மொழித்தெரிவு :
தமிழ்
English


வாழை இலையில் விருந்து

vaalai ilaiyil virunthu kiraamankalukku chenru vaalai ilaiyil chaappidum poathu athu oru thane ruchi thaan

வாழை இலையில் விருந்து

நமது தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்கு முக்கிய பங்குண்டு . எமது விசேட தினங்களுக்கும் , பண்டிகைகளுக்கும் , விரதங்களுக்கும் நாம் மிகவும் பயன்படுத்துவது வாழை இலையை தான் . முன்னோர்கள் விட்டு சென்ற சில மரபுகளில் இன்னும் தொடர்ந்து கொண்டு இருப்பதில் வாழை இலையும் ஒன்று .

விருந்துகளுக்கும் , கோவில்களில் படைப்புகளுக்கும் பயன்படுத்துவது வாழை இலை தான் . நாம் வாழை இலையில் சாப்பிடும் போது பல நல்ல பயன்களை பெறுகின்றோம் . வாழை இலையில் நாம் சாப்பிடும் போது அது உடம்புக்கு வலிமையை தருகிறது . மிகவும் சுத்தமானது. குளிர்மையானது . இலகுவானது . எமக்கு பசியை இன்னும் தூண்டுகிறது . விச தோஷத்தை போக்குகிறது . மந்தம் வராது. உடலுக்கு நல்லது. இப்படி பல நன்மைகள் கிடைக்கும் போது நாம் வாழை இலையை ஏன் ஒதுக்கி வைப்பான் . அது மிகவும் கூடாது .

அதுவும் கிராமங்களுக்கு சென்று வாழை இலையில் சாப்பிடும் போது அது ஒரு தனி ருசி தான் . அதை நகரங்களில் வசிப்போர் இந்த பாக்கியங்களை இழந்து விடுகின்றனர். கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் வாழை மரங்கள் நிற்கும் . எந்த நிறமும் இலைக்கு பஞ்சம் இருக்காது . நகரத்தில் வசிப்போர் அந்தரத்துக்கு வாழை இலையை தேடினால் கூட கிடைக்காது . அப்படியும் தேடினால் இருபது ரூபாய் , முப்பது ரூபாய்க்கு சில வேளைகளில் கிடைக்கிறது .

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

சில உணவகங்களில் வாழை இலையில் தான் சாப்பாடு பரிமாறுவார்கள் . ஒரு சிலர் விரும்பி உண்கிறார்கள் . ஒரு சிலர் தட்டுகளிலும் , கோப்பைகளிலும் சாப்பிடுவதை விரும்புகிறார்கள் . அவர்களுக்கு வாழை இலையின் மகிமை பற்றி தெரிந்திருக்க மாட்டார்கள் போலும் . நாம் தட்டில் சாப்பிடுவதற்கும் இலையில் சாப்பிடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. தட்டில் சாப்பிடும் உணவை விட இலையில் சாப்பிடும் போது அதன் சுவை இன்னும் அதிகமாகிறது. சாப்பாடும் அதிகமாக நாம் சாப்பிடலாம் . வடிவாக சாப்பிடலாம் .

வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். சாப்பாடு வாழை இலையில் பொதி செய்தால் சாப்பாடு கெடாமலும், மணமாகவும் இருக்கும். வாழை இலையில் சாப்பிடாதவர்கள் ஒரு தடவை நீங்களும் சாப்பிட்டு பாருங்கள். உங்களுக்கும் புரியும் .


மேலும் சிறப்புக் கட்டுரைகள்

Tags : வாழை, இலையில், விருந்து, வாழை இலையில் விருந்து, vaalai ilaiyil virunthu

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]