மொழித்தெரிவு :
தமிழ்
English


ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.....

sssu.... rakachiyammmm..... paechchular vaalkkai inpamaanaathu. thirumanam cheythu kondaal naalaa puraththil irunthum thontharavu

ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.....

பேச்சுலர் வாழ்க்கை இன்பமானாது. திருமணம் செய்து கொண்டால் நாலா புறத்தில் இருந்தும் தொந்தரவு வருகிறது. இதனால் மன அழுத்த நோய் வருகிறது என்கின்றனர் பலர். இந்நோய்க்கு மருந்து தேடி மருத்துவ மனைக்கு அலைகின்றனர். ஆனால மருத்துவர்களோ, கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலையும் கதை இது என்கின்றனர்.

 

இணையர்களில் (தம்பதி) ஒருவருக்கு மன அழுத்த நோய் இருந்தால் மற்றவரிடம் இருக்கிறது அதற்கு மருந்து. இல்லை இல்லை மற்றவரேதான் மருந்து. துணையின் அன்பான அணைப்புதான் இந்நோய்க்கு அருமருந்தாம்.

 

அதை விட்டு விட்டு இன்பம் எங்கே?? இன்பம் எங்கே???... என்று தேடி அலைவது எல்லா வகையிலும் பேராபத்தையே விளைவிக்கும்.

 

மேலும் அலுவலக பிரச்சனை, வெளிப்பிரச்சனை, வீட்டுப்பிரச்சனை என்று எந்தப் பிரச்சனைகளையும் படுக்கையறைக்குள் நுழைய விடாமல் நோ எண்டிரி போர்டு மாட்டிவிட்டால் மனதிலிருந்தும் எல்லா பிரச்சனைகளும் அகன்று விடுமாம்.ஒருவர் ஒருவரை அன்பாக நடத்தும் தம்பதிகளுக்கு மன அழுத்ததிற்குக் காரணமான கார்டிசல் என்ற ஹார்மோன் குறைவாகச் சுரக்கின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

 

ஆனால் மன அழுத்தத்தைக் குறைத்து விடுகிறேன் என்று ஏதோ எந்திர கதியில் செயல் பட்டால் மூச்சுதான் முட்டுமே ஒழிய இம்மருத்துவம் நோய் தீர்க்க ஒருபோதும் பயன்படாது. மேலும் மன நோயை அதிகரிக்கவே செய்யும். சிவனே என்று இருந்து இருக்கலாமே என்று எண்ணி பின்னால் வருந்தவும் நேரிடும்.

 

ஒருவரை ஒருவர் காதலுடன், அன்பாக, ஆறுதலாக, ஆத்மார்த்தமாக அணைப்பதே மனநோயைப் போக்கும் இன்பமான உயர் மருத்துவமாம்.


மேலும் சிறப்புக் கட்டுரைகள்

Tags : ஸ்ஸ்ஸூ, ரகசியம்ம்ம்ம், ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்....., sssu.... rakachiyammmm.....

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]