மொழித்தெரிவு :
தமிழ்
English

தமிழ் .....

thamil ..... neenkal mikakkodumaiyaaka maarikondirukkireerkal. athu unkalukku theriyavillai. intha nelai neediththaal neenkal oru puthiya inamaaka maarividuveerkal.

தமிழ் .....
11இங்கே தமிழ் அழிந்து கொண்டிருக்கிறது. சாதாரணமாக பேசும்போதே "அங்கே மீட் பண்ணுவோம்" என்கிறோம். சந்தியை கார்னர் என்கிறோம். பொறு என்பதை "வெயிட்" பண்ணு என்கிறோம்.

*நீங்கள் ஒன்றை மறந்துவிடக்கூடாது இந்தியாவிலுள்ள 26 மாநிலங்களிலும் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழில்தான் பேசியிருக்கிறார்கள். இதை அம்பேத்கர் சொல்லியிருக்கிறார். இன்றோ ஒரே ஒரு மாநிலத்தில்தான் தமிழ். 25 மாநிலத்தில் தமிழை எப்படி தொலைத்தோம்.

*சமஸ்கிருதம் தமிழோடு கலந்து கலந்து மொழி மாறி இனம் மாறி தொலைந்துபோனோம். கன்னடர்களாக, தெலுங்கர்களாக மாறியதெல்லாம் பின்னால்தான். அதற்கும் முன்பு குஜராத்தியாக அஸாமியாக மாறிப்போனோம். வடக்கில் வாழ்பவர் ஆரியர் என்று சொல்லப்பட்டபோது பாவாணர் அவர்கள் ஆரியர்கள் அல்ல வட திராவிடர்கள் என்று சொன்னதையும் நினைத்துபார்க்க வேண்டும். முலாயம்சிங் என்ன ஆரியரா. இயா என்றால் காடு. காட்டில் வாழ்பவன். இடையர் குலத்தை சேர்ந்தவன். முல்லை நிலத்தைச் சேர்ந்தவன். பழைய தமிழர்கள். பூலான்தேவி என்ன ஆரியரா. இந்த மண்ணில் வாழ்ந்தவர். தமிழச்சி. அந்த வழி வந்தவள். அப்படியானால் ஆரியர்கள் யார்? வடக்கிலும் தெற்கிலும் அக்கிரகாரங்களில் வாழ்கிறவர்கள்தான் ஆரியர்கள்.

எப்படி மாறினோம் நமக்கு தெரியவில்லை. இன்று நீங்கள் தமிழில் ஆங்கிலத்தை கலந்து பேசுகிறீர்கள். தெரிந்தே பேசுகிறீர்கள். சொல்லச் சொல்ல பேசுகிறீர்கள். தொலைக்காட்சியை பார்க்க முடியவில்லை. தமிழ் செத்துக்கொண்டிருக்கிறது. தமிழன் தெரிகிறான். தெலுங்கன் தெரிகிறான். நடுவில் தமிழன் தெலுங்கனாக மாறியது ஒருவருக்கும் தெரியவில்லை. நாம் தமிங்கிலர்களாக மாறிக்கொண்டிருக்கிறோம்.

டார்வின் சொன்னதுபோல் குரங்கிலிருந்து மனிதன் பிறக்கிறான். குரங்கு தெரிகிறது. மனிதன் தெரிகிறான். குரங்கு மனிதனாக மாறிய அந்த இடைப்பட்ட காலம் தெரியவில்லை. நீங்கள் மிகக்கொடுமையாக மாறிகொண்டிருக்கிறீர்கள். அது உங்களுக்கு தெரியவில்லை. இந்த நிலை நீடித்தால் நீங்கள் ஒரு புதிய இனமாக மாறிவிடுவீர்கள். தமிழனுக்கு இருக்கிற இந்த கடைசி மாநிலமும் இல்லாது போய்விடும்.

தமிழ் இலக்கியத்தில் அகம் புறம் என்று இரண்டு உண்டு. இங்கே காதலைப்பற்றி சொல்லுகிறபோது சைட் என்கிறான். காதல் என்றால் சைட் சண்டை என்றால் பைட் . தமிழ் திரைப்படத்தில் ஒரு படத்திலாவது நாயகன் நாயகியை பார்த்து நான் உன்னை விரும்புகிறேன், உன்னை எனக்கு எனக்கு பிடிச்சிருக்கு என்று சொல்லுகிறானா. ஐ லவ் யூ என்கிறான். இந்த ஐ லவ் யூக்கான தேவை தமிழச்சிக்கு எப்படி, ஏன் வந்தது. இந்த தமிழினம் தலை நிமிர்வது எப்படி. வெள்ளைக்காரன் சொல்வானா தன் காதலியிடம் நான் உன்னை காதலிக்கிறேன் என்று தமிழில். பிரெஞ்சில், ஸ்பானிஷ்...உலகில் உள்ள எந்த மொழிக்காரனாவது சொல்வானா. ஆங்கிலேயன் உங்களுக்கு...ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்று கட்டளை போடுகிறானா. இல்லையே, பிறகு ஏன்? டெல்லி அரசு கட்டளை போட்டிருக்கிறதா.

நீங்களாக உங்கள் தலையில் மண்ணை போட்டுக்கொள்ள தேவை என்ன? உலகில் ஹீப்ரு மொழி பேசுகிறவனுக்கு இஸ்ரேல் இருக்கிறது. கிரேக்க மொழி பேசுகிறவனுக்கு கிரேக்க அரசு இருக்கிறது. சீன மொழி பேசுகிறவனுக்கு சீன அரசு இருக்கிறது. இந்த மொழிக்கெல்லாம் மூத்த மொழி தமிழ் மொழி அதற்கென்று ஒரு நாடு. ஒரு அரசு இருக்கிறதா.

*மார்கழி 23 (2011)-ல் சீனா ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கிறது. பத்திரிக்கை, வலைதளம், பதிப்பகங்கள், புத்தகங்கள், இவற்றில் எல்லாம் சீனமொழியோடு ஆங்கிலம் கலந்தால் மூன்றாண்டு சிறை தண்டனை என்று சில வாரங்களுக்கு முன்பு சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஊடகத்தில் தமிழ் மொழியில் ஆங்கிலச் சொல் எங்கு கலந்தாலும் ஐந்து ஆண்டு சிறை தண்டனை என்கிற சட்டம் கொண்டு வரவேண்டும். இந்த மண் நம் மொழியை இழந்துவிட்டால் இந்த மண் தன்னுடைய தேசிய இனத்தன்மையை இழந்துவிடும். ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு நாம் தமிழர்களாகவே இருக்கமாட்டோம்.ஒரு ஆங்கில நாளிதழில் ஒரு செய்தி வடநாட்டில் ஆங்கில தெய்வத்திற்கு எவனோ ஒருவன் கோயில் கட்டியிருக்கிறான்.

ஆங்கிலத்தை வளர்ப்பதற்காக அவன் எதையோ கட்டி நாசமாகிவிட்டு போகிறான். ஆனால் அதனுடைய சகோதர அமைப்பை தமிழகத்தில் அமைக்கப்போவதாக சொல்லியிருக்கிறான். கட்டப்போகிறீர்களா? ஆகவே, மிக மிக விழிப்புடன் உங்களுடைய இனத்தை, மொழியை காப்பாற்றுங்கள் என்று உங்கள் கால்களை பிடித்து கெஞ்சுகிறேன்.

நன்றி: புதிய பார்வை


மேலும் கருத்துக்களம்

Tags : , தமிழ், , தமிழ் ....., thamil .....

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]