்ள எனாமல் பகு­திதான். இது எலும்பை விட உறு­தி­யா­னது. தவ­றான, முறை­யற்ற வகையில் பல் துலக்கும் பழக்கம் இந்த உறு­தி­யான எனா­ம­லையும் தேய செய்து விடும். இதனால் பல் கூச்சம் உண்­டாகும்.

எப்­பொ­ழுதும் மிரு­து­வான பிரஷ் கொண்டு பல் துலக்­கு­வது நன்று. மூன்று மாதங்­களுக்கு ஒரு­முறை பிரஷ்ஷை மாற்­றி­விட வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்­து­வ­ரிடம் சென்று பற்­களை செக் அப் செய்து கொள்ள வேண்டும்.

Today Top Stories

மேலும் உடல்நலம்

Tags : வாய், துர்நாற்றத்தை, இல்லாமல், தவிர்ப்பது, எப்படி, வாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி?, vaay thurnaarraththai illaamal thavirppathu eppadi?


Follow saalaram14 on Twitter
Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]

Let jQuery AJAX Change This Text