மொழித்தெரிவு :
தமிழ்
English

சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவு

chuki chivam avarkalin chorpoalivu anpu nanpar chuki chivam avarkalin chorpoalivoonraich chevimaduththaen. appappaa ! eththanai unamaikalukku uyir koduththu ithayaththil......

சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவு
17மீண்டுமொருமுறை உள்ளத்தில் அதிரும் உணர்வலைகள் ஒலி எழுப்ப அதை முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொன்னான நேரம்.

அன்பு நண்பர் சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவொன்றைச் செவிமடுத்தேன். அப்பப்பா ! எத்தனை உணமைகளுக்கு உயிர் கொடுத்து இதயத்தில் நர்த்தனமாட விட்டு விட்டது. சலனமில்லாது இருக்கும் குட்டை ஒன்று இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் அதனடியில் எத்தனையோ அழுக்குகள் படிந்து போய் இருக்கும் ஆனால் நாம் பார்க்கும் சமயத்தில் அக்குட்டை சலனமில்லாது இருப்பதனால் அது தெளிவாக , அமைதியாக இருக்கிறது என்று எண்ணி விடுகிறோம்.

ஆனால் அதே குட்டையினுள் ஒரு சிறு கல்லை விட்டெறியுங்கள் வலயம், வலயமாக அது சுழன்றோடத் தொடங்கும் போது அடியில் படிந்திருக்கும் அழுக்குகளும் கொஞ்சம் மிதந்து தம்மை அடையாளம் காட்டத் தொடங்கும்.

அதே போலத்தான் சில கருத்துக்களில் உறைந்துள்ள உண்மை என்னும் கல் எமது மனம் என்னும் குட்டையினுள் உருவாக்கும் சிந்தனை வட்டங்கள் எம்முள் புதைந்திருக்கும் பல விடயங்களை வெளியே கொண்டு வருகிறது.

அறிவு, உணர்ச்சி இவை இரண்டும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் வகிக்கும் பங்கு ஒன்றில் ஒரு மனிதனைச் செம்மைப்படுத்துகிறது இல்லையேல் அவனைச் சிறுமைப்படுத்துகிறது. எமது மனதில் எப்போதுமே அறிவுக்கும், உணர்ச்சிக்கும் போர் நடந்து கொண்டேயிருக்கிறது.

இதன்போது உணர்ச்சிக்குத்தான் வெற்றி கிடைக்கிறது. ஏனென்றால் இந்த உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி அறிவுக்கு வெற்றி ஏற்படும் நிலை ஏற்பட்டுவிட்டால் நாம் சாதாரண மனித வாழ்க்கையிலிருந்து மேம்பட்டவர்களாகி விடுகிறோம்.

உணர்ச்சியின் வெற்றியின் பிரதிபலிப்பு பல அவசரமான , சிந்தனைத் தெளிவற்ற, தவறான செய்கைகளுக்கு வழி சமைத்து விடுகின்றன. ஆனால் அறிவின் விகிதம் அதிகரிக்கும் சமயங்களில் நாம் உணர்ச்சியின் பிரதிபலிப்பினால் எடுத்த முடிவுகளுக்காக வேதனைப்படுகிறோம்.

ஆனால்,

மீண்டும் உணர்ச்சியின் வெற்றியினால் இந்நிலை நீடிப்பதில்லை. இது சாதாரண் மனித வாழ்க்கையின் விளக்கமாகிறது.

எம் மாகவி பாரதி இதைத்தான் தெட்டத் தெளிவாக , அறுதியாக தனது கவிதையில் வடித்து விட்டான். நான்கே நான்கு வரிகளில் அறிவிற்கும் , உணர்ச்சிக்கும் நடக்கும் போராட்டத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறான்

"மோகத்தைக் கொண்றுவிடு - அல்லாலென்றன
் மூச்சை நிறுத்தி விடு "

என்கிறான் பாரதி. ஆமாம் அவனுக்கே தனது உணர்ச்சிகளுக்கும், அறிவிற்கும் நடக்கும் போர்ராட்டத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் போய் விடுகிறது. அழுத்தம், திருத்தமாக அனைவர்க்கும் பொதுவான அந்த இறையிடம் வேண்டுகோள் விடுக்கிறான.

அடுத்து இரு வரிகளைப் பார்த்தால்,

""சிந்தை தெளிவாக்கு - அல்லாலிதை
செத்த உடலாக்கு "

என்ன அழுத்தமான வேண்டுகோள். மனதில் தோன்றும் இந்த அறிவுக்கும், உணர்ச்சிக்கும் இடையிலான் போராட்டத்தினால் சிந்தை குழப்பமுற்று இருக்கும். தீர்க்கமாக எம் பாரதி கூறுகிறான் இத்தகைய குழப்பம் தாங்க முடியாமலிருக்கிறதே சிந்தையைத் தெளிவாக்கு அல்லாவிட்டால் இந்த யாக்கையை மாய்த்து விடு என்கிறான்.

இதையே நண்பர் சுகி சிவம் மிக அழகாகச் சொல்கிறார். கோபுரத்தை எடுத்துக் கொண்டால் அடி அகலமாகவும் மேலே செல்லச் செல்ல ஒடுக்கமாகவும் செல்கிறது. வாழ்க்கையின் அடிமட்டத்தில் சாதாரண உணர்ச்சியின் கொந்தளிப்புக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நாமே எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறோம், இந்த உணர்ச்சிக்கும் அறிவிற்குமான போராட்டத்தில் அறிவுக்கு வெற்றியை ஏற்படுத்தும் உயர்ந்த மனதையுடையோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே சென்று அதியுயர் நிலையிலிருப்போர் சொற்ப அளவிலேயே இருக்கிறார்கள்.

இந்தச் சுழல்களினால் எழும்ப்பும் வினாக்களுக்கு விடைகள் காணும் தேடல்களே எம் மனதில் தெளிவை ஏற்படுத்தும் காரணிகளாகின்றன.

இத்தேடல்களின் வழி வாழ்க்கையில் விழுந்திருப்போருக்கு கைகொடுத்து உயர்த்தும் போது எமது உணர்ச்சிகள் புடம் போடப்படுகின்றன. எம்மை நாமே சோதித்துக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கின்றன.

மனிதன் தெய்வமாக மாற முடியாது ஆனால் மனிதருள் மாணிக்கமாக மாற முயற்சிக்க வேண்டியது அவனது கடமை.

மீண்டுமொருமுறை சத்தமிடும்வரை

அன்புடன் சக்தி


மேலும் Facebook

Tags : சுகி, சிவம், அவர்களின், சொற்பொழிவு, சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவு, chuki chivam avarkalin chorpoalivu

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]