மொழித்தெரிவு :
தமிழ்
English

என்னது ப்ரியாமணி கர்ப்பமா

Sun, 16 Mar 2014 5:19:19

ennathu priyaamane karppamaa thaan karppamaaka iruppathaaka chilar vathanthi parappuvathaaka nadikai priyaamane kooriyullaar. paarathiraajavaal arimukappaduththappaddu, ameerin paruththi veeran padaththukkaaka chirantha nadikaikkaana thaechiya viruthai perravar piriyaamane. thamilil vantha vaayppukalaip..

என்னது ப்ரியாமணி கர்ப்பமா
3

தான் கர்ப்பமாக இருப்பதாக சிலர் வதந்தி பரப்புவதாக நடிகை ப்ரியாமணி கூறியுள்ளார். பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, அமீரின் 'பருத்தி வீரன்' படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றவர் பிரியாமணி.

தமிழில் வந்த வாய்ப்புகளைப் புறக்கணித்துவிட்டு, தெலுங்கு -இந்தியில் நடிக்க ஆர்வம் காட்டினார். கடைசியில் சில கன்னடப் படங்களில்தான் நடிக்க முடிந்தது.

இப்போது வாய்ப்புகள் இல்லாமல், மலையாளப் பக்கம் ஒதுங்கியுள்ளார். இந்த நிலையில் பிரியாமணி ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், கர்ப்பமாக இருப்பதாகவும் ஒரு பேச்சு உலா வர ஆரம்பித்துவிட்டது.

இது உண்மைதானா என்று ப்ரியாமணியிடம் கேட்டபோது, "என்னைப் பற்றி மனம் போன போக்கில் எழுதுகிறார்கள். கர்ப்பமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். இவற்றையெல்லாம் நான் பொருட்படுத்துவது இல்லை. தமிழில் எனக்கு வாய்ப்புகள் இல்லை.

முன்பு நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் நான்தான் புறக்கணித்துவிட்டேன். இனி வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். படங்கள் இயக்கும் ஐடியாவும் இருக்கிறது," என்றார்.

இதையும் படித்துப்பாருங்கள்

மேலும் சினிமா

Tags : என்னது, ப்ரியாமணி, கர்ப்பமா, என்னது ப்ரியாமணி கர்ப்பமா, ennathu priyaamane karppamaa

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]