மொழித்தெரிவு :
தமிழ்
English


புதிய குள்ள மனிதர்..

puthiya kulla manethar.. tharpoathaiya pathivukalin padi ulakin kullamaana manetharai vida ivar ainthu ankulam kuraivaana uyaraththai appoathu kondiruppaar.

புதிய குள்ள மனிதர்..
இவர் பெயர் ஜன்ரி பாலாவிங் வயது 17 ஆனால் உயரம் 22 அங்குலங்கள் மட்டுமே. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர் தான் விரைவில் உலகின் குள்ளமான மனிதர் என்ற புகழைப் பெறவுள்ளார்.

ஜுன் மாதம் 12ம் திகதி இவர் 18 வயதை அடையும் போது இந்தப் பெருமை அவருக்குக் கிடைக்கும்.

தற்போதைய பதிவுகளின் படி உலகின் குள்ளமான மனிதரை விட இவர் ஐந்து அங்குலம் குறைவான உயரத்தை அப்போது கொண்டிருப்பார்.

தனது முதலாவது பிறந்த நாளைக்குப் பின் இவரின் உடல் உயரம் வளரவே இல்லை என்று கூறப்படுகின்றது.

நடக்கவும் நிற்கவும் சிரமப்பட்டாலும் கூட தனது வருங்கால புகழை எண்ணி மகிழ்ச்சியடைகின்றார் இவர்.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016
இவர் தனது பெற்றோர் மற்றும் மூன்று இளைய சகோதரர்களுடன் வசித்து வருகின்றார். ஆனால் சகோதரர்கள் மூவரும் நல்ல உயரமானவர்கள்.

பிலிப்பைன்ஸின் நோர்டே மாநிலத்தில் ஒரு பின்தங்கிய கிராமத்தில் இவர் வசித்து வருகின்றார்.

13,11 மற்றும் 6 வயதான இவரின் இளைய சகோதரர்கள் பாடசாலை செல்லும் போது இவர் மட்டும் தாயுடன் வீட்டிலேயே இருந்து விடுகின்றார்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இவரைப் பெற்றோர் இடுப்பில் தூக்கியே சுமக்கின்றனர்.

தற்போது உலகின் குள்ளமான மனிதராக இருப்பவர் நேபாளத்தின் கஜேந்திர தாபா மாகா இவரின் உயரம் 26.4 அங்குலம்.


மேலும் செய்திகள்

Tags : புதிய, குள்ள, மனிதர், புதிய குள்ள மனிதர்.., puthiya kulla manethar..

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]