மொழித்தெரிவு :
தமிழ்
English

நீங்களும் பில்கேட்ஸ் ஆக சில யோசனைகள்

neenkalum pilkaeds aaka chila yoachanaikal unkal peyarudan Bill ,Voucher, Reciept, Balance enru ethaiyaavathu inaiththu kollunkal. ithu viraivil neenkal pirapalamaaka palanalikkum.

நீங்களும் பில்கேட்ஸ் ஆக சில யோசனைகள்
9நீங்களும் பில்கேட்ஸ் ஆக சில சீரிய(??!) யோசனைக

நம் வீர்சிங்கும்,பாண்டா சிங்கும் கொஞ்ச நாள் பில்கேட்ஸின் மைக்ரோசா ப்ட் நிறுவனத்தில் அவருடன் பணி புரிந்து விட்டு வந்தார்கள் அல்லவா...அவர்கள் இங்கு பில்கேட்ஸைப் பற்றி தரும் டிப்ஸ்கள் தான் இவை.

1. உங்களுக்கு ஒரு கான்செப்டை பற்றி சிறிதளவு தெரிந்தாலும் கூட அதுபற்றி முழுமையாக தெரிந்தது போல் நிறைய அலட்டி கொள்ளுங்கள்.கூடுமானவரை உங்களை விட கொஞ்சம் விஷயம் தெரிந்தவரை பக்கத்தில் வைத்து கொள்ளாதீர்கள்.அது நிறைய இடைஞ்சலை தந்து விடும்.

2. நீங்கள் தப்பி தவறி ஏதேனும் ஒரு சா ப்ட்வேரில் பிரில்லியண்ட் ஆக இருந்தால் அந்த இரகசியத்தை மற்றவர்களுக்கு புரியாதபடி வெளியிடுங்கள்.

3. உங்கள் பெயருடன் Bill ,Voucher, Reciept, Balance என்று எதையாவது இணைத்து கொள்ளுங்கள். இது விரைவில் நீங்கள் பிரபலமாக பலனளிக்கும்.

4. மிகவும் லூசான பனியன் மற்றும் பர்முடாஸையே அணியுங்கள்.ஜாக்கிரதையாய் மற்றவர் தவறு கண்டுபிடித்துவிட முடியாதபடி english ல் ஏதாவது உளறிக்கொண்டேயிருங்கள்.

5. முடிந்தவரை எப்போதும் தலையை கலைத்து விட்டு கொள்ளுங்கள்.எப்போதும் சிந்தித்து கொண்டிருப்பது போல் முகத்தை வைத்து கொள்ளுங்கள்.கண்ணாடி போட்டு கொள்ளுதல் அவசியம்.

6. ஏதேனும் உங்களுக்கு தெரியாத ஒன்றை பற்றி கேள்வி கேட்கப்பட்டால் கேட்டவரை அலட்சியமாக பாருங்கள்.'இது கூட தெரியாதா..?' என்ற தொனி அதில் இருக்கட்டும்... (உங்களுக்கு தெரியாது என்பது வேறு விஷயம்)

7. உங்களை விட அறிவில் குறைந்தவரை எப்போதும் பக்கத்தில் வைத்துகொள்ளுங்கள். (ஏனென்றால் எப்போதும் பில்கேட்ஸ் எங்கள் பக்கத்திலேயே இருப்பார்.அதை வைத்து சொல்கிறோம்).புதிது புதிதாய் ஏதேனும் சொல்லிக்கொண்டேயிருங்கள்.இது எல்லாவற்றையும் விட விரைவில் பயனளிக்கும்


மேலும் நகைச்சுவை

Tags : நீங்களும், பில்கேட்ஸ், ஆக, சில, யோசனைகள், நீங்களும் பில்கேட்ஸ் ஆக சில யோசனைகள், neenkalum pilkaeds aaka chila yoachanaikal

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]