மொழித்தெரிவு :
தமிழ்
English


முகபுத்தக நண்பர்களே.........

mukapuththaka nanparkalae......... anpaana mukapuththaka nanparkalae anpaana vaendukoal unkal profile neenkal unkalathu pukaippadankal poaduvathai thavirunkal ellaam unkal nanmaikkae ...

முகபுத்தக நண்பர்களே.........
நீங்கள் வலையில் மேய்ந்து கொண்டிருக்கும் போது பாலியல் டேட்டின் தளத்தில் அல்லது அதன் விளம்பரத்தில் உங்களது புகைப்படத்தைப் பார்த்தால் எப்படி இருக்கும்.

நீ என்ன லூசா ? என்று என்னைப் பார்த்து நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் இதை மறுக்க முடியாத உண்மை. பேஸ்புக்கில் இருந்து இதுவரை 250,000 உறுப்பினர்களின் விவரங்களை டேட்டிங்க தளங்கள் திருடி உள்ள செய்தி வெளியாகி உள்ளது.

லவ்லி பேசஸ் என்னும் இணையதளம் சமீபத்தில் வெளியானது. இதில் இப்படியாக பேஸ்புக் பக்கங்களில் இருந்து பல்லாயிரக் கணக்கானோரின் விவரங்களைத் திருடி வெளியிட்டு இருந்தனர். இதனை பேஸ்புக் நிறுவனத்தால் தடுக்கவே முடியாது என்பது இன்னொரு வேடிக்கையான விசயமாகும்.

" உறுப்பினர்களின் விவரங்களைத் திருடுவது எமதுக் கொள்கைகளின் மீறலாலும் " என பேஸ்புக்கின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான பேரி சச்னிட் கூறினார். இவ்வாறு அத்துமீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இருந்தாலும் இப்படி இணையத்தில் இருந்து உறுப்பினர்களின் விவரங்களை சுடுபவர்களை முற்றாக ஒன்றும் செய்ய முடியாத நிலையே உண்மையாக இருக்கிறது. காரணம் இவ்விவரங்கள் அனைத்தும் எதோ ஒருவகையில் பொது உடைமையாக இருப்பதே ! இன்னொரு வேடிக்கையான சங்கதி என்னவென்றால், பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் 2003-களில் ஹார்வார்ட்டில் படித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் பள்ளியில் தனது தோழர்களின் புகைப்படங்களை பள்ளி சேர்வரில் பகிரவும், அதனை அனைவரும் பார்க்கக் கூடிய பேஸ்மாஹ் என்னும் நுட்பத்தைப் புகுத்தினார்.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016
அது பின்னர், பள்ளியில் இருக்கும் அனைத்து ஆண்/பெண் புகைப்படங்களை உருவி வெளியிட்டு அதில் எது சிறந்தது என மதிப்பீடு போடும் தளமாக மாறியது, பிற்காலத்தில் அதுதான் பேஸ்புக்காக உருமாறி வந்தது.

இப்போது சொல்லுங்கள் ! பேஸ்புக்கில் இருந்து திருடுபவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை சொல்ல இந்த சம்பவங்கள் போதாதா ? " மார்க் உன்னிடம் இருந்து தான் இதைக் ( திருட்டைக் ) கற்றுக் கொண்டோம் " என்பார்கள்.

பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்களும், அல்லது உங்களது வயதுநிரம்பாத பிள்ளைகள் கணக்கு வைத்திருந்தாலும், கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது. பின்னாளில் வரன் தேடும் தளங்களில் மட்டுமில்லாமல் டேட்டிங்க் தளங்களிலும் உங்கள் புகைப்படங்கள்

அன்பான முகபுத்தக நண்பர்களே அன்பான வேண்டுகோள் உங்கள் profile நீங்கள் உங்களது புகைப்படங்கள் போடுவதை தவிருங்கள் எல்லாம் உங்கள் நன்மைக்கே ... உங்கள் புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தப்படலாம் ஆகவே உங்களுக்கோர் அன்பான வேண்டுகோள் .......... "வருமுன் காப்போம் "

நண்பர் ஒருவரின் முகப்புத்தகத்தில் இருந்தது


மேலும் செய்திகள்

Tags : முகபுத்தக, நண்பர்களே, , முகபுத்தக நண்பர்களே......... , mukapuththaka nanparkalae.........

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]