மொழித்தெரிவு :
தமிழ்
English

நடுக்காட்டில் எலும்புக்கூடுகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட விமானம் மலேசிய விமானமா?

Mon, 12 Oct 2015 17:01:37

nadukkaaddil elumpukkoodukaludan kandupidikkappadda vimaanam malaechiya vimaanamaa? pilippainchil ulla chukpaay theevil irukkum adarntha kaadduppakuthiyil pala elumpukaludan koodiya vimaanaththin paakam kidaiththullathu. jamil umar enpavar chukpaay theevil ulla kaadduppakuthikku paravaikalai vaeddaiyaada thanathu uravinarkaludan chenrullaar.

நடுக்காட்டில் எலும்புக்கூடுகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட விமானம் மலேசிய விமானமா?
UP Date
4

பிலிப்பைன்ஸில் உள்ள சுக்பாய் தீவில் இருக்கும் அடர்ந்த காட்டுப்பகுதியில் பல எலும்புகளுடன் கூடிய விமானத்தின் பாகம் கிடைத்துள்ளது.

ஜமில் உமர் என்பவர் சுக்பாய் தீவில் உள்ள காட்டுப்பகுதிக்கு பறவைகளை வேட்டையாட தனது உறவினர்களுடன் சென்றுள்ளார்.

அப்போது, அங்கு விமானத்தின் பாகம் ஒன்று கிடைத்துள்ளது, அதன் அருகே 70 இன்ச் நீளமும், 35 இன்ச் அகலமும் கொண்ட மலேசிய கொடி ஒன்றும் கிடந்துள்ளது.

அது மட்டுமின்றி அதில் பல எலும்புக்கூடுகள் இருந்துள்ளதை பார்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து விரைந்து சென்ற பொலிசார் அப்பகுதியை பார்வையிட்டுள்ளனர்.

தற்போது, இது தொடர்பான தகவல் மலேசிய பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும், இது குறித்து உண்மையை கண்டறிய உதவுமாறு மலேசிய பொலிசார் பிலிப்பைன்ஸ் பொலிசாரை கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த விமானம், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் எம்.ஹெச். 370 விமானம் என கருதப்படுகிறது.

இதையும் படித்துப்பாருங்கள்

மேலும் செய்திகள்

Tags : நடுக்காட்டில், எலும்புக்கூடுகளுடன், கண்டுபிடிக்கப்பட்ட, விமானம், மலேசிய, விமானமா, நடுக்காட்டில் எலும்புக்கூடுகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட விமானம் மலேசிய விமானமா?, nadukkaaddil elumpukkoodukaludan kandupidikkappadda vimaanam malaechiya vimaanamaa?

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]