மொழித்தெரிவு :
தமிழ்
English

தேவதையே !

thaevathaiyae ! ennavalae! piriyamaanavalae! naechaththirkuriyavalae!

தேவதையே !
UP Date
5

என்னவளே! பிரியமானவளே! நேசத்திற்குரியவளே!

என்னை எனக்கே உணரவைத்த அன்புக்குரியவளே!
என்னை நான் நேசிக்க நீதான் காரணமடி.
எனக்காகத்தான் பிரம்மன் உனை படைத்தானோ
என் உயிரும் உன் உயிரும் ஒன்றென உணர்ந்தேனே.

பிரிவென்பது நமக்கில்லை துன்பமென்பதும் நமக்கில்லை
அன்பின் புனிதம்தன்னை உன் மூலம் உணர்ந்தேனே
கனவிலும் கவிதை எழுத காரணம் நீ தானே
கடவுள் வாழ்கின்றார் என, உன் அன்பில் உணர்ந்தேனே.

வாழ்கையின் அர்த்தத்தை உன் காதலில் அறிந்தேனே
வாழ்வின் சொர்க்கத்தை உணரவைத்த தேவதையே
வாழ்வின் உயிரோடு கலந்த என் உறவே - விலைமதிப்பற்ற
வாழ்க்கைப் பயணத்தில் என்னோடு என்றும் இருப்பாயோ?

அன்பு வார்த்தையில்லை உயிரிலும் மேலான உணர்வு நீதானே
அமுதும் தேனும் எதற்கு நீ என் வாழ்வில் ஒளி வீசும் போது
அன்பே கடவுள் என உணரவைத்த என் வாழ்வில் வசந்தமே
அகிலமும் போற்றும் அன்பு எம் காதலில் மேன்மை பெறும்.....


மேலும் காதல்

Tags : தேவதையே, , தேவதையே !, thaevathaiyae !

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]