மொழித்தெரிவு :
தமிழ்
English


மூன்று வயதுக் குடிகாரன்! பிரிட்டனில்

moonru vayathuk kudikaaran! piriddanel aaru maathankalukku maelaaka thodarnthu ivanukku mathu kodukkappaddullathu.

மூன்று வயதுக் குடிகாரன்! பிரிட்டனில்

பிரிட்டனின் மிகவும் வயது குறைந்த குடிகாரன் என்று நம்பப்படும் மூன்று வயதுச் சிறுவனுக்கு மதுபோதைக்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இன்று இந்தத் தகவல் வெளியிடப்பட்டது. மேற்கு மிட்லான்ட் பகுதியைச் சேர்ந்த இந்தச் சிறுவனின் பெயர் வெளியிடப்படவில்லை.

ஆறு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து இவனுக்கு மது கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறுவனிடம் தள்ளாட்டம், உளறல்கள் என்பனவும் காணப்பட்டுள்ளன.

மூளை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகின்றது. 2008க்கும் 2010க்கும் இடையில் பிரிட்டனில் 12 வயதுக்குக் குறைவான 13பேருக்கு மதுப்பழக்கம் இருந்தமை தெரியவந்துள்ளது.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

இதே இரண்டாண்டு காலப் பகுதியில் 12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட 106 பேருக்கு மதுப் பழக்கத்துக்காக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் 74 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டும் உள்ளனர்.

ஒரு சில வாரங்களுக்கு முன் டன்டீ பகுதியைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுமிக்கு மதுப்பழக்கம் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்தான் வயது குறைந்த மதுப்பழக்கம் உள்ளவர் என்று அப்போது கருதப்பட்டது. ஆனால் இப்போது இந்த மூன்று வயதுச் சிறுவனின் நிலை அதிகாரிகளை மேலும் ஆச்சரியமடைய வைத்துள்ளது


மேலும் செய்திகள்

Tags : மூன்று, வயதுக், குடிகாரன், பிரிட்டனில், மூன்று வயதுக் குடிகாரன்! பிரிட்டனில், moonru vayathuk kudikaaran! piriddanel

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]