மொழித்தெரிவு :
தமிழ்
English

எனது அடுத்த படமும் தோல்வியடையும் : மிஸ்கின் நம்பிக்கை

Sun, 23 Mar 2014 5:18:25

enathu aduththa padamum tholviyadaiyum : miskin nampikkai oanaayum aaddukkuddiyum padaththai chonthamaaka thayaariththu kadumaiyaana nethichchikkalil maaddik konda iyakkunar miskin meendum oru puthiya padaththai thayaariththu iyakkap cheyyap poakiraar..

எனது அடுத்த படமும் தோல்வியடையும் : மிஸ்கின் நம்பிக்கை
5

´ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை சொந்தமாக தயாரித்து கடுமையான நிதிச்சிக்கலில் மாட்டிக் கொண்ட இயக்குனர் மிஸ்கின் மீண்டும் ஒரு புதிய படத்தை தயாரித்து இயக்கப் செய்யப் போகிறார்.

முந்தைய படம் சொந்தப்படம் என்பதால் பப்ளிசிட்டி செய்யக்கூட காசில்லாமல் அந்த நல்ல படத்துக்கு தானே வீதியில் இறங்கி போஸ்டர்கள் எல்லாம் ஒட்டினார்.

இரசிகர்கள் பார்க்கத் தயாராக இருந்தும் தியேட்டர்காரர்கள் அந்தப் படத்தை கண்டுகொள்ளவே இல்லை. இதனால் கடுப்பான அவர் வந்தவரை இலாபம் என்று எல்லா உரிமைகளையும் விற்று வந்த காசில் தான் இப்போது அடுத்த படத்தையும் தெம்பாக ஆரம்பித்திருக்கிறார்.

இசைஞானி இளையராஜாவின் தீவிர இரசிகரான மிஸ்கின் தனது ‘நந்தலாலா’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆகிய இரண்டு படங்களிலும் அவரைத்தான் இசையமைக்க வைத்தார்.

இப்போது தனது புதிய படத்திலும் அவரையே தான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருக்கிறார் மிஸ்கின்.

சமீபத்தில் இளையராஜாவைப் பார்ப்பதற்காக அவரது ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்குப் போன மிஸ்கின் அவரை ஒப்பந்தம் செய்து விட்டு வெளியே வந்தார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அவருக்கு மிகவும் நெருக்கமான திரைப் பிரபலங்கள் என்ன மிஸ்கின் இந்தப்பக்கம் என்று கேட்டபோது “மறுபடியும் ஒரு ப்ளாப் படம் குடுக்கப்போறேன். அந்தப் படத்துக்கு தான் அய்யாவை பார்க்க வந்தேன்’’ என்றாராம்.

மிஸ்கினின் இந்த பேச்சைக் கேட்டு முகத்தில் அதிர்ச்சியை காட்டிய அவர்களிடம் “அட ஆமாங்க… இசை மட்டும் தாங்க என்னோட ‘நந்தலாலா’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ரெண்டு படங்களேயும் ஜெயிச்சிருக்கு. ஆனா வசூல் ரீதியா அந்த ரெண்டு படங்களும் ப்ளாப் தானே? நல்ல படத்தையெல்லாம் தியேட்டர்காரங்க எங்க ரசிகர்களை பார்க்க விடுறாங்க, அவங்க கெளம்பி வர்றதுக்குள்ள தான் தூக்கிடுறாங்களே…” என்று வேதனையோடு சொல்லிவிட்டு நடையைக் கட்டினாராம் மிஸ்கின்.

அதுசரி அடிபடுறவனுக்குத்தானே வலியோட வேதனை தெரியும்.

இதையும் படித்துப்பாருங்கள்

மேலும் சினிமா

Tags : எனது, அடுத்த, படமும், தோல்வியடையும், மிஸ்கின், நம்பிக்கை, எனது அடுத்த படமும் தோல்வியடையும் : மிஸ்கின் நம்பிக்கை, enathu aduththa padamum tholviyadaiyum : miskin nampikkai

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]