மொழித்தெரிவு :
தமிழ்
English


வாழ்க்கை

vaalkkai unkal vaalkkaiyai neenkal virumpum vithamaaka amaiththuk kollum chakthi unkalidamae irukkirathu.

வாழ்க்கை

இந்த உலகில் நீங்கள் நினைத்தது போலவே 100% யாரும் இருப்பதில்லை. வேடிக்கை என்னவென்றால், நீங்கள் நினைப்பதுபோல நீங்களே இருப்பதில்லை. அதுதான் உங்கள் பிரச்சினை. நீங்கள் எந்தச் சூழலிலும் உள்ளே ஆனந்தமாக இருப்பதென்று முடிவு செய்தால் நிச்சயம் முடியும். ஆனால், உள்ளே இருப்பது என்னவென்று பெரும்பாலானவர்கள் உணர்வதில்லை.

பலரும் தங்களுக்குள் மறைந்து கிடக்கும் விஷயங்களின் மதிப்பு தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். விழிப்புணர்வுடன் பார்த்தால் உங்கள் மனம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். நீங்கள் அதிசயம் என்று தனியாக எதையும் நிகழ்த்த வேண்டிய அவசியமில்லை. விழிப்புணர்வுடனும் முழுஈடுபாட்டுடனும் செய்தால் எல்லா செயல்களும் அதிசயங்கள்தான்.

எங்கிருந்தோ உங்கள் உணவு வருகிறது. அதை நீங்கள் பயிராக்கவில்லை. ஆனால் அந்த உணவை எடுத்து வாயில் போட்டதும் அது உங்களில் ஒரு பகுதியாகிறது. கணப்பொழுதுக்குள் ஒரு கவளம் மனிதனாகிவிட்டது. உங்களுக் குள்ளேயே இருப்பது அற்புதம். அதை உணராமல் வாழ்வது ஆபாசம். உங்களுக்குள் இருக்கும் சக்தியை செயல்படுத்தும் தொழில் நுட்பத்துக்குத்தான் ஆன்மீகம் என்று பெயர். பலர், தங்களுக்குள் இருக்கும் சக்தியை செயல்படுத்தக்கூட எங்கிருந்தோ கட்டளை வருமென்று காத்திருக்கிறார்கள்.

எதை நீங்கள் உங்களுக்கான செய்தியாக எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதில்தான் எல்லாம் இருக்கிறது, ஒருவர் தவம் செய்யலாம் என்று காட்டுக்குள் போகத் தீர்மானித்தார். அங்கிருந்து உணவுக்கு வெளியே வரவேண்டுமா என்று யோசித்த போது, அவர் பார்வையில் ஊனமுற்ற நரி ஒன்று தென்பட்டது. அதனால் அசைய முடியாது. உணவு தேடி வேட்டையாட முடியாது. ஆனால் அது பட்டினி கிடப்பது மாதிரியும் தெரியவில்லை. கொழுத்த நரியாகத்தான் இருந்தது. உணவுக்கு என்ன செய்கிறதென்று இந்த மனிதர் மறைந்திருந்து பார்த்தார். சிறிது நேரத்தில் அங்கே ஒரு சிங்கம் வந்தது. ஒரு மாமிசத் துண்டைக் கொண்டு வந்து நரியின் முன் போட்டது. தனக்குக் கடவுளின் செய்தி கிடைத்துவிட்டதாக இந்த மனிதர் அகமகிழ்ந்தார்.

தனக்கான உணவு, தானே வரும் என்று தவம் செய்ய உட்கார்ந்தார். நாட்கள் ஓடின. யாரும் உணவு கொண்டு வரவில்லை. பசியால் சுருண்டு கிடந்த அவரை அந்தப் பக்கமாக வந்த யோகி ஒருவர் கண்டார். என்ன நடந்தது என்று கேட்டறிந்தார்.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

பிறகு அந்த யோகி சொன்னார், "நடந்த சம்பவத்தில் இரண்டு செய்திகள் இருக்கின்றன. பசித்திருந்த நரி. பகிர்ந்து உண்ட சிங்கம். நீ ஏன் உன்னை நரியின் இடத்தில் வைத்துப் பார்த்தாய். நீ சிங்கத்தின் நிலைப்பாட்டை எடுத்திருக்கலாமே" என்றார்.

இதேபோல் இன்னொரு சம்பவம். ஒரு குருவிடம் பயின்ற சீடர்கள் எதிர்பாராத விதமாக வேறொரு யோகியை சந்தித்தார்கள். அவரிடம், "வாழ்க்கை என்றால் என்ன?" என்று கேட்டார்கள்.
அதற்கு அந்த யோகி, "வாழ்க்கை என்பது மல்லிகைப் பூவின் மெல்லிய வாசனை போன்றது" என்றார். வந்தவர்கள் அதிர்ந்து போனார்கள். "சுவாமி! எங்கள் குருநாதர், வாழ்க்கை என்பது குத்துகிற முட்களைப்போல் கொடுமையானது என்று கூறினாரே!" என்றார்கள். யோகி சிரித்துக் கொண்டே சொன்னார், "அவர் சொன்னது அவருடைய வாழ்க்கை. நான் சொன்னது என்னுடைய வாழ்க்கை" என்று.

"உங்கள் வாழ்க்கையை நீங்கள் விரும்பும் விதமாக அமைத்துக் கொள்ளும் சக்தி உங்களிடமே இருக்கிறது.


மேலும் சிறப்புக் கட்டுரைகள்

Tags : வாழ்க்கை, வாழ்க்கை, vaalkkai

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]