மொழித்தெரிவு :
தமிழ்
English

உண்மையை ஏற்பவர்கள் படிக்கலாம்....

unmaiyai aerpavarkal padikkalaam.... mathankal onraaka amarum idam "puththaka alamaari"thaan. keethaiyum, kuraanum kaddi thaluvi kondirukkum.

உண்மையை ஏற்பவர்கள் படிக்கலாம்....
10 இந்த முட்டாள், அறிவாளி என்ற சொற்களில்தான் எவ்வளவு பாகுபாடு.
அறிந்தேதேல்லாம் அறிவாகுமா.? நயவங்கஜமான அறியாவாளியாய் ஒருவன் இருப்பதை விட முட்டாளாகவே இருந்து விடலாம். அவனால் தன்னை தவிர யாருக்கும் ஒரு கெடுதலும் நேராது ஆனால் எல்லோரும் தன்னை ஒரு அறிவாளி என்று பிரகனபடுத்த என்றும் முயற்சித்துகொண்டுயிருக்கிறார்கள். தன்னுடைய முட்டாள்த்தனத்தை மறைத்துக்கொண்டு..! சிலநேரங்களில் நானும் இந்த முட்டாள்தனத்தை செய்கின்றேன். ஒருவரை நாம் அறிவாளி என்று சொல்ல அவர் வீட்டில் இருக்கும் புத்தக அலமாரி கூட அவருக்கு விளம்பரம் தேடிகொடுகிறது. வீட்டிற்குள் வரும் மக்களை அழகுபடுத்தும் புத்தக அலமாரிகள். அழகுக்கு மட்டும்தான் பயன்படுகிறது. உங்களுக்கு ஒன்று தெரியுமா.?

 

மதங்கள் ஒன்றாக அமரும் இடம் "புத்தக அலமாரி"தான். கீதையும், குரானும் கட்டி தழுவி கொண்டிருக்கும்.
ஆனால் புத்தகங்களில் மட்டும்தான் தழுவல் இருக்கும் அந்த மதங்களை சார்ந்த மனிதர்களில் என்றும் இருக்காது. மதங்களில் உள்ள மூடபழக்க வழக்கங்கள் ஒழியவேண்டும் அப்போதுதான் மனிதத்துவம், மனித நேயம் காணும். இவை காணவேண்டும் என்றால் அறிவியல் வளர்ச்சி அபரிதமான அளவில் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் அறிவியலில் அறிந்ததை ஆதாரமாக்கி அறிவின்மையை அழிக்கலாம். அறிந்ததையே இன்னும் பகுத்தாய்ந்து பகுத்தறிவாளனாய் மாற்றலாம், நாமும் மாறலாம். அதனால் நித்தம் நொடிபொழுதும் அறிவியலின் படைப்பில் புதிய குழந்தையாக நாம் பிறபெடுப்போம்.

 

 

அறிவார்ந்த ஒரு மொழியை கற்றவரின் நற்சிந்தனை சில,பல மொழி கற்றவரின் அறிவுக்கு ஈடாகுமா.? என்றால் அது ஈடாகமல்தான் இருக்கும். ஒருவரின் சிந்தனைகள் என்றும் படைக்கப்படும் படைப்பை உண்டாக்கும். ஆனால் அதன் 'மொழி அறிவு' படைப்பின் வளர்ச்சிக்கு பயன்படும். மொழியை மொழி மாற்றம் செய்ய வேண்டுமானால் பிற மொழி தேவை படலாம் ஆனால் நம் சிந்தனை கருத்துகள், அதன் படைப்புகள் எல்லாம் நம் தாய்மொழியிலே வெளிபடவேண்டும். எவர் ஒருவர் தன் தாய் மொழியை சிறந்து கற்று உணர்பவரே அவரே கருத்துள்ள சிந்தனைக்கு உரியவராக இருப்பார்.

 

சிந்தனையில் தன்னை மற்றவர் முன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ என்றும் முன்னிலைபடுத்தி கொள்ளவேண்டும், அடையாளபடுத்தி கொள்ளவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் அதிகமாக இருக்கும். இதில் முன்னிலைபடுத்துதல் எனபது அதிகாரத்துடன் சேர்ந்து வரும்போது படுமோசமான விளைவுகள்குடியதாக இருக்கும். அதுவே அறிவின் ஊடாக முன்னிலைபடுத்தும்போது ஆணவம் கொண்டால் அதுவும் மோசமாகதான் இருக்கும். இதில் வசதி மூலமாக உறவின் முன் தங்கள் முன்னிலைபடுத்தினால் அது உறவை மதிக்காததனமாக இருக்கும். தனக்காக வாழாமல் பிறர் பார்க்கவேண்டும் என்று வாழ்ந்தால் அது தன் சுயநல ஆசையை முன்னிலைபடுத்தியதாக இருக்கும். இப்படியே முன்னிலைபடுத்துவதுதான் ஒருவரின் வாழ்வாக என்றும் மாற்றம் அடைந்துகொண்டே இருக்கிறது. அவர் குணங்கள் மாறாமல்....

 

நேற்றிய அழிவு இன்றிய ஆக்கமாக பயன்படுகிறது. காலம் மெல்ல விழுங்கும் சக்தி படைத்தது. எனக்கு தெரிந்த நண்பன் எதிர்பாராமல் மேலே கல் எறிந்த போது அது அந்த பக்கமாக வந்த ஒருவர் மண்டையில் பட்டுவிட்டது. நாங்கள் பதறியடித்துக்கொண்டு கிட்ட போய் பார்த்தோம் அவருக்கு ரத்த காயங்கள் எதுவும் இல்லை ஆனால் அவர் மயக்க நிலைக்கு சென்று விட்டார். பின்பு அவரை தண்ணீர் தெளித்து. நான் நண்பரை கடிந்துகொண்டு அவரை எழுப்பும் போது அவர் ஏதோ...சந்தோசம் கொண்டவர்போல் எழுந்தார். தலையை முன்னும் பின்னுமாக ஆட்டினார். ஆ.! என்று அதிசயத்தார்.

 

அவர் சொன்னார் "பல மாதங்களாக இருந்த என் தலைவலி இப்போது இல்லை. எனக்கு கல்லடிபட்டது வேதனை என்றாலும் இப்போது தலைவலி போனதை நினைத்து ரொம்ப சந்தோசம்" என்று நண்பனிடம் நன்றி சொல்லிவிட்டு சென்றார். இப்போது நான் நண்பனை பார்த்தேன். எனக்கு அவன் மேல் இருந்த கோவம் மாறி எனக்கும் ஆச்சரியம் வந்தது. இப்போது நான் நண்பனை வாழ்த்துவதா.? இல்லை திட்டுவதா.? என்று எனக்கு குழப்பம் வந்துவிட்டது. முன்னர் செய்த செயல் குற்றம் பின்னர் நடந்த செயல் அற்புதம். வெயில் கடுமையை உணர்ந்தவனுக்கு மழையின் பொழிவையும் எதிர்பார்த்து அதை உணரத்தான் செய்வான்.

 

உணர்ந்து மீண்டும் வெயிலுக்காக காத்திருப்பான் மழையின் பொழிவை ஏற்கனவே உணர்ந்ததால் இப்போது வெயிலின் கடுமை அவனை ஒன்றும் பாதிப்பதில்லை பின்னால் மழை வரும் என்று அவன் நன்றாக உணர்ந்தவனாக இருப்பான். இப்படியே பருவ காலங்களை மாறி மாறி பார்த்தவனுக்கு அவனின் வலி எங்கே.? வேதனை எங்கே.? எல்லாம் சமமாகி நீரோட்டமாய் போய்விடும். ஒன்றில் உள்ளே இன்னொன்றும் உள்ளது. ஒவ்வொரு புனிதத்திலும் ஒரு அசிங்கம் உள்ளது. ஒவ்வொரு அசிங்கத்திலும் ஒரு புனிதம் உள்ளது. சேர் அசிங்கம் என்று நாம் நினைத்தால் அழகான செந்தாமரையாய் காணமுடியாது. வலியான வேதனை வேண்டாம் என்றால் பூமாறி பொழியும் இன்பத்தை நாம் ரசிக்க முடியாது.

 

இயற்கையின் படைப்பில் எல்லாமே ஏற்க்ககுடியது வெறுப்பதாய் இருந்தால் இயற்கை எதுவும் நமக்கு படைக்கபட்டிருக்காது. பொதுவான நியாயமான விஷயங்கள் சொல்வதற்கும் ஒரு நயம் வேண்டும் போல இருக்கிறது. நாம் கொஞ்சம் கோவம் கலந்து நியாயத்தை சொன்னால் கேட்பவருக்கு அந்நியாயம் கூட அநியாயாமாக போகிறது. நாம் ஒருவருக்கு நியாயமான விளக்கம் கொடுத்து வந்து கொண்டே இருப்போம் கடைசியாக "நான் சொல்வது உனக்கு புத்தி இருந்தால் புரிந்துகொள்வாய்" என்று முடித்தால் அவ்வளவுதான் நாம் சொன்ன நியாயங்கள் எதுவும் அவர் ஏற்றுகொள்ள மாட்டார். நம் நியாயத்தை விட அதுனுடன் சேர்ந்து வரும் அன்பான நியாயத்தைத்தான் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

 

நம் எண்ணம்தான் செயலுக்கு வடிவம் கொடுகிறது. நாம் எல்லோரும் நினைக்கும் எண்ணங்களை வெளியில் சொன்னால் மனித இனமே இருக்காது. நம் எண்ணம் அறிவால் தடுக்கபட்டுதான் செயலாக வருகிறது அதில் நல்லது, தீயது என்று பிரிகிறது. எல்லாவற்றிக்கும் எண்ணம்தான் ஆதாரமாக உள்ளது. இதில் உடல் வெறும் கருவிதான். எண்ணம் ஒடசொன்னால் ஓடும் நில் என்றால் நிற்கும். இதில் நம் எண்ணத்தைதான் சரியான முறையில் நாம் பயன்படுத்தவேண்டும் அப்படி பயன்படுத்தினால் நிச்சயம் நாம் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கும்.இதைதான் ஏசுபிரான் சொன்னார் " தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கபடும்" என்று. நம் எண்ணத்திற்கும் அற்புதமான பிரபஞ்சதிற்க்கும் நெருங்கிய தொடர்புண்டு.

 

நம் எண்ணத்தின் வேகத்தை நாம் எப்போது உணரலாம் என்றால் நாம் செயல் மற்றவரால் செயல் தடுக்கபடும்போதும், நம்மிடம் ஒருவித தடுமாற்றம் ஏற்படும்போதும் அதாவது உங்களை ஒருவர் கோவப்பட்டு திட்டும்போதும், அடிக்கும்போதும் எண்ணத்தின் வேகம் அதிகமாக இருக்கும். நம்மிடம் அமைதி................

 

மேலும் படிக்க


மேலும் பதிவுகள்

Tags : உண்மையை, ஏற்பவர்கள், படிக்கலாம், உண்மையை ஏற்பவர்கள் படிக்கலாம்...., unmaiyai aerpavarkal padikkalaam....

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]