மொழித்தெரிவு :
தமிழ்
English

இங்கிலாந்திலும் உணவுக்கு கையேந்துபவர்கள்!

inkilaanthilum unavukku kaiyaenthupavarkal! unavup poaddalankalai anuppi varum oru tharma nethiyaththukku tharpoathu thanakku arukil ulla inkilaanthin then maerkup pakuthiyil kavanam cheluththa vaendiya nelai aerpaddullathu.

இங்கிலாந்திலும் உணவுக்கு கையேந்துபவர்கள்!
12கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் வறுமையால் பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு உணவுப் பொட்டலங்களை அனுப்பி வரும் ஒரு தர்ம நிதியத்துக்கு தற்போது தனக்கு அருகில் உள்ள இங்கிலாந்தின் தென் மேற்குப் பகுதியில் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஓக்ஹெம்ப்டன் நகரம்தான் இந்த தர்ம நிதியத்தின் கவனத்தை ஈர்த்துள்ள நகராகும்.

காரணம் இங்கு சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் தங்களது அன்றாட உணவுத் தேவைக்குக் கூட வாராந்தம் அங்குள்ள பெப்டிஸ்ட் ஆலயத்தில் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏறபட்டுள்ளது.

இந்தப் பகுதியில் இயங்கிய மூன்று தொழிற்சாலைகள் மூடப்பட்டு 350 பேர் வேலையுமின்றி வேறு கதியும் இன்றி மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஓக்ஹெம்ப்டன் நகர மேயர் மைக்கல் மோர்ஸ் மற்றும் நகர சபை உறுப்பினர் கேபிக்லே ஆகியோர் இந்த மக்களுக்குத் தேவையான உணவைத் திரட்டுவதில் ஈடுபட்டுள்ளனர். இந்த நகரத்தின் குடும்பங்கள் வாழ வழியின்றி அன்றாடம் வயிற்றோடு போராட்டம் நடத்தி வருவதாக இவர்கள் கூறுகின்றனர்.

இவர்களுக்கான நலன்புரிக் கொடுப்பனவுகள் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. அதற்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.

ஆனால் அதற்குள் அவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் சென்றுவிட்டனர். டஸில் டிரஸ்ட் என்ற தேசிய தர்ம நிறுவனம் தான் இவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது. இந்த உதவித்திட்டத்தின் ஒரு அங்கமாக ஒரு உணவு வங்கியை இந்த அமைப்பு திறந்துள்ளது.

இந்த அமைப்பு பொதுவாக இதுவரை ரொமேனியா மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகளில் உள்ள வறியவர்களுக்கே உதவி வந்துள்ளது. தற்போது ஓக்ஹெம்ப்டன் நகரைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்குத் தேவையான வாராந்த உதவிகளை வழங்க இந்த அமைப்பு முன்வந்துள்ளது.

அன்றாடம் இங்கு உதவி தேவைப்படுகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றதால், ஒரு மோசமான நிலைமை இங்கு உருவாகிவருவதாக இந்த அமைப்புத் தெரிவித்துள்ளது. இந்த நகரம் சுமார் 7000 சனத்தொகையைக் கொண்டது.

அதில் 700 பேர் மட்டில் தற்போது வேலையற்றவர்களாக உள்ளனர். இங்கு இயங்கிவந்த பால் உற்பத்தி,சொக்கலேட் உற்பத்தி மற்றும் உணவு உற்பத்தித் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

இங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கான இருவார கொடுப்பனவுகளும் இந்த நிறுவனங்களால் வழங்கப்படவில்லை. இதுவே இங்கு நிலைமையை மோசமாக்கியது


மேலும் செய்திகள்

Tags : இங்கிலாந்திலும், உணவுக்கு, கையேந்துபவர்கள், இங்கிலாந்திலும் உணவுக்கு கையேந்துபவர்கள்!, inkilaanthilum unavukku kaiyaenthupavarkal!

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]