மொழித்தெரிவு :
தமிழ்
English

மாயமான மலேசிய விமானம்: மேலும் பல திடுக்கிடும் தகவல்

Fri, 14 Mar 2014 18:25:47

maayamaana malaechiya vimaanam: maelum pala thidukkidum thakaval maayamaana malaechiya vimaanam: maelum pala thidukkidum thakaval 239 payanekaludan malaesheyaavilirunthu peejin nookkip purappadda malaesheya vimaana kadantha 2 naadkalukku munnar nadu vaanel vaiththu kaanamal poayullathu..

மாயமான மலேசிய விமானம்: மேலும் பல திடுக்கிடும் தகவல்
4

239 பயணிகளுடன் மலேஷியாவிலிருந்து பீஜிங் நோக்கிப் புறப்பட்ட மலேஷிய விமான கடந்த 2 நாட்களுக்கு முன்னர் நடு வாணில் வைத்து காணமல் போயுள்ளது. இந்த விமானம் கடலில் வீழ்ந்ததாஇல்லை தரையில் வீழ்ந்ததா ? எதுவுமே தெரியவில்லை.

சிங்கப்பூரின் நீர் மூழ்கிக்கப்பல், அமெரிக்க P 3 ரக விமானம், மலேசிய விமானம் மற்றும் சீனாவின் கடற்படை என்று பல நாடுகளின் படையினர் இந்த விமானத்தை தேடிவருகிறார்கள்.

அதிலும் அமெரிக்கா தனது பலத்தை காட்ட, அதிநவீன P 3 ரக விமானத்தை களமிறக்கியுள்ளது. 1 மணித்தியாலத்திற்கு 1500 சதுர கிலோமீட்டார் பரப்பளவை, "ஸ்கேன்" செய்யும் திறன்வாய்ந்த தேடுதல் விமானத்தை அது தற்போது களத்தில் இறக்கியுள்ளது. இதனை விட செங்கப்பூரின் அதி நவீன நீர்மூழ்கிக் கப்பலும் மலேசிய விமானத்தை தேடிவருகிறது.

குறித்த இந்த மலேசிய விமானம் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நோக்கி பறந்தவேளை அதில் மிக முக்கியமான பலர் இருந்ததாக கூறப்படுகிறது. அதிலும் பெரும் செல்வந்தர்கள் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதற்கும் விமானம் காணமல் போனதற்கு என்ன சம்பந்தம் என்று நினைப்பீர்கள். அதாவது மலேசிய விமான நிலையத்தில், குறித்த இந்த விமானம் புறப்பட முன்னர் 5 பயணிகளை காணவில்லை என காப்டன் அறிவித்துள்ளார்.

இந்த 5 பயணிகளும் ஏர் போட் வந்துள்ளார்கள். அவர்கள் டிக்கெட் கவுன்டர் வரை சென்று தமது போடிங் கார்டையும் எடுத்துள்ளார்கள். அவர்கள் கொண்டு வந்த பொதிகளும் விமானத்தில் ஏற்றப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் விமானத்தில் ஏறவில்லை. இதனால் விமானம் சற்று தாமதமாகவே புறப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த 5 பயணிகளின் பொதிகள், விமானத்தில் இருந்து இறக்கப்பட்டதா ? அல்லது அவற்றுள் ஒன்று வீமானத்தில் சென்றதா ? இது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

இந்த 5 பயணிகளும் ஏன் ஏர்-போட் வரை வந்து போடிங் பாசை எடுத்து விட்டு பின்னர் , பயணிக்கவில்லை ? இதனை தற்போது இன்ரர் போல் ஆராய ஆரம்பித்துள்ளார்கள் என்ற தகவல்களும் கசிந்துள்ளது. குறிப்பிட்ட இந்த விமானத்தில் பயணித்த ஒரு செல்வந்தரை போட்டு தள்ளவே, இவ்வாறு விமானத்தை வீழ்த்தினார்களா என்ற சந்தேகங்களும் நிலவுகிறது.

விமானத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டிருந்தால், விமானி அறிவித்திருப்பார். ஆனால் அவர் ரேடியோவில் அறிவிக்க முன்னதாகவே விமானம் வெடித்து சிதறி இருக்கலாம் என்றும் , சந்தேகிக்கப்படுகிறது. பொறுத்திருந்து தான் பார்கவேண்டும். எப்படி என்றாலும் விமானத்தின் பாகங்களை அமெரிக்கா கண்டு பிடிக்காமல் விடப்போவது இல்லை.

இன்னும் சில தினங்களில் இந்த விமானத்திற்கு என்ன நடந்தது என்பது தொடர்பான முழு தகவல்களும் கிடைத்துவிடும்.

இதையும் படித்துப்பாருங்கள்

மேலும் செய்திகள்

Tags : மாயமான, மலேசிய, விமானம், மேலும், பல, திடுக்கிடும், தகவல், மாயமான மலேசிய விமானம்: மேலும் பல திடுக்கிடும் தகவல், maayamaana malaechiya vimaanam: maelum pala thidukkidum thakaval

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]