மொழித்தெரிவு :
தமிழ்
English


துளசி

thulachi udalil ulla theemai tharum kirumikalai, nunnuyirkalai alikkum aarralullathu thulachi.

துளசி


பன்னெடுங்காலமாக பாரதநாட்டுக் கலாச்சாரத்தில், ஆன்மீகத்தில், இறைவழிபாட்டில் துளசி முக்கியமாக இடம் பெற்றுத் திகழ்கிறது. இதனால் "புனித துளசி" என்று போற்றப்பட்டு வருகின்றது. இப்புனித துளசி பல வழிகளில் இயற்கை மருந்தாகப் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. புனித துளசியின் முக்கிய மருத்துவக் குணங்களைத் தெரிந்து கொண்டு பயன்படுத்தி உடல் நலன் பெறுவோம்.

புனிதமானது

துளசி புனிதமானது என்பதை இதன் தாவர இயல் பெயரான, "ஆசிமம் சாங்டம்" (Occimum sanctum) என்பது நன்கு வலியுறுத்துகிறது. ஆங்கிலத்தில் sanctum என்ற சொல்லிற்கு "புனிதமானது" என்று பொருள்.

இந்தியாவில் 2000 ஆண்டுகளாக துளசி புனிதமாகவும், பல வகைகளின் இயற்கை மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

துளசி குடிநீர்

முதல் நாள் இரவில் ஒரு கைப்பிடி துளசி இலைகளை 3 லிட்டர் தண்ணீரில் இட்டு வைக்கவும். மறுநாள் காலையில் பத்து மணியிலிருந்து இந்த துளசி குடிநீரை, நாள் முழுவதும் வீட்டிலுள்ளோர் அனைவரும் அவ்வப்போது பருகி வரவும். இதனால் உணவு நன்கு ஜீரணிக்கும். பசி ருசி உண்டாகும். குடல் அழற்சி நீங்கும். உடல் குளிர்ச்சி அடையும். உடல் சூடு கணிசமாகத் தணியும். மலச்சிக்கல் ஏற்படாது பாதுகாக்கும். சிறுகுடல், பெருங்குடல் பாதைகளிலுள்ள தீமை தரும் கிருமிகள் அழியும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி வரும்.

துளசி பானம்

அரைகைப்படி துளசி இலைகளை நன்கு சுத்தம் செய்து கழுவி இத்துடன் நான்கு ஏலக்காய், சிறிதளவு பொடித்த சுக்கு, சித்தரத்தை, கால் கிலோ கருப்பட்டி சேர்த்து மூன்று லிட்டர் நீரிலிரிட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கவும். இது துளசி பானம். இதைக் குடித்து வர காய்ச்சலுடன் கூடிய சளித்தொல்லை குணமாகும். ஆரம்ப நிலை ஆஸ்துமா அகலும். இருமலைப் போக்கும். கல்லீரல் கோளாறுகளை நீக்கும். உடல் அசதி, சோர்வு தீரும். சருமத்தில் ஏற்படும் அலர்ஜி குணமாகும்.

துளசி, சுக்கு, மிளகு, கஷாயம்

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

ஒரு கைப்படி அளவு துளசி இலை, சிறிது சுக்கு (பொடித்தது), இரண்டு தேக்கரண்டி மிளகு இவைகளை போதிய அளவு நீரிலிட்டு கஷாயம் செய்து வைத்துக்கொள்ளவும். இதில் கால் தம்ளர் அளவு, மூன்று வேளை குடித்து வர நெஞ்சுச்சளி குணமாகும். மழைக்காலத்தில் ஏற்படும் பல்வேறு நோய்களை நன்கு குணமாக்கும் தன்மை கொண்டது இந்தக் கஷாயம். கைகால் அசதிக்கு அரு மருந்து. மூட்டு வலியைத் தணிக்கும். தலைநீர் கோர்த்தலைப் போக்கும். ஆஸ்துமாவிற்கும் அருமருந்து. மூக்கிலிருந்து நீர் ஒழுகுவதை நிறுத்தும். சாதாரண காய்ச்சலைக் குணப்படுத்தும். தலைவலியைப் போக்கும். வயிற்றுப்பொருமலை வற்றச் செய்யும். நெஞ்சுச்சளியை இளக்கி வெளிப்படுத்தும். குற்றிருமலை குணப்படுத்தும். அஜீரணத்தை அகற்றும். மூட்டு வலியை மாய்க்கும். உடற்சோர்வை நீக்கி உற்சாகம் ஏற்படுத்தும்.

துளசி சீரப்

இரண்டு கைப்பிடி அளவு துளசி இலை, நான்கு ஏலக்காய் இவைகளை இரண்டு லிட்டர் நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எடுக்கவும். இந்த வடி நீருடன் அரை கிலோ வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கலவை சீரப் பதத்திற்கு வந்ததும் இறக்கி நன்கு ஆறினதும் பாட்டிலில் ஊற்றி பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். இதுதான் துளசி சீரப். இந்த சீரப்பை வேளைக்கு மூன்று தேக்கரண்டி வீதம், தினம் காலை, மாலையென இரு வேளை குடித்து வர, நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். கல்லீரல் கோளாறுகளைக் குணப்படுத்தும். பித்தத்தை மொத்தமாய் போக்கும். சளித்தொல்லை குற்றிருமலுக்கு இயற்கை மருந்து இது. ஆரம்ப நிலை இளைப்பு நோயைக் குணப்படுத்தும். தலை நீரேற்றம். தலைவலி இவைகளைத் தணிக்கும். வயிற்றுவலியைக் குணப்படுத்தும். துளசி சீரப் உடல் ஆரோக்கியம் காக்கும் எளிய சீரப் ஆகும்.

நச்சுப்பொருட்களை வெளியேற்றும்

துளசி உடல் உறுப்புக்களின் செயல்பாடுகளைச் சீராக்கும் தன்மையுடையது. இரசாயன மருந்துகளால் உருவாகும் நச்சுப்பொருட்களை உடலில் இருந்து வெளியேற்றுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. எந்த விதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தாத ஒரு சிறந்த இயற்கை மருந்து துளசி.

துளசி ஒரு சிறந்த ஆண்டிபையோட்டிக்

உடலில் உள்ள தீமை தரும் கிருமிகளை, நுண்ணுயிர்களை அழிக்கும் ஆற்றலுள்ளது துளசி. துளசியின் ஆண்டிபையோட்டிக் குணத்தை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கிரேக்க நாட்டு மருத்துவர்கள் அறிந்திருந்தனர்


மேலும் மருத்துவ குறிப்புகள்

Tags : துளசி, துளசி, thulachi

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]