US
மொழித்தெரிவு :
தமிழ்
English

நாய்க்கு துணையாக காவல் இருந்த நண்பன் நாய்
Thu, 19 Nov 2015 14:16:49
naaykku thunaiyaaka kaaval iruntha nanpan naay vaeli­yoonril chik­kik­konda naayoonru meed­kap­pa­dum­varai mar­roru naay 2 thinan­ka­laaka athan aru­ki­laeyae kaath­thi­runthu palarai nekilach chey­thul­lathu. ame­rik­kaavin ad­laandaa nakaraich chaerntha atheenaa enum naayin kaal valaik­kam­pi­yoonril chik­kik­kon­dathu.
நாய்க்கு துணையாக காவல் இருந்த நண்பன் நாய்

வேலி­யொன்றில் சிக்­கிக்­கொண்ட நாயொன்று மீட்­கப்­ப­டும்­வரை மற்­றொரு நாய் 2 தினங்­க­ளாக அதன் அரு­கி­லேயே காத்­தி­ருந்து பலரை நெகிழச் செய்­துள்­ளது.

அமெ­ரிக்­காவின் அட்­லாண்டா நகரைச் சேர்ந்த அதீனா எனும் நாயின் கால் வலைக்­கம்­பி­யொன்றில் சிக்­கிக்­கொண்­டது.

அந்த நாய் அதி­லி­ருந்து விடு­பட முடி­யாமல் தவித்த நிலையில் அதன் நண்­ப­னான ரெக்ஸ் சுயஸ் எனும் நாய், அவ்­வே­லிக்கு அரு­கி­லேயே நின்­று ­கொண்­டது.

தனது நண்பி மீட்­கப்­ப­டும்­வரை ரெக்ஸ் சுயஸ் அங்­கி­ருந்து நக­ர­வில்லை. இரு தினங்­களின் பின் அட்­லாண்டா மிருகப் பாது­காப்புப் பிரிவு அதி­கா­ரி­க­ளுக்கு தகவல் தெரி­விக்­கப்­பட்ட பின்னர் அதீனா மீட்­கப்­பட்­டது.

இதன்­போது, ரெக்ஸ் சுயஸ் எனும் நாயும் இரு தினங்­க­ளாக அவ்­வே­லிக்கு அரு­கி­லேயே இருந்­ததை அறிந்து தாம் வியப்­ப­டைந்­ததாக அட்­லாண்டா மிருகப் பாது­காப்பு அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

பின்னர் இவ்­விரு நாய்­களும் மிருகப் பாது­காப்பு நிலை­ய­மொன்­றுக்கு கொண்டு செல்லப்பட்டன. தற்போது அதீனா எனும் நாய் குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Today Top Stories

மேலும் செய்திகள்

Tags : நாய்க்கு, துணையாக, காவல், இருந்த, நண்பன், நாய், நாய்க்கு துணையாக காவல் இருந்த நண்பன் நாய், naaykku thunaiyaaka kaaval iruntha nanpan naay


Follow saalaram14 on Twitter
Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]