மொழித்தெரிவு :
தமிழ்
English


பொடுகு தொல்லை நீங்க வேண்டுமா?

poaduku thollai neenka vaendumaa? mudi uthirvathaith thadukkavum, neenda nediya koonthalaip pera poadukin thollai illaamal iruppathu avachiyam.

பொடுகு தொல்லை நீங்க வேண்டுமா?

இப்போதைய கால கட்டத்தில் கூந்தலை பராமரிப்பது சரியான கஷ்டமாக உள்ளது . அதிகமான தூசுகள் வெளியேறி எங்கேயும் வெளியில் சென்று வந்தால் தலை பிசுபிசு என்று ஒட்டுகிறது . முடி உதிர்வதைத் தடுக்கவும், நீண்ட நெடிய கூந்தலைப் பெற பொடுகின் தொல்லை இல்லாமல் இருப்பது அவசியம்.

பொடுகு என்பது ஒருவகை நுண்ணிய காரணிகளால் தலையில் உண்டாகும் நோய். இந்த நோய் தாக்கினால் தலையில் அரிப்பு ஏற்படும். அந்த அரிப்பு உள்ள இடத்தை சொறிந்தால் தவிடு போல் தலையிலிருந்து உதிரும். பின் அரிப்பானது தலை முழுவதும் பரவி சொரியச் செய்துவிடும். அந்த இடங்கள் வெண்மையாய் சாம்பல் பூத்தது போல் தோன்றி முடி உதிர ஆரம்பிக்கும். வெள்ளை படை போல இருக்கும். பெண்களுக்கு தான் இந்த தொல்லை என்றால் சில ஆண்களுக்கும் இந்த பொடுகு தொல்லை இருக்கிறது.

பொடுகு தலையில் இருந்தால் தலை மயிரும் கொட்ட தொடங்குகிறது . பொடுகை இல்லாமல் செய்தால் தான் தலைமயிர் கொட்டுவது நிற்கும் . எனவே பொடுகு வராமல் தடுக்க சில வழிகள் உண்டு. வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். தலையணை உறை சுத்தமானதாக இருக்க வேண்டும். பாவிக்கும் சீப்பை மூன்று நாட்களுக்கு ஒருதடவை சுத்தம் செய்ய வேண்டும். அதிகமாக தண்ணீர் குடிக்கவும். எண்ணெய் பதார்த்தங்கள் உண்பதை குறைக்கவும். துவாயை வாரம் ஒருதடவை அலசவும். வாரம் இரு தடவை தலைக்கு சீயாக்காய், சம்போ போட்டு முழுக வேண்டும். தவறான உணவு பழக்கம், அதிக மன அழுத்தம் கூடாது .


பொடுகு தொல்லை நீங்க வேண்டுமா?


கூந்தல் உதிருவதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று, பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக தலையில் அரிப்பு போன்றவை ஏற்படும். இது போன்ற பொடுகு பிரச்னையால் அவதிப்படுபவரா நீங்கள்? இதோ உங்களுக்காக, சில டிப்ஸ்…

*மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.

*வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகு தொல்லை நீங்கும்.

*தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.

*வேப்பிலை கொழுந்து, துளசி ஆகியவற்றை நைசாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

*வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறைந்து போகும்.

* எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

*தலைக்கு குளிக்கும் போது, கடைசியாக குளிக்கும் தண்ணீரில், வினிகர் கலந்து குளித்தால், பொடுகு நீங்கும்.

*நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர பொடுகு நீங்கும்.

*வாரம் ஒரு முறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகு தொல்லை நீங்கும்.

*தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்னை நீங்கும்.

*தேங்காய் பால் எடுத்த பின் கையை தலையில் நன்றாகத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு, மறைந்து விடும்.

*முதல்நாள் சாதம் வடித்த தண்ணீரை எடுத்து வைத்து, மறுநாள் அதை தலையில் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.

*தயிர், முட்டை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும்.

*துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.


இப்படி இருந்தால் பொடுகு வருவதை கட்டுப்படுத்தலாம் .


மேலும் அழகு குறிப்பு

Tags : பொடுகு, தொல்லை, நீங்க, வேண்டுமா, பொடுகு தொல்லை நீங்க வேண்டுமா?, poaduku thollai neenka vaendumaa?

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]