மொழித்தெரிவு :
தமிழ்
English

எதிரிகள் வேண்டும்...

ethirikal vaendum... unkalukku veliyae ulla ethirikalidam maddumalla unkalukku ullae ulla ethirikalidamum paadam padiyunkal.

எதிரிகள் வேண்டும்...
16எதிரிகள் இல்லாத வாழ்க்கை உப்பில்லா உணவு போன்றது.எதிரிகள் தான் நமது குறைகளை நாம் உணரச் செய்யும் அற்புதமானவர்கள் .

நமது வாழ்வில் எதிரிகள் இல்லை என்றால் மிகவும் கவணமாகஇருக்கவேண்டியதருணம்அடிவருடிகள்உங்களைச்சுற்றிஇருக்கின்றார்கள். அடிவருடிகள் உங்களை குறிப்பிட்ட அளவிற்கு மேல் முன்னேறாமல் பார்த்துக் கொள்வார்கள்

எதிரிகள் என்பவர்கள் யார்?எதிரிகள் வெளியே நமக்கு அப்பால் வெகு துரத்தில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கின்ற நபர்கள் கிடையாது.

அவர்கள் நமக்கு மிக அருகில் நாம் தினம் தோறும் சந்திக்கின்ற நபராக இருக்கலாம்.நமது உறவினர்களாக இருக்கலாம் நமது முன்னால் நண்பர்களாக இருக்கலாம்,நம்முடன் பணிபுரிபவர்களாக இருக்கலாம் .

இவர்களை எப்படி அடையாளம் காண்பது ,நீங்கள் ஒரு இலக்கை நோக்கி உங்களது கவணத்தை செலுத்தி செயல் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள்,உங்களது இலக்கை நீங்கள் எளிதில் அடைய முடியாதபடிக்கு ,தங்களது செயல்களால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ,மூன்றாம் நபர்கள் மூலமாகவோ முட்டுக்கட்டை போடுபவர்கள் .

இவர்கள் வெளிப்படையான எதிரிகள் ,நமது மனதிற்குள்ளேயே இருக்கும் எதிரிகள் கோபம்,பொறாமை,பேராசை,இன்னும் எத்தனையோ இருக்கின்றது.இந்த நமது மனதிற்குள் இருக்கும் எதிரிகள் நேரடியான எதிரிகளுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை.

முதலில் வெளிப்படையான எதிரிகள் பற்றிப் பார்ப்போம் .இவர்கள் எப்படி உருவாகின்றார்கள் நமது மனதில் உள்ள கோபம் ,பொறாமை ,பேராசை, ஆகிய இந்தக் குணங்களை வேறு ஒரு நபர் உணர்ந்து அவற்றை உணராமல் இருக்கும் நம்மை நோக்கி நாம் உணரும் வண்ணம் நம்மை நோக்கி பிரதிபலிப்பவர்கள்.

இவர்கள் தங்களது மனதில் உள்ள கோபம் ,பொறாமை போன்ற உணர்வுகளை உங்களை நோக்கி செலுத்தும் போது உங்கள் மனதில் உள்ள அன்பு ,பண்பு ,பொறுமை போன்ற குனங்களால் அவர்களை நோக்கி அவர்களது குனங்கள் பிரதிபலிக்கப்படுவதால் எதிரிகள் எனப்படும் இவர்கள் உருவாகின்றார்கள்.

எதிரிகள் தோன்றுவது ஒன்றும் புதிது இல்லை ஆனால் இவர்கள் தான் நமது எதிரிகள் என்று நாம் உணராமல் இருப்பது நமது அனுபவின்மை ஆகும் .இவர்கள் தான் நமது எதிரிகள் என்று நாம் உணர்ந்த கணமே நமது வெற்றி ஆரம்பித்து விடுகின்றது .

நமக்குள் உள்ள குறைகளை எளிதில் உணர்ந்தவர்கள் எதிரிகள் ,இவர்கள் சுட்டிக்காட்டுவது நாம் மேம்படுத்த வேண்டிய நமது குறைகள் இவை,இவை தான் என்று.

எனக்கு வாழ்வில் எதிரிகளே இல்லை என்றால் நீங்கள் வாழவே இல்லை ,முன்னேறவே இல்லை,வெந்ததைத் தின்று விதிவந்தால் சாவோம் என்னும் ரகம் .உங்களுக்கு முன்னால் உங்களை முன்னேறிச் செல்லும் எதிரிகளை இனம் தெரியாதவர்கள் என்று அர்த்தம்.

எனக்கு இப்படி எதிரிகள் யாரும் தேவையில்லை நான் இருக்கும் இந்த நிலையே போதுமானது என்று நினைத்தால் ,நீங்கள் தகுதி உள்ளது தான் வாழும் என்னும் இயற்கை விதிகளைப் புறக்கனிக்கின்றீர்கள் என்று தான் பொருள்.

வாழ்க்கை ஓட்டத்தில் நீங்கள் இல்லை என்று பொருள் ,நீங்கள் ஓரம் கட்டப்பட்டு விட்டீர்கள் என்று அர்த்தம்.

எதிரி என்றால் அவனை அடியோடு அழிப்பது ,போரிடுவது என்பது பொருள் அல்ல.எதிரி கற்றுக் கொடுக்கும் யாரும் கற்றுக் கொடுக்காத ,கற்ருக் கொடுக்க முடியாத பாடங்களைக் கற்றுக் கொள் ,உன்னை மேம்படுதிக்கொள் என்றுதான் பொருள்.

எதிரிகள் என்பவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல உணர்ந்து கொள்ளப்பட வேண்டியவர்கள்.எதிரிகளை இதுவரை உணரவில்லை என்றால் தேடுங்கள் .அவர்கள் கற்றுக்கொடுக்கும் பாடங்களைப் படிக்க ஆரம்பியுங்கள்.

உங்களுக்கு வெளியே உள்ள எதிரிகளிடம் மட்டுமல்ல உங்களுக்கு உள்ளே உள்ள எதிரிகளிடமும் பாடம் படியுங்கள்.

punnagaithesam


மேலும் பதிவுகள்

Tags : எதிரிகள், வேண்டும், எதிரிகள் வேண்டும்..., ethirikal vaendum...

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]