மொழித்தெரிவு :
தமிழ்
English

கள்ளக்காதலால் நண்பரின் மனைவி கொலை

kallakKadhalaal nanparin manaivi kolai kallakKadhal vivakaaraththil nanparin manaivi kodooramaaka kolai cheyyappaddaar. ithu thodarpaaka palvaeru penkalai vachappaduththiya Kadhal mannan kaithu

கள்ளக்காதலால் நண்பரின் மனைவி கொலை
3 கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பரின் மனைவி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பல்வேறு பெண்களை வசப்படுத்திய காதல் மன்னன் கைது செய்யப்பட்டார். வடபழனி ஒட்டகப்பாளையம் 3வது தெருவை சேர்ந்தவர் அன்பு சேகர். இவரது மகன் ரமேஷ் பாபு (32). கால்டாக்சி டிரைவர். இவருக்கு 2 மனைவிகள். இரண்டு பேரும் பிரிந்து சென்று விட்டனர். தற்போது, பெற்றோர் வீட்டில் மேல் மாடியில் தனி அறை கட்டி ரமேஷ் பாபு தங்கியுள்ளார்.

இவரது நண்பர் கோடம்பாக்கம் டிரஸ்ட் புரத்தை சேர்ந்த சுரேஷ் கண்ணன். இவரது மனைவி ஜெயலட்சுமி (28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுரேஷ் கண்ணன் வீட்டிற்கு ரமேஷ் பாபு அடிக்கடி வருவார். இதில், ஜெயலட்சுமிக்கும் ரமேஷ் பாபுவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. காதலர்கள் வீட்டிற்கு தெரியாமல் பல்வேறு இடங்களுக்கு சுற்றித்திரிந்துள்ளனர்.

இந்த தொடர்பு சுரேஷ் கண்ணனுக்கு தெரியவந்ததால் ஆத்திரம் அடைந்தார். மனைவி ஜெயலட்சுமியை வீட்டை விட்டு அடித்து விரட்டியுள்ளார். ஜெயலட்சுமி திண்டிவனத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். இருப்பினும் ரமேஷ் பாபுவை சந்திக்க மாதம் ஒரு முறை வந்து சென்றுள்ளார். ரமேஷ்பாபுவுடன் தங்கிவிட்டு மறுநாள் புறப்பட்டு செல்வாராம்.

நேற்று முன்தினம் இரவு ரமேஷ் பாபு வீட்டிற்கு ஜெயலட்சுமி சென்றார். திடீரென அவர்களுக்குள் மோதல் வெடித்தது. ஆத்திரம் அடைந்த ரமேஷ் பாபு அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து ஜெயலட்சுமியை பலமாக தாக்கியுள்ளார். தலையில் காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பயந்துபோன ரமேஷ் பாபு நேற்று காலை வடபழனி போலீசில் சரணடைந்தார். உதவி கமிஷனர் நந்தகுமார், இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப் பதிவு செய்து ரமேஷ் பாபுவை கைது செய்தனர்.

தொடர்பை துண்டிப்பதாக மிரட்டியதால் கொலை
ரமேஷ்பாபு போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலம் குறித்து போலீசார் தெரிவித்ததாவது: மாதத்திற்கு ஒரு முறை ஜெயலட்சுமி என் வீட்டிற்கு வருவார். நாங்கள் தனிமையில் இருப்போம். நேற்று (நேற்று முன்தினம்) இரவும் வழக்கம்போல ஜெயலட்சுமி வந்தார். இரவு முழுவதும் உல்லாசமாக இருந்தோம். பின்னர், தூங்கி விட்டேன். அதிகாலையில் கண் விழித்த ஜெயலட்சுமி மீண்டும் அழைத்தார். எனக்கு உடல் நிலை சரியில்லை நாளை வைத்துக் கொள்ளலாம் என்று கூறினேன்.

இதனால், ஆத்திரம் அடைந்த ஜெயலட்சுமி நீ வரவில்லை என்றால் உனது நட்பை துண்டித்து வேறு ஒருவருடன் சென்று விடுவேன் என்று மிரட்டினார். இதில், இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. என்னுடன் இல்லாமல் வேறு யாருடனும் செல்லக்கூடாது என்று கருதி அவளை இரும்பு கம்பியால் தாக்கினேன். துடிதுடித்த அவர் சிறிது நேரத்தில் இறந்தார். பின்னர், விடியும் வரை அவர் அருகிலேயே படுத்து தூங்கினேன். அதன் பிறகு நடந்ததை எண்ணி கவலைப்பட்டு போலீசில் சரண் அடைந்தேன். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்

Tags : கள்ளக்காதலால், நண்பரின், மனைவி, கொலை, , கள்ளக்காதலால் நண்பரின் மனைவி கொலை , kallakKadhalaal nanparin manaivi kolai

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]