மொழித்தெரிவு :
தமிழ்
English

கூந்தல் பராமரிப்பு குறிப்புகள்

koonthal paraamarippu kurippukal oru kai alavu vaeppilai eduththu naalu kap thanneeril nanku kothikkavidavum. antha thanneeraal

கூந்தல் பராமரிப்பு குறிப்புகள்
12

1. ஒரு கை அளவு வேப்பிலை எடுத்து நாலு கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடவும். அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால் பொடுகு வராமல் தடுக்கலாம் .

2. வினிகரை தலையில் தடவி குளித்து வந்தால் பொடுகு தொல்லை குறையும் .

3.சுடு தண்ணீரில் அடிக்கடி தலை குளிப்பதை தவிர்க்கவும் .

4. வெந்தயம், வேப்பிலை, கறிவேப்பிலை, பாசிப்பயறு, ஆவாரம்பூ இவை எல்லாவற்றையும் வெயிலில் காயவைத்து மிஷினில் கொடுத்து மைய அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை ஷாம்பூவுக்கு பதிலாக வாரம் இருமுறை கூந்தலில் தேய்த்து அலச, உங்கள் கூந்தல் பளபளப்பாகும்.

5. ஹேர் டிரையர் அடிக்கடி உபயோகித்தால் தலை வறண்டு, முடியின் வேர்கள் பழுதடைந்து விடும். அதிகம் கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ மற்றும் ஹேர் கலர் உபயோகிப்பதை தவிர்த்து கொள்ளுவது நல்லது.

6. ஆலிவ் எண்ணையை இரவு படுக்கும் முன் தலையில் தடவி ஊறவிட்டு மறுநாள் காலையில் அலசினால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

7. தலைக்கு குளித்த பின்பு ஒரு கப் சுடு தண்ணிரில் 1/2 கப் வினிகரை கலந்து தலையை அலசவும் அப்படியே துண்டால் தலையை கட்டி கொள்ளவும். 15 நிமிடத்திற்கு ஊறவைக்கவும் பின்பு தலையை பேன் சீப்பால் சீவினால் தலையில் இருக்கும் ஈறு எல்லாம் வந்து விடும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் பேன் தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.

8. முட்டையின் வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து ,ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் கூந்தல் பளபளப்பாகும்.

9. முடி உதிர்வதை தடுக்க அதிகம் ஐயன் மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்த, உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும்.

10. இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக்கு எண்ணையே தடவுவது கிடையாது .அது முற்றிலும் தவறு. தலைக்கு தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும். அதிகம் எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.

11. எண்ணெய் குளியல் மிகவும் அவசியம். சிறிது நல்லெண்ணையில் இரண்டு மிளகு, பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறிது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும். முடி உதிர்வதையும் தடுக்கலாம்.

12. கறிவேப்பில்லை மற்றும் மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இள நரையை தடுக்கலாம்


மேலும் அழகு குறிப்பு

Tags : கூந்தல், பராமரிப்பு, குறிப்புகள், கூந்தல் பராமரிப்பு குறிப்புகள், koonthal paraamarippu kurippukal

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]