மொழித்தெரிவு :
தமிழ்
English

இலங்கையில் பரவும் அமிலமழை வதந்தி.

ilankaiyil paravum amilamalai vathanthi. jappaanel pukuchimaa anu ulaikal vediththuch chithariyathaal paravum kathir veechchinaal chirilankaavil amila malai peyyum enru paravalaana vathanthikal paravi varukinrana. aanaal iththakaiya thakavalkalil unmai ethuvum illai enrum

இலங்கையில் பரவும் அமிலமழை வதந்தி.
1 ஜப்பானில் புகுசிமா அணு உலைகள் வெடித்துச் சிதறியதால் பரவும் கதிர் வீச்சினால் சிறிலங்காவில் அமில மழை பெய்யும் என்று பரவலான வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் இத்தகைய தகவல்களில் உண்மை எதுவும் இல்லை என்றும் ஜப்பானிய அணுஉலைகளில் ஏற்பட்ட வெடிப்புக்களால் சிறிலங்காவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று சிறிலங்காவின் அணுசக்தி அதிகாரசபைத் தலைவர் பேராசிரியர் விமலதர்ம அபேயவிக்ரம தெரிவித்துள்ளார். கொழும்பில் அணுசக்தி அதிகாரசபை செயலகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

அணுஉலை வெடிப்புகளால் சிறிலங்காவுக்கு உடனடியாக எந்தப் பாதிப்புக்களும் இல்லை. எனவே மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை, எனினும், முற்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கையாக இன்று தொடக்கம் அணுக் கதிர்வீச்சுத் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Tags : இலங்கையில், பரவும், அமிலமழை, வதந்தி, இலங்கையில் பரவும் அமிலமழை வதந்தி., ilankaiyil paravum amilamalai vathanthi.

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]