மொழித்தெரிவு :
தமிழ்
English

ஏனடி..?

aenadi..? pennae..! thodarnthu elutha mudiyaamal eluththukkalai alikkinrathu en kanneer thulikal, thodar kathaiyaay eluthukinraen

ஏனடி..?
10

இறுதிக் கடிதம் கண்டவுடன்
இறுக்கி மூடிய கண்களுக்குள்
மெல்லக் கசியும் கண்ணீரை
ஒரு கரம் துடைக்க
மறு கரம் கொண்டு
வரைகின்றேன் மடலொன்று..........

 

மறந்துவிடு என்று
முடித்துவிட்டாய் மடலை,
மறக்கும் வழி சொல்லாமல்
மணந்து கொண்டது எவனை..?( யாரை)

 

பக்கம் பக்கமாய் கவியெழுதி
பார்வையாலே கதை பேசி
உதடு தடவி உச்சரித்த வார்த்தைகள்
மிச்சமின்றிக் கேட்கின்றது.
அச்சமின்றிப் போனதனால்................
மார்பில் முகம் வைத்து - நீ
இழுத்து விட்ட மூச்சு
நெருந்தி முள்ளாய் ஆச்சு,
நெருப்பில் வெந்த புண்ணாக
இதயம் நொந்து போச்சு.

 

வார்த்தைக்கு நூறு முறை
கண்ணா எனச் சொல்லி
கன்னம் தொட்டு தடவி
கண்ணீரை மட்டும்
வரவழைத்து சென்றாயே..
ஊற்றெடுக்காது இறுக்கி
மேட்டு நிலமாய் காய்ந்து போன
என் கண்களுக்கு
அருவியாய்ப் பாயுதடி கண்ணீர் ஆறு.

 

மீசை வளராத வயதினிலே
காதல் வளர்த்த பாவத்துக்கு
பார்வையில்லா குருடரெல்லாம்
பைத்தியக் காரன் என்கின்றார்கள்.
பள்ளியறைக் காலத்திலே
பருவமாகாத வயதினிலே
பாசங்களைப் பகிர்ந்து கொண்ட
ஆசை முத்தங்களை மறந்தாயா..?

 

காதல் மட்டும் காயமில்லை,
நெஞ்சம் ஏனோ வலிக்கின்றது.
கண்ணீர் மட்டும் சோகமல்ல,
கண்கள் ஏனோ தவிக்கின்றது.
ஒன்றாகச் சேர்வோமென்று
ஓயாமல் பேசிவிட்டு
இரண்டாகப் பிரிந்து நீயும்
தாலி வேலி போட்டதேனடி..?

 

மனதில் குடியிருந்து மணம் முடித்து சென்றவளே..!
மண நாள் விழாவிற்கு என்னை மறந்துவிட்டாய் ஏனடி..?

 

முடியாத சிறுகதைக்கு முற்றுப் புள்ளிவைத்தாய்
முள்ளில்லா மல்லிகையின் முகத்தை நீயும் கிழித்துவிட்டாய்.

 

பெண்ணே..!
தொடர்ந்து எழுத முடியாமல்
எழுத்துக்களை அழிக்கின்றது
என் கண்ணீர் துளிகள்,
தொடர் கதையாய் எழுதுகின்றேன்
உன்னை நினைத்து சிறு கவி.......

 

மனம் வாழ்த்தி சொல்கின்றேன்
மணம் முடித்து சென்றாலும்
மகிழ்வாய் நீ வாழ்க......
நலமுடன் சேர்ந்து ...... குடும்பம் புகழ......
நலமோடு நீ வாழ்க..........

இதய ப்ரியன்


மேலும் காதல்

Tags : ஏனடி, ஏனடி..?, aenadi..?

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]