மொழித்தெரிவு :
தமிழ்
English

காதல்

Kadhal koadi minnalaay… kollai malaraay… koayil theepamaay… kannemaikkum nodiyinel…

காதல்
8

பணம் பார்த்து வருவது இல்லை - பாசமுள்ள
மனம் பார்த்து வருவதே காதல்.

நிறம் பார்த்து வருவது இல்லை – நேசமுள்ள
நெஞ்சம் பார்த்து வருவதே காதல்.

உருவம் பார்த்து வருவது இல்லை – உயிருள்ள
உணர்வுகள் பார்த்து வருவதே காதல்.

தரம் பார்த்து வருவது இல்லை – தயக்கமில்லா
தைரியம் பார்த்து வருவதே காதல்.

இனம் பார்த்து வருவது இல்லை – ஈரமுள்ள
இதயம் பார்த்து வருவதே காதல்.

மதம் பார்த்து வருவது இல்லை – மரணமில்லா
மனிதம் பார்த்து வருவதே காதல்.

காரணம் இல்லாமல்.. காரியமேதும் இல்லாமல்…
கள்ளங்கபடம் துளி கூட இல்லாமல்…

கோடி மின்னலாய்… கொள்ளை மலராய்… கோயில் தீபமாய்…
கண்ணிமைக்கும் நொடியினில்… வந்திறங்குவதும் கூட…
உன்னதமான காதலே…


மேலும் காதல்

Tags : காதல், காதல், Kadhal

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]