மொழித்தெரிவு :
தமிழ்
English

எலும்பு தேய்வு நோய் வராமல் தடுக்க..

elumpu thaeyvu nooy varaamal thadukka.. udalukku vadivaththaiyum valuvaiyum tharuvathu elumpukal kolaajaen ilaikal marrum kaalchiyam, paaspaed aakiyavarrin uppukalaal aanavai.

எலும்பு தேய்வு நோய் வராமல் தடுக்க..
7உடலுக்கு வடிவத்தையும் வலுவையும் தருவது எலும்புகள் கொலாஜென் இழைகள் மற்றும் கால்சியம், பாஸ்பேட் ஆகியவற்றின் உப்புகளால் ஆனவை.

 

  எலும்புகள் இயல்பில் கடின தன்மையைத்தான் பெற்றுள்ளன. ஆனால் எலும்பு தேய்வு நோயில் எலும்புகள் தேய்ந்து பஞ்சைப் போன்று மென்மையாக மாறுகின்றன.

 

  இந்த நோயை, மருத்துவ உலகம் ஆஸ்டியோ போரோசிஸ் என்று அழைக்கின்றது. 'எலும்புத் தேய்வு நோய்' பிற நோய்களைப் போல அறிகுறிகளை வெளியே காட்டுவதில்லை.

 

  எனவேதான் இதை உடனடியாக கண்டறிய முடிவதில்லை. எலும்புகளில் உள்ள கால்சியம் சத்து எந்த விதமான அறிகுறிகளையும் காட்டாது குறைந்துவிடுகின்றது. இயல்பில் எலும்புகள் புதிதாக தோன்றும் பண்பைப் பெற்றுள்ளன.

 

  பழைய எலும்புகள் அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக புது எலும்புகள் உருவாவது நம்முடைய உடலில் தொடர்ந்து நடைபெறுகின்றது. உடல் இயக்கம் மற்றும் ஹார்மோன்கள் ஆகியவை எலும்புகள் தொடர்ந்து வளர்ந்திட உதவுகின்றன.

 

  எலும்பு தேய்வு நோயினால் பாதிக்கப்பட்ட பின்னர் ஒரு சில அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கும். அடி முதுகுவலி, லேசாக தவறி விழுந்தால் கூட எலும்பு முறிவு ஏற்படுதல் ஆகியன இதன் அறிகுறியாக வெளிப்படும்.

 

  எலும்புத் தேய்வை எக்ஸ்ரேக்கள் மற்றும் ஆஸ்டியோ சி.டி. மூலமாக கண்டறியலாம். 'ஆஸ்டியோ கம்யூட்டரைஸ்டு மெமோகிராபி' என்பது எலும்பில் உள்ள சுண்ணாம்புச் சத்தின் அளவை கண்டறியும் கருவியாகும்......

 

மேலும் படிக்க


மேலும் பதிவுகள்

Tags : எலும்பு, தேய்வு, நோய், வராமல், தடுக்க, எலும்பு தேய்வு நோய் வராமல் தடுக்க.., elumpu thaeyvu nooy varaamal thadukka..

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]