மொழித்தெரிவு :
தமிழ்
English

புற்று நோய் ஏற்பட்டு உள்ளதா?

purru nooy aerpaddu ullathaa? manetharkalukku kudal purru nooy aerpaddu ullathaa? illaiyaa? enpathai 90 chathaveetham thulliyamaaka kandu ariyum chakthi naaykalukku undu enru maruththuva ulakam kandupidiththu ullathu

புற்று நோய் ஏற்பட்டு உள்ளதா?
7மனிதர்களுக்கு குடல் புற்று நோய் ஏற்பட்டு உள்ளதா? இல்லையா? என்பதை 90 சதவீதம் துல்லியமாக கண்டு அறியும் சக்தி நாய்களுக்கு உண்டு என்று மருத்துவ உலகம் கண்டுபிடித்து உள்ளது.

இதுவரை காலமும் நாய்களின் மோப்பசக்தியானது போதைப்பொருட்கள் , வெடிபொருட்கள் என்பனவற்றைக் கண்டுபிடிப்பதற்கே உதவி வந்தன.

எனினும் அண்மைக்காலமாக நாய்களின் மோப்ப சக்தியின் மூலம் நோய்களைக் கண்டறிய முடியும் என்பது தொடர்பில் அதிகளவான ஆராய்ச்சிகள் இடம் பெற்றுவருகின்றன.

நாய்களின் மோப்ப சக்தி மூலம் குடல்புற்று நோயை கண்டறியலாம் என ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாய்களின் உணர் திறன் மனிதர்களின் உணர் திறனை விட 1000 மடங்கு அதிகம். ஜப்பானிய விஞ்ஞானிகள் லெபரேடர் வகையைச் சார்ந்த நாய்களை வைத்து குடல் புற்று நோயைக்கண்டறிவதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த ஆராய்ச்சிக்கு பின் இந்த நாய் மனிதர்களுக்கு வரும் குடல் புற்று நோயினை சரியாக கண்டுபிடிப்பதாக இவர்கள் தெரிவித்துள்ளனர். நாய் கண்டுபிடிப்பவற்றில் ஏறத்தாழ 98 சதவிகிதம் சரியாக இருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். புற்றுநோய்க்கு ஆளானவர்களின் மூச்சு மற்றும் அவர்களின் மலம் ஆகியவற்றிலிருந்து குடல்புற்று நோயை இந்த நாய்கள் கண்டறிகின்றன.

சுவாசத்தினை வைத்து 36 பேர்களில் 33 பேர்களுக்கு குடல் புற்று நோய் இருப்பதை இந்த வகை நாய்கள் சரியாக அடையாளம் காட்டியுள்ளன. அதுபோல் மலத்தின் மாதிரிகளில் இருந்து 38 பேரில் 37 பேருக்கு இந்த நோய் இருப்பதை நாய் கண்டறிந்துள்ளது.

இதன் துல்லியமான கண்டுபிடிப்பிற்காக விஞ்ஞானிகள் இறப்பர் பந்தொன்றினை அந்நாய்க்குப் பரிசளித்துள்ளனர்

எனவே மோப்ப சக்தியால் நாய் குடல் புற்று நோயை அடையாளம் கண்டு விடுகின்றது. நாய்களை கொண்டு இந்நோயை ஆரம்பத்திலேயே அடையாளம் காண முடியும். இதனால் நோயை குணப்படுத்துவது மிகவும் இலகுவாக இருக்கும்.

வேறு உயிர்கொல்லி நோய்களை அடையாளம் காண கூடிய சக்தி நாய்களுக்கு உண்டா? என்பது குறித்து தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


மேலும் செய்திகள்

Tags : புற்று, நோய், ஏற்பட்டு, உள்ளதா, , புற்று நோய் ஏற்பட்டு உள்ளதா? , purru nooy aerpaddu ullathaa?

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]