மொழித்தெரிவு :
தமிழ்
English


காதலிக்க உண்டு பல வழிகள்

Kadhalikka undu pala valikal Kadhalikka undu pala valikal Kadhalil undu pala valikal! Kadhali varum vali thaedi kankalil vali, Kadhali varum vali meethu vili vaiththu nadanthu kaalkalil vali,

காதலிக்க உண்டு பல வழிகள்
காதலிக்க உண்டு பல வழிகள்
காதலில் உண்டு பல வலிகள்!
காதலி வரும் வழி தேடி கண்களில் வலி,
காதலி வரும் வழி மீது விழி வைத்து நடந்து கால்களில் வலி,

காதலி என்னைப் பார்க்காமல் சென்றதும்,
மனதில் வலி,
பாரம் தாங்காமல் மனதில்
கண்களால் காதல் உரைத்தேன்,
காதலி மனம் இழகியது
காதல் கைகூடியது,
வலிகள் சுகமானது.

காதலில் வலிகள் இருக்கும்
என்றிருந்த என்னை,
காதலித்தால் வலிகள் தான்
என்றுணர்தினாள் காதலி,

அவளுக்காகவே துடித்துக் கொண்டிருந்த
இதயத்தை மறந்து போனாள்,
அவளைக் குளிரிலும் வெயிலிலும்
காத்த போர்வையையும் மறந்து போனாள்,

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016
அவள் கால்களுக்கு
செருப்பாக தேய்ந்த போது
எனதருமை அவளுக்கு தெரியவில்லை,
அற்ப செருப்பை வேரோருவர்
திருடிச் சென்றதும் வருத்தப் படுகிறாள்,
செருப்பிற்காக அல்ல,
அவள் கால்கள் வெயிலிலும் மழையிலும்
கஷ்டப்படுமே என்பதற்காக !!

அவளை சந்தோஷப்படுதுவதற்காக
நான் படும் வலிகள் தான் எனக்கு சந்தோஷம்,
அவளுக்கோ நான் படும் வலிகள் தான் சந்தோஷம்.
வலிகளை வெறுத்தேன், காதலையல்ல ,
அவளோகாதலனை வெறுத்தாள்,
நான் படும் வலிகளையல்ல.

இன்று உணர்ந்தேன்,
காதலால் வலிகள் அல்ல,
காதலியால் தான் வலிகள்


மேலும் காதல்

Tags : காதலிக்க, உண்டு, பல, வழிகள், காதலிக்க உண்டு பல வழிகள், Kadhalikka undu pala valikal

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]