மொழித்தெரிவு :
தமிழ்
English

9 மாதங்களில் நான்கு குழந்தைகள் பெற்ற பெண்

Mon, 11 Aug 2014 8:16:40

9 maathankalil naanku kulanthaikal perra pen landan pakuthiyai chaerntha Sarah Ward enra 29 vayathu pen onpathu maathankalil naanku kulanthaikal perru chaathanai cheythullaar. landanai chaerntha Sarah Ward, enra pen kadantha onpathu maathankalukku munnar Freddie enra aankulanthaikku...

9 மாதங்களில் நான்கு குழந்தைகள் பெற்ற பெண்
3

லண்டன் பகுதியை சேர்ந்த Sarah Ward என்ற 29 வயது பெண் ஒன்பது மாதங்களில் நான்கு குழந்தைகள் பெற்று சாதனை செய்துள்ளார். லண்டனை சேர்ந்த Sarah Ward, என்ற பெண் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் Freddie என்ற ஆண்குழந்தைக்கு தாயானார்.

பின்னர் ஒரே வாரத்தில் மீண்டும் கர்ப்பமுற்றார். ஆனால் இந்த முறை அவருக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன. ஒன்பது மாத இடைவெளியில் நான்கு குழந்தைகள் பெற்று சாதனை செய்துள்ள இந்த பெண் அனைத்து குழந்தைகளையும் நார்மல் டெலிவரியில் பெற்றெடுத்து இருக்கின்றார்.

Sarah Ward மற்றும் அவரது கணவர் Benn Smith ஆகிய இருவரும் தற்போது தங்களது நான்கு குழந்தைகளையும் வளர்ப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். தங்கள் குழந்தைகளுக்கு வாரம் ஒன்றுக்கு 80 பாட்டில்கள் பால் மற்றும் 175 உள்ளாடைகள் தேவைப்படுவதாக கூறும் Benn Smith, இருப்பினும் நாங்கள் சந்தோஷமாக எங்கள் குழந்தைகளுக்கு செலவு செய்து வருவதாக கூறினார்.

ஆனால் கண்டிப்பாக இந்த குழந்தைகளோடு நிறுத்திவிடுவோம். இனிமேல் எங்களுக்கு வேறு குழந்தைகள் தேவையில்லை என்பதில் உறுதியாக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

நான்கு குழந்தைகள் குறித்து குழந்தைகளின் தாய் Sarah Ward கூறும்போது எங்கள் வீடு சில சமயம் நர்சரி பள்ளி போல் எங்களுக்கு தோற்றமளிக்கிறது. இரண்டாவது பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறக்கும் என்று நாங்கள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.

இதையும் படித்துப்பாருங்கள்

மேலும் செய்திகள்

Tags : 9, மாதங்களில், நான்கு, குழந்தைகள், பெற்ற, பெண், 9 மாதங்களில் நான்கு குழந்தைகள் பெற்ற பெண், 9 maathankalil naanku kulanthaikal perra pen

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]