மொழித்தெரிவு :
தமிழ்
English

படிப்பிற்காக ஆபாச படங்களில் ஆடைகளை அவிழ்த்துப்போட்ட மாணவி

Fri, 14 Mar 2014 7:03:29

padippirkaaka aapaacha padankalil aadaikalai avilththuppoadda maanavi amerikkaavaich chaerntha palkalaikkalaka maanaviyooruvar, aapaacha veediyoakkalil thonri paraparappai aerpaduththiyullaar..

படிப்பிற்காக ஆபாச படங்களில் ஆடைகளை அவிழ்த்துப்போட்ட மாணவி
9

அமெரிக்காவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவியொருவர், ஆபாச வீடியோக்களில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தனது பல்கலைக்கழக கட்டணங்களைச் செலுத்துவதற்கு பணம் திரட்டுவதற்காக தான் ஆபாச படங்களில் நடித்ததாக இம்மாணவி கூறியுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

18 வயதான இந்த யுவதி பெல்லா நொக்ஸ் என்ற பெயரில் ஆபாச படங்ஙகளில் தோன்றியுள்ளார். இவர் அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக மாணவியாவார்.

இவர் ஆபாசப் படங்களில் நடித்ததுடன் அதை பகிரங்கப்படுத்திக்கொள்ளவும் செய்தார்.

வட கரோலினா மாநிலத்திலுள்ள டியூக் பல்கலைக்கழத்தில் ஒரு வருட கட்டணமாக 47,000 டொலர்கள் அறவிடப்படுகின்றன.

இப்பணத்தை தனது பெற்றோர் தான் செலுத்த வேண்டியவர்கள் எனக் கூறும் பெல்லா நொக்ஸ், அவர்கள் தொழில் இல்லாமல் இருக்கும்போது கடன் பெறுவது குறித்து தான் யோசிப்பதாகவும் ஆனால் தனது பெற்றோரை கடனாளிகளாக்க விரும்பவில்லை எனவும் கூறுகிறார்.

பெல்லா நொக்ஸ், பல்கலைக்கழக மாணவியாக விளங்கும் நிலையில் ஆபாச படத்தில் நடிப்பது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆனால், தன்னை விமர்சிப்பவர்கள் தான் தனது பாலியல் படத் தொழிலுக்கு உதவுகின்றனர் என பெல்லா நொக்ஸ் கூறியுள்ளார்.

தன்னை வெறுப்பவர்களின் கவலைகளை தான் புறக்கணிப்பதாக சி.என்.என். தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியொன்றில் பெல்லா நொக்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆனால், உண்மையிலேயே பெல்லா நொக்ஸின் பல்கலைக்கழக படிப்புக்கு பணம் வழங்க முடியாத நிலையில் பெல்லாவின் பெற்றோர் உள்ளனரா என கேள்விகள் எழுந்துள்ளன.

பெல்லாவின் தந்தை இராணுவ மருத்துவர். அவர் ஆப்கானிஸ்தானில் பணியாற்றிவிட்டு அண்மையில்தான் அமெரிக்காவுக்கு திரும்பியுள்ளார்.

பெல்லாவின் மூத்த சகோதரிகள் இருவரும் பல்கலைக்கழகத்தில் கற்கின்றனர்.

நாடு திரும்பியவேளை தனது மகள் தவறான காரணங்களுக்காக செய்திகளில் இடம்பெறுவது குறித்து பெல்லாவின் தந்தை கவலையடைந்திருப்பதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஆனால் அதையும் பெல்லா மறுக்கிறார். பெல்லாவின் தாயார் இந்தியாவைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் பல்கலைக்கழக கல்விச் செலவுக்கு பணம் செலுத்த தனது குடும்பத்தினரால் முடியாத நிலைலேயே தான் ஆபாச படங்களில் தோன்றுவதற்கு முன்வந்த போதிலும் இது முற்றிலும் பணம் தொடர்பான தீர்மானமல்ல என பெல்லா நொக்ஸ் கூறியுள்ளார். பாலியல் உறவை தான் விரும்புவதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

பெல்லாவின் உறவினர் ஒருவர் இது குறித்து கூறுகையில், ‘மேற்படி தந்தை நான் சந்தித்தவர்களில் மிகச் சிறந்த ஒரு நபர். அவர் இப்போதுதான் ஆப்கானிஸ்தானில் பணியாற்றிவிட்டு திரும்பியள்ளார். தனது மகள்கள் குறித்து அவர் பெருமை கொண்டிருந்தவர்.

இவ்விடயம் அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவாக இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படித்துப்பாருங்கள்

மேலும் செய்திகள்

Tags : படிப்பிற்காக, ஆபாச, படங்களில், ஆடைகளை, அவிழ்த்துப்போட்ட, மாணவி, படிப்பிற்காக ஆபாச படங்களில் ஆடைகளை அவிழ்த்துப்போட்ட மாணவி, padippirkaaka aapaacha padankalil aadaikalai avilththuppoadda maanavi

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]