மொழித்தெரிவு :
தமிழ்
English


ஜப்பான் 8 அடி தூரம் நகர்த்தப்பட்டுள்ளது

jappaan 8 adi thooram nakarththappaddullathu jappaanel naerru aerpadda paariya pookampaththanehl jappaanen pirathaana theevu athan achchil 8 adi (2.4meerrar) thooram nakarththappaddullathaaka

ஜப்பான் 8 அடி தூரம் நகர்த்தப்பட்டுள்ளது
ஜப்பானில் நேற்று ஏற்பட்ட பாரிய பூகம்பத்தனிhல் ஜப்பானின் பிரதான தீவு அதன் அச்சில் 8 அடி (2.4மீற்றர்) தூரம் நகர்த்தப்பட்டுள்ளதாக அமெரிக்க பூகோளவியல் அளவையியல் திணைக்களளைத்தைச் சேர்ந்த பூகற்பவியலாளர் கென்னத் ஹுட்னட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இத்தாலியிலுள்ள பூகோள பௌதிகவியல் மற்றும் எரிமலையியல் தேசிய நிறுவகத்தின் தகவல்களின்படி நேற்று ஏற்பட்ட 8.9 ரிச்டர் அளவிலான பூகம்பத்தினால் பூமி அதன் அச்சில் சுமார் 4 அங்குலம் (10 சென்றிமீற்றர்) நகர்ந்துள்ளது.

ஜப்பானின் கிழக்குக் கரையோரத்திற்கு அண்மையில் ஏற்பட்ட இப்பூகம்பத்தினாலும் அதன் விளைவான சுனாமியினாலும் சுமார் 1000 பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 30 அடி உயரமான சுனாமி அலை வீசியதால் ஜப்பானின் பல நகரங்களில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

பசுபிக் சமுத்திரத்தின் கீழுள்ள புவித்தட்டில் 400 கிலோமீற்றர் நீளமும் 160 கிலோமீற்றர் அகலமும் கொண்ட பகுதியில் பகுதியில் பிளவு முறிவு ஏற்பட்டதால் இப்பூகம்பம் நிகழ்ந்தது. இதனால் மேற்படி புவிதட்டு பகுதி 18 மீற்றர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 140 வருடங்களில் ஜப்பானில் ஏற்பட்ட பாரிய பூகம்பம் இதுவாகும்.

வலிமையைப் பொறுத்தவரை, 2004 ஆம் ஆண்டு சுமார் இரண்டரை லட்சம் பேர் இறப்பதற்கு காரணமான இந்தோனேஷியாவின் ஆச்சே பிராந்தியத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு நேற்று ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பமும் ஏறத்தாழ சமனானது எனத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி இந்தோனேஷிய பூகம்பம் 9.1 ரிச்டர்அளவுடையதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Tags : ஜப்பான், 8, அடி, தூரம், நகர்த்தப்பட்டுள்ளது, ஜப்பான் 8 அடி தூரம் நகர்த்தப்பட்டுள்ளது, jappaan 8 adi thooram nakarththappaddullathu

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]