மொழித்தெரிவு :
தமிழ்
English


தன்னடக்கம்

thannadakkam ethaiyum naam konduvaravillai, ethaiyum eduththuch chellappoavathumillai. ethaiyum puthithaakaarikirom anri ethaiyum naam uruvaakki vidavum illai.
தன்னடக்கம்

அறிவை , அதன் பலனை பிறருக்கு பகிர்ந்து கொள்ளாத அறிவாளிகளை யாரும் மதிப்பதும், விரும்புவதுமில்லை. யாருக்கும் பயன் படாத பணத்தை காக்கும் பணக்காரனைப் பற்றி தெரிந்து கொள்ள திருடனைத் தவிர யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. புகழ் வரும்பொது தன்னடக்கத்தை பேண வேண்டும். புகழ் மமதையை தருமானால் மமதை விரைவில் அந்த புகழை அழித்து விடும்.

கல்வியும் சிந்தனையும் ஒருவனுக்கு சாபக்கேடாக கூட மாறலாம். கல்வியும் சிந்தனையும் ஒருவனை, அவனது உலகத்தை விரிவு படுத்துகிறது. அதோடு சேர்ந்து அவனது ஈகோவும் அதாவது "தான்" என்ற அகந்தையும் வளர்கிறது. பிறருக்கும் அவனுக்கும் இடையே முதலாளி தொழிலாளி போன்ற இடைவெளி அதிகரிக்கிறது. தனித்தனி தீவுகளாக மாறுகிறார்கள். இதனால் தான் கற்றவர்கள் ஒத்துப்போவதில்லை. படித்தவர்கள் தான் அதிகம் விவாகரத்து செய்கிறார்கள். கற்றவர்கள் தான் அதிகம் குழம்புகிறார்கள். உதாரணம் பாருங்கள் நாட்டு வைத்தியத்தில் எல்ல நோயும் வாதம், பித்தம், கபம் என்பதில் அடங்குகிறது. ஆங்கில மருத்துவத்தில் இதற்கு எத்தனை பிரிவுகள் தேவைப்படுகிறது. ஒரு கணினியியல் இன்று எத்தனை பிரிவுகளில் அறியப்படுகிறது. எத்தனை வித ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் உள்ளன.

பிறர் பேச்சை காது கோடுத்து கேட்பதும் பணிவு தான். தன்னடக்கம் உடையவனது அதிகாரம் மந்திரக்கோல் போன்றது. பணிவுள்ளவன் தான் சிறந்த தலைவனாக முடியும். அரசு இயந்திரத்தின் பல் சக்கரங்கள் பலருக்கும் பதவி மட்டும் தான் அடையாளம். அதிகார போதையில் பொதுமக்களிடம் பணிவின்றி நடந்து கொண்டவர் பலரும் பதவி போன பின் கிழிந்த துணி தரை துடைக்க போவது போல் ஆகி விடுகிறர்கள். ரவுடிகள் வாழ்வின் பிற்பகுதியில் அனாதை பிணமாகிறார்கள்.

சில பெரிய வியாபார ஸ்தாபனங்களில் முதலாளியே கஸ்டமர்களை கும்பிட்டு வரவேற்பார்கள். அல்லது அதற்கென்றே தனி ஆள் நியமித்திருப்பார்கள். அவர்கள் போடும் கும்பிடுகள் தான் அந்நிறுவனத்தின் மூல தனம். வாடிக்கையாளர்களை மதிக்காத எந்த கம்பனியும் உருப்பட்டதில்லை. customer is always right என்பதும் இது தான்.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

தன்னைச் சுற்றித்தான் உலகம் எனும் மாயையை ஒழித்து, உலகத்தில் தான் ஒரு பாகம் எனும் அகந்தயற்ற நிலை மிக உயர்வான நிலை. எதையும் நாம் கொண்டுவரவில்லை, எதையும் எடுத்துச் செல்லப்போவதுமில்லை. எதையும் புதிதாகஅறிகிறோம் அன்றி எதையும் நாம் உருவாக்கி விடவும் இல்லை. நம் உலகத்தில் தான் மாற்றங்களை ஏற்படுத்துகிறோம். பூமி சுழல்வதை நிறுத்தும் சக்தி நமக்கில்லை பின் ஏன் அகந்தை?

இறைவன் இருக்கிறான் என நம்புவதும் இல்லை என்று நம்புவது அவரவர் நம்பிக்கை. அவரவர் நிலை பாடு .இரண்டுமே சரிதான். அது இறைவன் என்று கொண்டாலும் சரி நம்மை சுற்றியுள்ள உலகம் என்று கொண்டாலும் அந்த மாபெரும் சக்திக்கு நம் வாழ்வின் போக்கை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு உண்டு என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. அந்த சக்தியிடம் பணிவு காண்பிக்க வேண்டும். இந்த செல்வமும் புகழும் இறைவன் தந்தது அது இறைவனுக்கே சொந்தம் என்பது பணிவின் சின்னம். சந்தோசத்தை, வெற்றியை உலகத்தோடு பகிர்ந்து கொள்ளவேண்டும். இதில் இறைவன் என்பது நான் நீங்கலாக உள்ள உலகம் எனவும் பொருள் கொள்லலாம். இப்படி தன்னை சுற்றியுள்ளதை பெருமைப்படுத்தும் தன்னடக்கமான உள்ளம் ஜொலிக்கும் . காரணம் தன்னை சுற்றியுள்ள உலகத்தின் பிரதிபலிப்பு தான் "தான்" என்பது.

எல்லா மதங்களும் முதலில் பணிவை, கீழ் படிதலை அல்லது அகந்தை அறுக்கத்தான் போதிக்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்தே கடைபிடிக்க வேண்டிய முதன்மை பண்பு இது தான்.இந்த ரகசியத்தை புரிந்து கொள்ளாதவர் வாழ்க்கைப் பயணம் மிக கஸ்டமான பாதையில் .


மேலும் சிறப்புக் கட்டுரைகள்

Tags : தன்னடக்கம், தன்னடக்கம், thannadakkam


Follow saalaram14 on Twitter
Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]