மொழித்தெரிவு :
தமிழ்
English


வாழ்வின் தொடக்கம் பிரசவ அறை

vaalvin thodakkam pirachava arai verumaiyaay iruntha nee - idaiyil vaecham poaddukkonday aarampam parri ariyaamalae - ippoathu anaiththumae unathenkiraay…

வாழ்வின் தொடக்கம் பிரசவ அறை
தொடக்கமும் முடிவும் தான் உலக வாழ்வின் இரு உண்மைகள். இவையிரண்டுமே இறுதிவரை நிரந்தரமானவை...

"பிரசவ அறை" இது தான் மனித வாழ்வு தொடங்குமிடம் மனிதக்குஞ்சுகள் பெருகும் மண்டபம்...

இந்த அறையின் காற்றைத்தான் உன் சுவாசப்பைகள் முதலில் நிரப்பிக்கொண்டன…

இதன் சுவர்கடிகாரத்தின்படிதான் உன் வாழ்வு எதிர்வு கூறப்பட்டது

இங்கேதான் நீ உலகத்தின் கவனத்தை ஈர்க்க உதட்டை அசைக்க தொடங்கினாய்

அடையாளம் தெரியாமல் நீ கிடந்தபொழுது இங்கேதான் ஆணா பெண்ணா என அறியப்பட்டாய்

இது பள்ளியறை குற்றங்களின் பகிரங்க சாட்சிக்கூண்டு

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

இது வயிற்று வலிகளின் வரவேற்பு மண்டபம்

கல்லறைகளுக்கு சுடுகாடு போல கருவறைகளுக்கு இதுதான் வீடு

அறிந்துகொள், அந்தரங்கம்தான் உன் ஆரம்பம் இரத்தக்களரி தான் உன் பிறப்பிடம் நிர்வாணம் தான் நீ உடுத்த முதல் ஆடை

வெறுமையாய் இருந்த நீ - இடையில் வேசம் போட்டுக்கொண்டய் ஆரம்பம் பற்றி அறியாமலே - இப்போது அனைத்துமே உனதென்கிறாய்…

-காரையம்சன்-

Ahilan Nadesan


மேலும் Facebook

Tags : வாழ்வின், தொடக்கம், பிரசவ, அறை, வாழ்வின் தொடக்கம் பிரசவ அறை, vaalvin thodakkam pirachava arai

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]