மொழித்தெரிவு :
தமிழ்
English

பொன்னாங்கண்ணி

poannaankanne puratham, irumpu, chunnaampu chaththukkal vaiddamin cheeyum neraintha inthak keerai kulirchchi tharak koodiyathu

பொன்னாங்கண்ணி
10

தினமும் இந்த கீரையை தினந்தோறும் உண்டு வாழ்வோருக்கு உடல் பொன்போல பளபளப்பாகும் என்பர். புரதம், இரும்பு, சுண்ணாம்பு சத்துக்கள் வைட்டமின் சீயும் நிறைந்த இந்தக் கீரை குளிர்ச்சி தரக் கூடியது. பத்தியக் கீரை இது. உடல் உஷ்ணத்தைத் தணித்து உடலுக்கு பலம் தரவல்ல இந்தக் கீரை சொறி சிரங்குகளை போக்கி மேனியின் அழகைக் கூட்டும். கண்கள் சம்பந்தமான நோய்கள் அனைத்தையும் போக்கி நல்ல பார்வையைத் தரவல்லது இது, மூல நோய், மண்ணீரல் பாதிப்புகள் போக்கும் தன்மை இதற்கு உண்டு.

 

பொன்னாங்கண்ணியில் சீமை பொன்னாங்கண்ணி என்றும், நாட்டுப் பொன்னாங்கண்ணி எனவும் இரு வகை உண்டு. வைட்டமின் ஏ செறிந்த இந்தக் கீரை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் நல்ல பளிச்சென்ற பார்வை கிடைக்கும்.

 

பொன்னாங்கண்ணிக் கீரையின் சாறு எடுத்து நல்லெண்ணையுடன் சேர்ந்து தைலம் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வர கண் எரிச்சல், உடல் உஷ்ணம்- போன்றவைகள் நீங்கி உடல் குளிர்ச்சிப் பெறும். சத்து மிகுந்த நாட்டுப் பொன்னாங்கண்ணிதான் மருத்துவத்திற்குப் பயன்படுவது, பலன் பல கொடுத்து, பலவித நோய்களையும் தீர்க்கும் இந்த கீரையை பகலில் உண்பதுதான் நலன் தரும்.

பொன்னாங்கண்ணிக் கீரைக்கு பொன்னாங்காணி, கொடுப்பை, சீதை என்னும் வேறு பெயர்களும் உண்டு. "பொன்னைக் காடுத்து, பொன்னாங்கண்ணி வாங்கு" என்றும், "பொன்னாம் காம் நீர்" என்று கூறுவதும் நமது நாட்டில் புழங்கி வரும் பழங்காலப் பழமொழிகளாகும். "பொன் - ஆம் - காண் - நீர்" என்றால் இந்தக் கீரையை எவர் ஒருவர் தினசரி தவறாது சாப்பிட்டு வருகிறாரோ அவர் உடல் பொன் போல மின்னும் என்பதேயாகும்.


இந்தக் கீரை வயல் வரப்புகளிலும், கிணற்று மேடுகளிலும், குளம் குட்டைகளில் கரைகளிலும், வாய்க்கால் கரைகளிலும் இயற்கையாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். இது ஈரமான இடங்களில்தான் பயிராகும். ஈரம் இல்லாவிட்டால் வாடி வதங்கி அழிந்துவிடும். பொன்னாங்கண்ணிக் கீரையை வீட்டுத் தோட்டத்திலும், தொட்டிகளிலும் எளிதாக வளர்க்கலாம்.

பொன்னாங்கண்ணியில் பல வகைகள் உள்ளன. ஆனால் அவற்றுள் இரண்டு வகைகள்தான் உணவுக்கும், மருந்துக்கும் பயன்படுகின்றன. இரண்டு வகையான பொன்னாங்கண்ணியிலும் வைட்டமின்கள் குறிப்பாக வைட்டமின் "ஏ"யும் தாதுப்பொருட்களும் அதிக அளவில் உள்ளன.

பொன்னாங்கண்ணிக் கீரை கண் சம்பந்தப்பட்ட வாத காசம், கருவிழி நோய்கள், முதலியவற்றை குணமாக்க வல்லது. இக்கீரையை வெண்ணெய் சர்த்து உண்ண கண் சம்பந்தப்பட்ட 96 வியாதிகள் நீங்கும். இக்கீரையை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர கண் பார்வை மங்கல், சாலேசுவரம் (வெள்ளெழுத்து - 40 வயதில் வருவது), தூரப் பார்வை, திரைப் போட்டு மறைக்கும் கண் படலம் எல்லாம் விலகும்.

இக்கீரையை உண்பதால் வாய்ப்புண், வாய் நாற்றம், ஈரல் நோய், மூலச்சூடு, கை கால் எரிவு, உலர்த்து மேகம், வள்ளை வயிற்றெரிச்சல், வாத தோடம், தேகச்சூடு முதலிய வியாதிகள் நீங்கும். இக்கீரையைப் பூண்டுடன் சேர்த்து வதக்கிச் சாப்பிட மூல நோய் குணமாகும். உடல் வலுப் பெறும். உடலைப் பொன் நிறமாக மாற்றும். இக்கீரையின் தைலத்தை எடுத்து தலை முழுகி வர கண் நோய்களும் வெப்ப நோய்களும் குணமாகும்.

பொன்னாங்கண்ணிக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்ணாடி போட வேண்டிய அவசியம் இருக்காது. பகலில் கூட நட்சத்திரங்களைப் பார்க்கக்கூடிய அளவிற்கு கண் பார்வை தெளிவு பெறும் என்று கிராமப்புற மக்கள் கூறுவார்கள்.

பொன்னாங்கண்ணிக் கீரையை நெய்யில் வதக்கி மிளகும், உப்பும் சேர்த்து துவையல் அரைக்கலாம். இந்தக் கீரையை காம்புடன் சூப்பு தயாரித்தும் குடிக்கலாம். வெண்ணெய் சேர்த்து அவியல் செய்யலாம். துவரம் பருப்பு சேர்த்து பொரித்தும், கூட்டு வைத்தும், சாம்பார் செய்தும் சாப்பிடலாம். இத எந்த வகையில் சமைத்துச் சாப்பிட்டாலும் இதன் உயிர்ச்சத்து குறையாது.


மேலும் மருத்துவ குறிப்புகள்

Tags : பொன்னாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, poannaankanne

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]