மொழித்தெரிவு :
தமிழ்
English

இளைஞனே எழுந்து நில்!

ilaijanae elunthu nel! ikalchchi chorkal varumpoathu manetha iyalpudan athanai nee poakku! karunaiyai nejchil vaiththidu! kadamai unarvai poarridu!

இளைஞனே எழுந்து நில்!
2

இளைஞனே எழுந்து நில்!
துவண்டது போதும்!
துன்பங்களில் புரண்டது போதும்!
இனி நீ எழுது உனக்கென ஒரு வேதம்!
சாதனை என்பது உன் இலக்கு!
இடை தடங்கல் அனைத்தையும்
நீ விலக்கு! உன் எதிர்காலத்திற்கு
நீயே ஒளி விளக்கு!

இகழ்ச்சி சொற்கள் வரும்போது
மனித இயல்புடன் அதனை நீ போக்கு!
கருணையை நெஞ்சில் வைத்திடு!
கடமை உணர்வை போற்றிடு!
ஊழலை யெல்லாம் கலைத்திட
உண்மையையே உறுதியாய் கொண்டிடு!
பொறுப்புகள் உன்னிடம் வரும்போது
புன்னகையோடு அதனை ஏற்றிடு!
வளமான தேசத்தை உருவாக்க
வைராக்கியத்துடன் நீ போராடு!


மேலும் வாழ்க்கை

Tags : இளைஞனே, எழுந்து, நில், இளைஞனே எழுந்து நில்!, ilaijanae elunthu nel!

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]